மதுரையில், தன், 97 வயது வரை வாழ்ந்து, மக்கள் சேவை செய்த சுதந்திர போராட்ட வீரர், மாயாண்டி பாரதி; பிப்ரவரி, 2015ல் காலமானார். தியாகிகளின் கடைசி வாரிசு மாயாண்டி பாரதி. சுதந்திர வேள்விக்காக, 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
ஒருமுறை, வெள்ளையரை எதிர்த்து போராடியதில், கைது செய்யப்பட்டு, நீதிபதி முன் நிறுத்தப்பட்டார், மாயாண்டி பாரதி. அவரைப் பார்த்த வெள்ளைக்கார நீதிபதி, 'உனக்கு சொத்து உள்ளதா...' எனக் கேட்டார்.
உடனே, 'இருக்கிறது; மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மங்கம்மா சத்திரம் எல்லாமே என் சொத்து தான்...' என்றாராம், மாயாண்டி பாரதி!
— ஜோல்னாபையன்.