நம் நாட்டில், வெள்ளையர்களின் ஆட்சி இருந்தபோது, அவர்களின் குடியிருப்பு பகுதிகளை இந்தியர்கள் கடந்து செல்ல வேண்டுமென்றால், தரையில் கைகளை ஊன்றி, தவழ்ந்து செல்ல வேண்டும். அப்படி யாரேனும் அலட்சியமாக நடந்து சென்றால், அவர்களுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்படும். இதுதான், வெள்ளையர் கால சட்டம். பதினாறு வயது சிறுவன் ஒருவன், தன் சித்தியோடு சென்றபோது, ஓர் இந்தியர், கைகளை ஊன்றி, நாயைப் போல் செல்வதை பார்த்தவன், கோபம் கொண்டு, துணிச்சலாக மேடையேறி, எதிர்ப்பு குரல் கொடுத்தான். அதை பார்த்த ஆங்கிலேயர், அவனை கைது செய்து, துாக்கு தண்டனை விதித்தனர். அவன் இறப்பதற்கு முன், தன் சித்திக்கு கடிதம் எழுதினான். அதில், 'நான் சாவதற்கு அஞ்சவில்லை; உனக்கு குழந்தை பிறக்கும். பிறந்ததும், அந்த குழந்தையின் கழுத்தை தடவிப் பார். அதில், துாக்குக் கயிற்றின் அடையாளம் இருக்கும்; நானே திரும்ப வந்து பிறப்பேன்...' என்று அந்த கடிதம் நீண்டிருந்தது. அந்த சிறுவனின் பெயர், குதிராம் போஸ்; இந்திய சுதந்திரத்திற்காக, சிறு வயதில் துாக்கில் தொங்கிய குதிராம் போஸின் வரலாறு எத்தனை இந்தியர்களுக்கு தெரியும்! — ஜோல்னாபையன்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
அந்த சிறுவனுக்கு இருந்த வீரம் மற்றும் விவேகம் அன்று இருந்த பாட முறை அப்படி. வாழ்க்கையை பற்றி சொல்லி கொடுத்தார்கள், கூட்டு குடுமும்பாய் வாழ்ந்தார்கள். இன்று 'Lord Labakudas Maculay' பாட முறை ஒப்பித்து லட்ஷத்தில் ஒருத்தர் CEO 'வாக வருகிறார் மற்ற மக்கள் எல்லாம் மாடு மாதிரி உழைத்து, கடனில் மூழ்கி அவதி படுகிறார்கள். அது மட்டுமே? அன்று வெள்ளைக்காரன் பொருளை கொள்ளை அடிக்க வந்தான். இன்று மக்கள் purse'i கொள்ளை அடிக்க வந்துட்டான். அதான் WALLMART மற்றும் IKEA இங்கே வந்து கடையை விரித்து விட்டார்கள். அப்போ இங்கே உள்ள சிறு தொழில்கள் எல்லாம் துடி துடித்து செத்து விடும். இந்த எளிய காரணம் ஒரு அரசியல் வியாதி மர மண்டைக்கு குடுவா ஏறவில்லை?
இந்த வங்கம் தந்த தங்கம் மட்டுமல்ல நாடெங்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான சாமானியர்கள் அடிமை விலங்கை உடைத்தெறிய புறப்பட்டிருக்கிறார்கள். வடக்கில் பகத் சிங் ராஜகுரு சுகதேவ் தவிர அவர்களது குருவான சந்திர சேகர் ஆஜாத், இங்கிலாந்தின் இந்திய பொறுப்பு செயலராக இருந்த கர்சன் வீலியை லண்டனில் சுட்டுக் கொன்ற மதன்லால் திங்க்ரா, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து ஐரோப்பா முழுவது திரிந்து பின் தொடர்ந்து சென்று ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு காரண கர்த்தாவாக இருந்த மைக்கேல் ஓ ட்வஅயர் என்ற அதிகாரியை சுட்டுக் கொன்ற உதம் சிங், சிட்டாகாங் ஆயுத கிடங்கை சூறையாடிய சூர்யா சென் மாஸ்டார்ஜி , கல்பனா தத்தா...ம்ம் அப்புறம் நம்ம ஊர் தென்காசி வீர வாஞ்சி அவனது கூட்டாளிகளில் முக்கியமான எருக்கூர் நீலகண்ட பிரமச்சாரி (இந்த மனிதர் தனி ஒருவராக ஐந்தாயிரம் பேர் அடங்கிய மறவர் படையை திரட்டி அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிப்பதற்காக தென் மாவட்ட கிராமங்களில் மாறு வேடத்தில் அலைந்து கொண்டிருந்துவிட்டு 14 ஆண்டுகள் சிறை வாசத்துக்குப்பிறகு பெங்களூரு நந்தி மலை சாரலில் ஆசிரமம் ஏற்படுத்திக் கொண்டு துறவியாகிவிட்டார்)...இது போல எத்தனையோ தியாக தீபங்கள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவர்கள் பற்றி நம் பள்ளி பாட புத்தகங்களில் ஒரு வரி கூட வராமல் வெற்றிகரமாக இருட்டடிப்பு செய்துவிட்டு காந்தி-நேரு- காங்கிரஸ் மட்டும்தான் சுதந்திரத்துக்கு பாடுபட்டார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது யார்? வாசகர்கள் சிந்திக்க வேண்டும். ஜெய் ஹிந்த்
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.