ரஜினிக்கு அரசியல் மோகம் ஏற்படும்போதெல்லாம், 'அரசியலில் குதிக்கலாமா, வேண்டாமா...' என்று, பூவா - தலையா போட்டு பார்ப்பார். அப்போது, நண்பர் ஒருவரிடம் யோசனை கேட்பதுண்டு. அந்நண்பரோ, 'அரசியலில் குதிக்கப் போவது நீங்கள்; கால் உடையப் போவதும் உங்களுக்கு தான். அதுக்கு, நான் என்ன சொல்வது...' என்பார்.
யார் இந்த நண்பர்?
'ஜனநாயகத்துக்கு ஆபத்து; நீதிமன்றங்களில் உள்ள சில நீதிபதிகள் கடமை தவறி செயல்படுகின்றனர்...' எனக் கூறி, நாட்டையே கதிகலங்க வைத்தவரும், சமீபத்தில் ஓய்வு பெற்ற, சுப்ரீம் கோர்ட் நீதிபதியுமான செலமேஸ்வர் தான், அந்த நண்பர்.
ஆந்திர முதல்வராக, என்.டி.ராமராவ் இருந்தபோது, அவரது வழக்கறிஞராக இருந்தார், செலமேஸ்வர். என்.டி.ஆரை சந்திக்க ரஜினி சென்றபோது, இவர் பழக்கமாகி, நண்பரானார்.
- ஜோல்னாபையன்.