மிளகாய் மூட்டை அருகில் சென்றாலே பலருக்கு கமறலில் தும்மல் வரும். ஆனால், சீனாவின் ஹுனான் மாவட்டத்தில் உள்ள நிங் சியாங் பகுதியில், சமீபத்தில், மிளகாய் சாப்பிடும் போட்டி நடந்தது. மிளகாய் குவியலில் படுத்து, ஒரு நிமிடத்தில், யார் அதிகமான மிளகாய்களை சாப்பிடுகின்றனரோ, அவர்களுக்கு, 24 கேரட் தங்க நாணயம் பரிசு!
ஒரு நிமிடத்தில், 50 மிளகாய்களை சாப்பிட்டு, எந்த தும்மலும், கமறலும் இல்லாமல் பரிசை தட்டிச் சென்றார், படத்தில் உள்ள போட்டியாளர்!
— ஜோல்னாபையன்.