ரயில் நிலையங்களில், ஆண்கள் மட்டுமே சிகப்பு சட்டை அணிந்து, 'போர்ட்டர்'களாக பணியாற்றி வந்த நிலையில், ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில், மஞ்சுளா தேவி என்ற பெண், போர்ட்டராகியுள்ளார்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான இவரின் கணவர், போர்ட்டராக இருந்தார். திடீரென, அவர் இறந்தபோது, போர்ட்டர் வேலைக்கு மனு போட்டார், மஞ்சுளா தேவி. ஆனால், இவரை வேலைக்கு எடுக்க தயக்கம் காட்டியது ரயில்வே நிர்வாகம். இப்போது, அவருக்கு சிகப்பு சட்டை போட அனுமதித்துள்ளதுடன், 112 பெண்களுக்கு, போர்ட்டர் லைசென்ஸ் வழங்கி, பெண்களையும் போர்ட்டர்களாக நியமித்துள்ளது, ரயில்வே நிர்வாகம்.
— ஜோல்னாபையன்.