ஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

09 செப்
2018
00:00

அவதாரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது விஷ்ணு அவதாரங்கள் மட்டுமே.
ஆனால், முழுமுதற் கடவுளாக வணங்கும் விநாயகரும் அவதாரங்கள் எடுத்துள்ளார். ஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்...
வக்ரதுண்ட விநாயகர் வக்ரதுண்ட என்றால், வளைந்த தும்பிக்கை என்று அர்த்தம். இந்த அவதாரத்திற்கு, அவர் சிங்கத்தின் மீது வீற்றிருப்பார்.
காசியை, துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டு வந்தான். அவனை அழிக்க சக்தி தேவியை நோக்கி தேவர்கள் தவமிருந்தனர். அதனால், மனமிரங்கிய சக்தி, வக்ரதுண்ட விநாயகரைத் தோற்றுவித்தாள். சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய வக்ரதுண்டர், துராசுரனை அழித்து, தேவர்களுக்கு அருள்புரிந்தார்.
சிந்தாமணி கணபதி அபிஜித் என்ற அசுரனுக்கும், குணவதிக்கும் இறையருளால் பிறந்த கணன் என்பவன், கபிலரை துன்புறுத்தி, அவரிடம் இருந்து சிந்தாமணியைக் கவர்ந்தான். இதனால், வருந்தி, விநாயகரை மனமுருகி வழிபட்டார் கபிலர். அவருக்கு அருள்புரிய, திருவுளம் கொண்ட பிள்ளையார், கணனை அழித்து, சிந்தாமணியை மீட்டுக் கொடுத்தார்.
கஜானனர் பார்வதி, பரமேஸ்வரரிடம் அவதாரம் செய்து கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகரை, கஜானனர் எனப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன. சிந்துாரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.
விக்ன விநாயகர் வரேண்யன் - புஷ்பவதி என்ற தம்பதியரிடம் தோன்றி விக்னங்களை அகற்றியவர் விக்ன விநாயகர். இவர், காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர்.
பாலசந்திரர் தேவர்களை அடக்கி ஆண்ட அநலன் என்ற அசுரனை விழுங்கினார், விநாயகர். அதனால், உண்டான வெம்மை நீங்க, மிக குளிர்ச்சியான சந்திரனை நெற்றியில் அணிந்து, பாலசந்திரர் என்று பெயர் பெற்றார்.
துாமகேது புகை வடிவான அசுரன் ஒருவனை அழிப்பதற்காக அவதரித்தவர், துாமகேது விநாயகர். மாதவன் - ஸுமுதா என்ற அரச தம்பதியருக்குப் பிள்ளையாகத் தோன்றி, துாம கேதுவை வதைத்தார், இந்த பிள்ளையார்.
கணேசர் பலி என்னும் அரக்கனைக் கொல்ல, கணங்களுக்குத் தலைவனாக வந்து வெற்றி கண்டதால் கணேசர் என்ற திருப்பெயர் பெற்றார், பிள்ளையார்.
கணபதி கஜமுகாசுரனை வென்றவராதலால், இப்பெயர் ஏற்பட்டது.
மகோற்கடர் காசியப முனிவரின் பிரார்த்தனையால், அதிதியிடம் பிறந்தவர் மகோற்கடர். காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு, நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால், உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.
துண்டி கணபதி துராசதன் என்ற அரக்கனை அழிக்க, உமையவளின் திருவருளால் அவதரித்தவர், துண்டி கணபதி.
வல்லப கணபதி மரீசி முனிவரின் மகள் வல்லபையை மணந்து, வல்லப கணபதி என்று பெயர் பெற்றார்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X