அம்மனுக்கு, 'சாக்லெட்!'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

கடவுள் மீது வைக்கும் பக்தியை விட, அவர் மீது வைக்கும் அன்புக்கு சக்தி அதிகம். சிவன் மீது கொண்ட அன்பால், வேடனான கண்ணப்பர், இறைச்சியை படையலாக வைத்தார். ராமனுக்கு, படகோட்டியான குகன் மீன்களைக் கொடுத்தார்.
இதுபோல், குழந்தைகள் தங்களைப் போன்றே சின்னப் பாப்பாவாக காட்சி தரும் அம்பாளுக்கு, சாக்லெட் காணிக்கை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த, 'சின்ன அம்பாள்' குடியிருக்கும் கோவில் அரக்கோணம் அருகிலுள்ள நெமிலியில் உள்ளது.
நெமிலியில் வசித்த ஒரு அந்தண குடும்பத்தினர், 300 ஆண்டுகளாக ராஜராஜேஸ்வரியை இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தனர். ஒரு சமயம், அந்தக் குடும்பத்தின் முதியவர் கனவு கண்டார்... பச்சைப் பாவாடை கட்டிய ஒன்பது வயது சிறுமி தோன்றி, 'நான் மிகச்சிறிய விக்ரகமாக, உன் வீட்டின் அருகிலுள்ள குசஸ்தலை ஆற்றில் புதைந்து கிடக்கிறேன். என்னை எடுத்து வைத்து வழிபடு...' என்றாள்.
கனவு கலைந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன், கருவூர் சித்தர், 'ஆறு, அதை ஒட்டிய வீடு, அதனுள் இருக்கும் கூடத்தில், அன்னை பராசக்தி குழந்தை வடிவாக அருள்பாலிக்க வருவாள்...' என்று ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தார்.
அந்தக் குறிப்பும், முதியவர் கண்ட கனவும் பொருத்தமாக அமையவே, மறுநாள் முதியவர் குசஸ்தலை ஆற்றுக்குச் சென்றார். நீரில் மூழ்கி எழுந்த போது, அவரது கைகளில் ஒரு அங்குலத்துக்கும் குறைவான உயரத்தில் ஒரு விக்ரகம் கிடைத்தது. அது, கனவில் வந்த சிறுமியின் உருவத்தை ஒத்திருந்தது. அந்த அம்பாளுக்கு, 'பாலா' என பெயரிட்டு, தன் வீட்டில் வைத்து வழிபட்டு வந்தார்.
முதியவரின் மறைவுக்குப் பின், தலைமுறை தலைமுறையாக அந்த குடும்பத்தினர் சிலையை வழிபட்டு வந்தனர். ஆனால், வெளியுலகுக்கு இதுபற்றி அதிகம் தெரியவில்லை. 1944ல், காஞ்சி மகா பெரியவருக்கு இதுபற்றிய விபரம் தெரிய வர, அவர், நெமிலி சென்றார். பாலா விக்ரகத்தைப் பார்த்ததும், அதை எடுத்து தன் நெற்றியில் ஒற்றிக் கொண்டார். ஒன்பது நாட்கள் அங்கு தங்கி, பூஜை செய்தார்.
அதன் பின், வாரியார் சுவாமிகள் இங்கு விஜயம் செய்து, அம்பாளுக்கு பூஜை செய்தார். முதியவர் வம்சத்தில் வந்த, கோவில் காப்பாளரான கவிஞர் எழில்மணி, ('ஊருக்கெல்லாம் அவள் தான் உபகாரி, திருவேற்காட்டினில் வாழும் கருமாரி...' என்ற பாடல் எழுதியவர்) பாலா பற்றி பல பாடல்களை எழுதினார். சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ளார்.
பின், எல்லா பின்னணி பாடகர்களும் அம்பாள் பற்றி பாடவே, ஊர் பற்றிய விவரம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.
இங்கு, 'சாக்லெட்' தான் பிரதான பிரசாதம். அம்பாள் குழந்தை என்பதால், அன்பின் காரணமாகவும், நவீன காலத்திற் கேற்பவும் இங்கு வரும் குழந்தைகள், அம்பாளுக்கு சாக்லெட் படைக்கின்றனர். சிறப்பாக தேர்வு எழுத, மாணவர்கள் தங்கள் பேனாவை அம்பாள் முன் வைத்து வணங்கிச் செல்கின்றனர்.
குழந்தை இல்லாதவர்கள், 'உன்னைப் போல் பட்டு விரல்களால் எங்களை வருடும் குழந்தை வேண்டும்...' என உருக்கமாக வேண்டுகின்றனர்.
இங்கு நவராத்திரி விழா விசேஷம். இதை ஒட்டி மகன்யாச பூர்வீக ருத்ராபிஷேகம், தேவி பாகவதம் ஓதுதல், சகஸ்ரநாம பூஜை நடக்கும். தேங்காயில் அம்மன் முகம் செய்து வழிபாடு நடத்திய பின், ஓர் ஆண்டு பாதுகாத்து வைப்பர்.
அடுத்த ஆண்டு நவராத்திரி துவக்க நாளில் அதை உடைத்து, பக்தர்களுக்கு கீறி கொடுப்பர். அதுவரை தேங்காய் கெடாமல் இருக்கும் என்பது விசேஷம்.
ஐப்பசி பூரம் நட்சத்திரம் அம்பாளின் பிறந்த நாள். கும்ப ராசிக்காரர்களுக்கு பரிகார ஸ்தலம்.
அரக்கோணத்தில் இருந்து, 17 கி.மீ., துாரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து, 23 கி.மீ., துாரத்திலும் நெமிலி உள்ளது. இங்குள்ள சத்திரம் தெருவில், பாலா பீடம் எனப்படும் கோவில் இருக்கிறது. காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை திறந்திருக்கும்.

தி.செல்லப்பா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
20-அக்-201800:59:26 IST Report Abuse
ashak வேதங்களின் படி உருவ வழிபாடு கூடாது, பிறகு எப்படி சிலை வணக்கம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X