இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

பாலியல் பாடம்!
நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட குடியிருப்பு ஒன்றில், வசிக்கும் என் தோழியை சந்திக்க சொன்றேன். அவள் குடியிருப்பின் உள்ளேயே அமைந்த, அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் இருப்பதாக அறிந்து, அங்கு சென்றேன்.
பெண்களில், 10 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் மட்டும் அங்கு குழுமியிருக்க, வயதான பெண்கள் சிலர், மேடையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பின்புறம், 'சுய சுகாதார விளக்கம்' என்ற வாசகத்துடன், பேனர் ஒன்று கட்டப்பட்டிருந்தது.
தலை முடி, நகம், முகம், மார்பு உட்பட, உடல் உறுப்புகளை சுகாதாரமாக பராமரிப்பது பற்றி ஒவ்வொருவரும் விளக்கமாக பேசினர்.
சுகாதார கல்வி என்ற போர்வையில், இளம் பெண்களின் உடற்கூறுகளை, நாகரிகமாக, புரியும்படியான வார்த்தைகளில் சொல்லி, இளம் பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், உடல் வளர்ச்சி, மாதவிடாய் காலம், மனம் அலைபாயுதல், சமூக அவலம் ஆகியவற்றை பற்றி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல், பாலியல் விளக்கத்தையும் அற்புதமாக பயிற்றுவித்தனர்.
பெண் குழந்தைகள், பாலியல் தொல்லையிலிருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள, இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக, அமைந்திருந்தது.
இதுபோல் பெண்கள், தாமே ஓர் குழு அமைத்து, கூடி, பருவப் பெண்களுக்கு, 'சுய சுகாதாரம்' என்ற போர்வையில், பாலியல் பாடம் பற்றி யோசனை தெரிவிக்கலாமே!
— ம.நந்தினி மனோகரன், சென்னை.

ஆரம்பத்திலேயே கண்டியுங்கள், பெற்றோரே!
என் வீட்டின் அருகில், இரண்டரை வயது சிறுவன் ஒருவன் இருக்கிறான். படு சுட்டி, அவனது மழலை பேச்சும், புத்திசாலித்தனமும், தெருவில் உள்ள அனைவருக்கும், மிகவும் பிடிக்கும்.
ஆனால், அவனிடம் ஒரு கெட்ட பழக்கம்... யார் வீட்டுக்காவது போனால், கண்ணில் படும், பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடி, அவன் வீட்டில் எங்காவது ஒளித்து வைத்து விடுவான்.
அவன் வீட்டில் உள்ளோரும், அந்தப் பொருள் யாருடையது என்று கேட்டு உரியவரிடம் கொடுக்க முன் வர மாட்டர்.
பொருளுக்கு உரியோர், அந்த சிறுவன் வீட்டில் போய் கேட்டால் மட்டுமே எடுத்துக் கொடுப்பர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், 'இந்த வயதிலே வீட்டுக்கு பொருள் கொண்டு வந்து சேர்க்கும் நல்ல பழக்கம் அவனிடம் உள்ளதாகவும். அவன் பெரியவனானதும், நிறைய பொருள் சேர்த்து சிறப்பாக வாழ்வான் என்றும், அதனால் அவனது பழக்கத்தை தடுக்கக் கூடாது...' என்றும் பெருமை பேசினர், சிறுவனின் பெற்றோர்.
ஒரு நாள் அந்தச் சிறுவன், ஒரு வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை எடுத்து, அவன் வீட்டு அரிசிக் குவளையில் போட்டு விட்டான்.
சமைக்க, அரிசி குவளையைப் பார்த்த அவன் அம்மா, எலி மருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த சிறுவனை திட்டி, அடித்து நொறுக்கி விட்டார்.
அதன் பின் அந்தச் சிறுவன், யார் வீட்டிலிருந்தும், எந்தப் பொருள் எடுத்துக் கொண்டு ஓடினாலும், 'எடுத்தவர்களின் வீட்டில் கொண்டு போய் வைத்து விட்டு வா...' என அதட்டி, அனுப்பினர்.
இப்போதெல்லாம், யார் வீட்டிலிருந்தும், எந்தப் பொருளையும் அவன் எடுப்பதில்லை.
மா.கோபிநாதன், மயிலாடுதுறை.

சமூக நோக்கமுள்ள தையற்காரர்!
தையல் கடைக்குச் சென்றிருந்தேன். அங்கு, கடைக்காரர் துணிப்பை தைத்துக் கொண்டிருந்தார்.
என்னிடம் அவர், 'சார்... துணிப்பை வாங்கிட்டுப் போங்க... பிளாஸ்டிக் ஒழிப்புல அரசு தீவிரமா இருக்கு... அதற்கு நம்மால முடிஞ்சதைச் செய்யலாம்ல்ல...' என்றார்.
பை என்ன விலை என்று கேட்க, 'பத்து ரூபாய்...' என்றார்.
'அடடே... விலை ரொம்ப குறைவா இருக்கே...' என்றேன்.
அதற்கு அவர், 'ஜவுளிக் கடைல மொத்தமா துணி வாங்கறேன்; பை தைக்கணும்ன்னு சொன்னதும், ஜவுளிக்கடைக் காரரும் விலையைக் குறைச்சுக் கொடுக்கிறார். டிரஸ் தைச்ச நேரம் போக, மீதி நேரத்துல தான் பை தைக்கறேன்... லாபம் எதுவும் வைக்காம அடக்கத்துக்கே கொடுக்கறேன்...' என்றார்.
பிளாஸ்டிக் ஒழிப்பில், இந்த தையற்காரருக்கு உள்ள ஆர்வம் ஒவ்வொருவருக்கும் இருந்துவிட்டால், நம் நாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முதன்மை பெற்று விடும்.
மருத.வடுகநாதன், வேதாரண்யம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
23-செப்-201817:51:17 IST Report Abuse
Indhiyan பிளாஸ்டிக் குப்பையை முறையாக குப்பை தொட்டியில் போட்டால் துணிப்பை போன்ற எதுவுமே வேண்டாம். பிளாஸ்டிக்கில் பை என்பது 20 % தான். பாக்கி 80 % பிளாஸ்டிக்கை எப்படி தடுப்பது? பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் பட்சத்தில் பிளாஸ்டிக்கினால் நன்மையே தவிர பெரிய தீமை வராது. செய்யவேண்டியதை செய்யாமல் வேறு எதையோ செய்து கொண்டு இருக்கிறோம். பிளாஸ்டிக்கை சரியாக பயன்படுத்த தெரியாத வளர்ச்சி அடையாத நாடு இந்தியா என்பது உண்மை. வளர்ந்த நாடுகளில் கடைகளில் பிளாஸ்டிக் பைதான் உபயோகிரார்கள். அங்கு ஏன் பிரச்சனை இல்லை என யோசித்தால் புரியும்.
Rate this:
Manian - Chennai,இந்தியா
24-செப்-201800:26:47 IST Report Abuse
Manianதவறரான சிந்தனை- பாலிதீன் பைகள் சுஹதமாக இருந்தால் மட்டுமே மறு சுழற்ச்சி செய்ய முடியும். சைனா மற்றய நாடுகளிலிருந்து வாங்கின பாலிதீன் பைகள் இப்படி மறு சுழற்சி செய்ததது. ஆனால் ஐபிஎபோது முடியாது என்று விடடது. காரணங்கள்- ( 1 ) அமெரிக்கா மாறும் மேல் நாடுகளில் குப்பைகளை தரம் பிரிப்பதில் ஜனங்களுக்கு கஷடம் வேண்டாம் என்று நினைத்தது. எந்த முன் ஆராச்சியும் செய்யாமல், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று இரெண்டே போதும் என்று சட்டம் இயற்றினார்கள். அதனால், பேப்பர்கள், பிளாஸ்டிக் போன்ற எல்லவனாரையும் ஒன்றாக போடடார்கள். அப்படி செய்ததில், உணவுக்கழிவுகள் , எண்னை கழிவுகள் போன்ற பலவித அசுத்தங்கள் கலந்து விடடான. எனவே அந்த குப்பைகளை தரம் பிரிப்பது, சுத்தம் செய்வதற்கு ஏராளமான தண்ணிரும் தேவை படடது. அது பொருளாத ரீதியாக சரி படவில்லை. எனவே சைனா இனிமேல் பிளாச்டிக் மறு சுழற்சி செய்ய மாடடோம் என்று விட்டது. முதல் வாரமே, முப்பது லட்ச்சம் டன் குப்பைகள் மற்றய நாடுகளிலேயே தேங்கிவிட்ட்து. இப்போது அவற்றை புதைக்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் எந்த சடடத்தையும் மதிக்காத மக்களால் குப்பைகளை பிரதிக்கு போடும் மனோ நிலை வரவே வராது. பாலிதீன் பைகளை தடுப்பதே தேவை. நான் என்னுடைய பழைய பேன்ட் முதல் பால் பகுதி வரை உள்ள பகுதிகள் வெட்டி இரெண்டு பைகள் தைத்து அதையே உபயோகிக்கிறேன். வெட்டாத மேல் பாகம் அரை டிராயராக பயன் படுகிறது. துணியே, சாய்க்கு பைகள் வேண்டும்....
Rate this:
Manian - Chennai,இந்தியா
24-செப்-201819:00:31 IST Report Abuse
Manianசரி செய்யப்பட்டு விட்டது...
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
25-செப்-201810:47:29 IST Report Abuse
சுந்தரம் எது சரி செய்யப்பட்டுவிட்டது?...
Rate this:
Cancel
nabikal naayakam - கேவலமான தூத்துக்குடி,இந்தியா
23-செப்-201810:42:58 IST Report Abuse
nabikal naayakam அந்த தையல்காரரின் பணி மிகவும் பாராட்டத்தகுந்தது. அவர் நீடூழி நன்றாக வாழவேண்டும்.
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
23-செப்-201814:42:45 IST Report Abuse
சுந்தரம் பை தைப்பதற்காக புது துணி வாங்கி பத்து ரூபாய்க்கு விற்பதைக்காட்டிலும் பழைய உபயோகப்படுத்திய வேஷ்டி சட்டை புடவை ஆகியவற்றை பை தைக்க பயன்படுத்தினால் இன்னமும் அதிக லாபத்திலும் குறைந்த விலையிலும் பைகளை தைத்து விற்கலாம் என்பது எனது எண்ணம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X