ஆச்சி மனோரமா! (29)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

பூபதி ஒரு, பி.எஸ்சி., பட்டதாரி. பிரசிடென்சி கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றார். படிக்கிறபோது பூபதியின் நண்பரை பார்க்க ஒரு இளம்பெண் அடிக்கடி வந்து போவது வழக்கம். நண்பனுக்கு, சினேகிதியாக இருந்த அந்த பெண், கடைசியில், பூபதியின் காதலியாகி விட்டாள்.
பூபதியும், அந்த பெண்ணும் காதலிக்க ஆரம்பித்தனர்.
இந்த விஷயம் ரொம்ப நாட்களுக்கு பிறகே மனோரமாவுக்கு தெரிய வந்தது. இந்த தொடர்பை எப்படியாவது துண்டித்துவிட வேண்டும் என்று நினைத்தார். அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஒருநாள் மனோரமா வீட்டில் இல்லாதபோது, அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் பூபதி. மனோரமாவின் அம்மா, இதை பார்த்து திடுக்கிட்டார்; அந்த பெண்ணை கண்டிக்கவும் செய்தார்.
ஆனால், அந்த பெண்ணோ, மனோரமாவின் அம்மா காலை கெட்டியாக பிடித்து தங்கள் காதலை ஏற்று, திருமணம் செய்து வைக்குமாறு கெஞ்சத் துவங்கினாள். அத்துடன் மனோரமாவை பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே போகப் போவதில்லை என்று அடம்பிடித்து, அங்கேயே இருந்து விட்டாள்.
மனோரமா வீடு திரும்பியபோது, அந்த பெண் வீட்டில் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். தன் வாழ்க்கையில் அந்த பெண்ணை சந்திக்கவே கூடாது என்று நினைத்திருந்த அவருக்கு, இது மிகப்பெரிய, 'ஷாக்!'
அந்த பெண்ணோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், மனோரமாவின் காலை கெட்டியாக பற்றி, மாலை மாலையாக கண்ணீர் உகுத்தாள். 'எக்காரணம் கொண்டும் என்னை திருப்பி அனுப்பி விடாதீர்கள். காதலுக்கு சம்மதம் தெரிவித்து, எங்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள்...' என கெஞ்சினாள்.
அந்த பெண்ணின் கண்ணீரும், கெஞ்சலும் மனோரமாவின் அழுத்தமான மனதை சிறிது அசைத்து பார்த்தது. தடுமாறினாலும் இந்த திருமணம் நடப்பதற்கு இடையூறாக உள்ள சில உண்மைகளை அந்த பெண்ணிடம் தெளிவுபடுத்தி, இவர்கள் காதலை முறித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
'நீ, 'இதயம் பேசுகிறது' மணியனோட மைத்துனி. நீங்க பிராமண ஜாதியை சேர்ந்தவங்க. நாங்க உங்க ஜாதி கிடையாது. முதலில் இந்த உண்மையை தெரிஞ்சுக்கோ. எனவே, இந்த கல்யாணத்திற்கு எதிர்ப்பு ஜாஸ்தியா இருக்கும்.
'அப்புறம், காதல் கல்யாணம் செஞ்சு, நிறைய வலியை சுமந்தவ நான். உங்க கல்யாணத்துக்கு அப்புறமா நிறைய கஷ்டங்கள் வரும். அதையெல்லாம் தாங்கற சக்தி உங்களுக்கு வேணும். எதுக்கும்மா இவ்வளவு போராட்டம். போராடி போராடி ஓய்ஞ்சு போனேன். போதும்மா, விட்டுடு. இந்த காதல் கீதலையெல்லாம் மறந்துட்டு, நல்ல பிள்ளையா வீட்டுக்கு போய்ச் சேரு...' என்று புத்திமதி கூறினார் மனோரமா.
ஆனால், அந்த பெண், தன் முடிவில் உறுதியாக இருந்தாள். மனோரமாவின் அறிவுறுத்தல்கள் அவள் மூளையில் ஏறவே இல்லை.
அப்புறம் இந்த திருமணத்திற்கு மனோரமா சம்மதிக்க மறுக்கிறார் என்பது தெரிந்து, மிகப்பெரிய மனிதர்களிடம் இருந்து தொலைபேசி மிரட்டல் வந்தது. 'இந்த திருமணம் கண்டிப்பாக நடந்தே தீர வேண்டும்...' என்பதாக அந்த மிரட்டல்கள் வந்தன. அப்புறம் உத்தரவே வந்தது.
இதற்கு மேலும் திருமணம் நடைபெற சம்மதிக்கா விட்டால், நிறைய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதை உணர்ந்தார். வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டினார்.
பெரிய மனிதர்கள் பலரது செல்வாக்கின் ஆதரவோடு, திருமணம் சிறப்பாக நடந்தேறியது. என்றாலும், தன் மகன் பூபதியின் இந்த திருமண வாழ்க்கை நீடிக்க வேண்டும் என்பதற்காக, மனோரமா வேண்டாத தெய்வமே கிடையாது. கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனை செய்தார். ஆனால், இவரது வேண்டுதல்கள் எதையுமே எந்த தெய்வமும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
அடுத்த இரண்டே மாதங்களில் பிரச்னை உருவானது. கெஞ்சிக் கூத்தாடிய அந்த பெண், அப்புறம் மிஞ்ச ஆரம்பித்தாள். வீட்டில் பிரச்னை. பெட்டி, படுக்கைகளுடன் பிறந்தகத்திற்கு சென்று விட தீர்மானித்தாள்.
இப்போது, மனோரமா, அந்த பெண்ணிடம் கெஞ்சிப் பார்த்தார். தன் கடந்த கால வாழ்வின் துன்ப கதைகளை மீண்டும் அவளுக்கு நினைவுபடுத்தி, ஒற்றுமையாக வாழ வேண்டிய கட்டாயத்தை நினைவூட்டினார். பிராமண சமுதாயத்தில், அப்போது மறுமணம் கிடையாது. எனவே, காலம் முழுவதும் வாழாவெட்டியாக இருக்க நேரிடும் அபாயத்தையும் கூறினார்.
இதற்கு ஒருபடி மேலே போய், அவர்கள் தனிக் குடித்தனம் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்வதாக கூறிப் பார்த்தார்.
ஆனால், எதையும் அந்த பெண் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. எப்படியோ அப்படி இப்படி என்று ஒரு ஆண்டு வரை அவர்கள் தாம்பத்ய வாழ்க்கை கரடு முரடாகவே நீடித்தது.
இதனிடையே, ஒரு குழந்தைக்கும் அவள் தாயானாள். அதுவே பிரச்னையை இன்னும் அதிகமாக்கியது. புகுந்த வீட்டை விட்டு, தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டாள்.
மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார், மனோரமா.
பூபதியின் காதல் திருமணத்தை நடத்தியே தீரவேண்டும் என்று கட்டளையிட்டவர்கள், மிரட்டல் விடுத்தவர்கள், திருமணத்தை முன்னின்று நடத்தி முடித்தவர்கள் என்று அத்தனை பெரியவர்களும், இத்திருமண வாழ்க்கை முறிந்தபோது எங்கே போயினர் என்றே தெரியவில்லை. எல்லாரும் பதுங்கிக் கொண்டனர்.
தெய்வத்தை தவிர வேறு யாரிடம் போய் முறையிடுவது?
மகனின் வாழ்க்கையும், தன் வாழ்க்கையை போலவே கண்ணீரில் தவழ ஆரம்பித்து விட்டது. கலங்கினார்; கண்ணீர் வடித்தார்.
'எப்படியும் ஒருநாள் மனம் திருந்தி, தன்னோடு வாழ சம்மதிப்பாள்...' என்று உறுதியாக நம்பினார், பூபதி.
ஒரு ஆண்டு கடந்தது; அவள் வரவில்லை. ஆனால், விவாகரத்து கோரி, 'நோட்டீஸ்' தான் வந்தது.
ஆனாலும், அதில் கையொப்பமிடாமல் பொறுமை காத்தார், பூபதி.
இரண்டு ஆண்டுகள் கடந்தன. மூன்று, நான்கு என ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டன. அந்த பெண் மனம் திரும்பவே இல்லை.
இதற்கு மேலும் அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கை பூபதியிடம் உடைந்து நொறுங்கி போனது.
விவாகரத்து ஒப்பந்தத்தில் அதுவரை கையெழுத்து போட மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர், இப்போது தளர்ந்து போனார். விவாகரத்துக்கு சம்மதித்தார்.
இருவரும் சட்டப்படி பிரிந்தனர்.
இதன்பின், இவர்கள் பிரிவை பற்றி ஏதேதோ கிசுகிசுக்கள், மர்ம செய்திகள், வதந்திகள் நிறையவே வெளியாகின.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், பூபதிக்கு இன்னொரு திருமணம் நடத்த வேண்டும் என்று நினைத்தார் மனோரமா.
அம்மாவின் வாழ்வை போல, தன் வாழ்வை போல, தன் மகனின் வாழ்க்கையும் வீணாகி போகக் கூடாது என்று நினைத்த மனோரமா, வைத்தீஸ்வரன் கோவில் ஓலை சுவடியை நாடினார். அதன்படி, தஞ்சாவூர் கோவிந்தராஜு முதலியார் மகள், தனலட்சுமி என்ற பெண்ணோடு திருமணம் நடத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், இந்த திருமணத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். நிறைய பேர் இதை கிண்டலும், கேலியும் செய்தனர். ஏராளமான இடைஞ்சல்கள், வசை மொழிகள்.
தொடரும்.
நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com
குன்றில்குமார்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X