இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

ரஜினிகாந்தின் இரண்டு முகம்!
விஜய்யின் தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில், 1985ல், ரஜினி நடித்த, நான் சிகப்பு மனிதன் படத்தில், பகலில், கல்லுாரி பேராசிரியராகவும், இரவில், தாதாவாகவும் நடித்துள்ளார். அதேபோன்று, தற்போது நடித்து வரும், பேட்ட படத்திலும், பகலில், கல்லுாரி வார்டனாகவும், இரவில், பேட்ட ரவுடிகளை துவம்சம் செய்யும், 'டான்' ஆகவும் நடிக்கிறார். இது, அதிரடியான வேடம் என்பதால், ரஜினியின் இடப்பக்க கன்னத்தில், ஒரு மருவும் வைத்து, பக்காவான, 'டான்'ஆகவே மாற்றியுள்ளார், இயக்குனர், கார்த்திக் சுப்பராஜ்.
சினிமா பொன்னையா

த்ரிஷாவின் புகழ்பாடும் நடிகர்!
விஜயசேதுபதியும், த்ரிஷாவும், 96 என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் பள்ளிப்பருவம், இளமைக்காலம், நடுத்தர வயது என, மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார், த்ரிஷா. இந்த கெட்டப்புகளுக்காக அவர், தன் உடலை வருத்தி நடித்ததைப் பார்த்த விஜயசேதுபதி, 'த்ரிஷா சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்; இந்த மாதிரியான ஒரு சிறந்த நடிகையுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். தொடர்ந்து நடிக்கவும் காத்திருக்கிறேன்...' என்று, த்ரிஷாவின் புகழ் பாடுகிறார்.
சி.பொ.,

ரம்யா நம்பீசனுக்கு ஆதரவு கொடுத்த, பாபி சிம்ஹா!
நடிகை பாவனா, பிரச்னையில் கைது செய்யப்பட்டதை, அடுத்து, மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் நடிகர் திலீப். நடிகர் மோகன்லால், மலையாள நடிகர்சங்க தலைவரானதும், திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடி பிடித்த நடிகைகளில் ரம்யா நம்பீசனும் ஒருவர். அதனால், அவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காததால், கோலிவுட்டே கதியென்று கிடக்கிறார். அவரை, அக்னிதேவ் என்ற படம் மூலம் ஆதரித்துள்ளார், பாபி சிம்ஹா. கிடந்த கிடைக்கு, நடந்த நடை மேல்!
எலீசா

திருமணமாகாமலேயே அம்மாவான கதை!
காக்கா முட்டை படத்தில், இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்தவர், ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து, ஆறாது சினம் மற்றும் லட்சுமி ஆகிய படங்களிலும் அம்மா வேடங்களில் நடித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், 'அம்மா வேடங்களை நானாக விரும்பி ஏற்பதில்லை. அந்த மாதிரி வேடங்கள் என்னை இயல்பாக காண்பித்து விட்டன. அதோடு, சில படங்களில் கதையில் ஐக்கியமாகி நடிப்பதால், என்னை ஒரு அம்மாவாகவே உணர்கிறேன். அவ்வகையில் திருமணமாகாமலேயே அம்மாவாகி விட்டது போன்ற உணர்வை, சில படங்கள் கொடுத்து விட்டன...' என்கிறார். தாருக்கும் அகப்படாமல், தாழ்பாளுக்கும் அகப்படாமல்!
எலீசா

கர்ணன், 'கெட்டப்'பில் விக்ரம்!
பீமா படத்தில், விக்ரம் நடித்தபோது, தன் உடற்கட்டை கம்பீரமாக்கி நடித்தார். அதையடுத்து, இந்தியில் அவர் நடிக்கயிருக்கும், கர்ணன் என்ற சரித்திர படத்திற்காக, பீமா படத்தை விடவும், அதிக வெயிட் போட்டு வருகிறார். கூடவே, சரித்திர கால சண்டை பயிற்சிகளையும் எடுத்து வரும் விக்ரம், 'இந்த படம் வெளியாகும் வரை, இதே உடற்கட்டுடன் வெளியில் தலை காட்டுவதை தவிர்க்கிறேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!
* வம்பு நடிகரின் ஜாதகப்படி, இப்போது பெண்களுடன் நட்பு வளர்ப்பது அவப்பெயருக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார், ஜோதிடர். அதனால், பார்ட்டி மற்றும் விழாக்களில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். முக்கியமாக, யாரேனும் வில்லங்கமான நடிகைகள் அதே நிகழ்ச்சிகளுக்கு வருகின்றனர் என்றால், பிரச்னை தன்னைத்தேடி வருவதாக சொல்லி, தெறித்து ஓடுகிறார்.
''டேய் சங்கரு, சிம்பு மாதிரி சகலகலா வல்லவனா இருக்கணும்ன்னு ஆசை மட்டும் இருந்தா போதுமா... முதல்ல, இந்த சிலம்பாட்டத்தை முறையா கத்துக்கடா,'' என்றான், நண்பன் ஜோஷ்வா.

* மும்பையில் இருந்து வந்திருக்கும் வனமகன் நடிகை, கோலிவுட்டின் நம்பர் ஒன் நாற்காலியில் அமர வேண்டுமென்று வரிந்து கட்டியுள்ளார். அதற்கு, மேல்தட்டு நடிகர்களின் அரவணைப்பு அவசியம் என்பதால், அவர்களுடனான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள நடிகை, அவ்வப்போது மொபைலில் அவர்களுடன் கடலை போடுகிறார். அத்துடன், தன் வார்த்தைக்கு வசப்படும் நடிகர்களை, 'கரெக்ட்' பண்ணி, புதிய படங்களுக்கு, 'ரூட்' போடுகிறார்.
''குழந்தைக்கு நல்ல பேரா வைக்கக் கூடாதா... சாயிஷா... பேயிஷான்னு... வாயிலே நுழைய மாட்டேங்குது,'' என்றார், பக்கத்து வீட்டு பாட்டி.
.
சினி துளிகள்!
* நீயா-2 படத்தை அடுத்து, சிண்ட்ரல்லா என்ற படத்தில் நடிக்கிறார், ராய்லட்சுமி.
* ஜூங்கா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார், சாயிஷா சாய்கல்.

அவ்ளோதான்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
24-செப்-201811:43:48 IST Report Abuse
Aarkay "ஜூங்கா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ....." செம காமெடி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X