உழைப்புக்கேற்ற உயர்வு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

சிவபெருமான், மண் சுமந்து, பிரம்படி பட்டார். ஸ்ரீராமர், காடு போய், படாதபாடு பட்டு, கடலில் பாலம் கட்டினார். கண்ணன், கோவர்தன மலையைத் துாக்கினார். முருகன், சங்கத்தமிழ்ப் புலவர்களில் தலைமைப் புலவராக இருந்து தமிழை ஆராய்ந்தார்,- என்றெல்லாம் இதிகாச- புராணங்கள் கூறுகின்றன.
உழைப்பின் பெருமையை, நம் ஞான நுால்கள் விவரித்ததைப் போல, உலகில் வேறு எந்த நுாலிலும் விவரிக்கப்படவில்லை. ஆனால், நடப்பதென்ன... உழைப்பின் மேன்மையை விளக்க வந்த தெய்வங்களிடம் போய், 'அதைக் கொடு... இதைக் கொடு...' எனக் கேட்கும் மனோபாவம் பரவியிருக்கிறதே தவிர, உழைக்கும் எண்ணம் பரவவில்லை.
ஒருநாளும், உழைப்பு தோற்காது என்பதை விளக்கும் வரலாறு இது:
காசிக்கு அருகில் உள்ள கோபால்பூர் என்னும் ஊரில், தலைசிறந்த தபேலா வித்வான்; அவர் மகனும், நன்றாகவே தபேலா வாசிப்பான். ஒரு சமயம், நடன நிகழ்ச்சி ஒன்றுக்காக, அப்பாவும் பிள்ளையுமாக தபேலா வாசிக்க சென்றிருந்தனர்.
நிகழ்ச்சியின் போது, மகன், தவறுதலாகத் தபேலா வாசித்து விட்டான். தகப்பனார் சினந்து, 'இப்படி தவறாக வாசித்து, நம் குடும்பப் பெருமையைக் குலைப்பதை விட, எங்காவது போய் சாகலாம் நீ...' என்றார்.
மகன் வருந்தினான்... 'தலைசிறந்த தபேலா வித்வானாக ஆக வேண்டும் அல்லது எங்காவது விழுந்து இறக்க வேண்டும்...' என்ற தீர்மானத்தில், தபேலாவுடன், வீட்டை விட்டு வெளியேறியவன், நீண்ட துாரம் நடந்து, ஒரு குகையை நெருங்கினான். குகைக்கு அருகில், ஒரு அம்மன் கோவில் இருந்தது. கோவிலின் முன் நின்று அழுதான். அழு குரல் கேட்டு, கோவில் பூசாரி வெளியே வந்தார். வந்தவர், 'ஏன்டாப்பா அழற...' என்றார்.
துயரத்தின் போது, இவ்வாறு ஆறுதலான குரல் கேட்டால், மனதில் உள்ளதை கொட்டிவிட தோன்றும் அல்லவா! மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி விட்டான், பையன்.
மென்மையாகச் சிரித்த பூசாரி, 'அசடு... அசடு... இதுக்குப் போயி சாகறதா... அந்த எண்ணமே வேண்டாம். இங்கே, சன்னிதியிலேயே அமர்ந்து, அம்பாள் முன், தபேலால சாதகம் பண்ணு... தானாவே, நீ பெரீய்ய வித்வானாயிடுவ...' என்றார்.
அழுகையை நிறுத்திய சிறுவன், அந்த பூசாரி சொல்படி, அம்பாள் சன்னிதி முன் அமர்ந்து சாதகம் செய்யத் துவங்கினான். ஒரு நாள் இருநாளல்ல; 12 ஆண்டுகள். அசுர சாதகம்! தபேலாவில் விரல்கள் பேசின.
அதன்பின் அவன், லட்சுமணபுரி எனும் ஊருக்குச் சென்று, அங்கு ஒரு கச்சேரியில் தபேலா வாசித்தான். அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த நேபாள மன்னர், இவன் திறமையைக் கண்டு வியந்து, உடனே இவனை தன் ஆஸ்தான வித்வானாக நியமித்தார்.
அந்தச் சிறுவன் தான், தபேலா வாசிப்பில் மா மேதையான, 'பிரதாப் மகராஜ்' என்பவர். இவருடைய பேரன், சம்தா பிரசாத். தாத்தாவைப் போலவே, தபேலா வாசிப்பில் தலை சிறந்து விளங்கினார்.
ஒரு சமயம்... ரஷ்யாவில், போல்ஷாய் என்னும் நாடக அரங்கில், சம்தாபிரசாத் தபேலா வாசித்தபோது, ரஷ்யாவின் பிரதமராக இருந்த, புல்கானின், தபேலாவில், சம்தாவின் விரல்கள் விளையாடிய வேகத்தைக் கண்டு வியந்து, மனதாரப் பாராட்டினார்.
உறுதியான உழைப்புக்கு, உயர்வைக் கொடுக்காமல் இருக்காது தெய்வம் என்பதை விளக்கும் இவ்வரலாறு, முன்னோர்களிடம் இருந்து திறமைகளை நாமும் கற்க வேண்டும் எனும் பாடத்தையும் சொல்கிறது.
தன் தாத்தாவின் தபேலா வாசிப்பிலிருந்து, சம்தா பிரசாத் அனுபவ பாடம் கற்றதைப் போல, நாமும், நம் குழந்தைகளுக்கு, நல்லதைச் செயல்படுத்திக் காட்டுவோம்!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!
அதிகாலையில் எழுந்து பூஜை செய்வதால் என்ன பலன்?
அதிகாலை, 4:00 மணி முதல் 5:00 மணி வரை உள்ள காலத்தை, பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடுவர். அந்த நேரத்தில் தான் தேவர்களும், முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருவதாக ஐதிகம். அந்த நேரத்தில் பூஜை செய்தால், அவர்களது ஆசி, நமக்கு கிடைக்கும்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
20-அக்-201801:41:40 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் சிவபெருமான், மண் சுமந்து, பிரம்படி பட்டார். ஸ்ரீராமர், காடு போய், படாதபாடு பட்டு, கடலில் பாலம் கட்டினார். கண்ணன், கோவர்தன மலையைத் துாக்கினார். முருகன், சங்கத்தமிழ்ப் புலவர்களில் தலைமைப் புலவராக இருந்து தமிழை ஆராய்ந்தார், - கடவுள்கள் ஏன் மனிதனாக பிறக்கவேண்டும்?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X