நம்மிடமே இருக்கு மருந்து! - அரச மர இலையே...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

நம் முன்னோர் மருந்தாக பயன் படுத்திய பொருட்களில் ஒன்று, அரச மரத்து இலை. அரச மரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும்; அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடியது. இதை, விநாயகர் வீற்றிருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால், உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும்.
அரச மரம் பெரும்பாலும் இந்திய காடுகளிலும், சில இடங்களில் கோவில் அருகிலும் காணப்படுகிறது. இதன் இலைகளில் அதிகளவு, 'அஸ்பார்டிக்' அமிலம், 'ஸ்டெராய்டு, மெத்தயோனின், கிளைசின்' மற்றும் விட்டமின்கள் என, எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவையெல்லாம் அரச மர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது.
* அரச மர இலைகள் மட்டுமின்றி காய்களும் மருத்துவ குணமுடையது தான். இலைகளையும், காய்களையும் எடுத்து காய வைத்து, பொடியாக்கி கொள்ளவும். பின், அவற்றை சம அளவில் கலந்த பொடியை, நீருடன் கலந்து, 14 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ஆஸ்துமா உள்ளோருக்கு விரைவில் அற்புத பலனளிக்கும்
* கண் வலிக்கு, அரச மர இலைகளை கசக்கி கண்களில் ஊற்றினால், சில நிமிடங்களில் வலி குறைய துவங்கும்
* அரச மரத்தின் கொழுந்து இலைகள் அல்லது புதிதாக வளரும் மரத்தின் வேர் போன்றவற்றை உபயோகித்து பல் துலக்கும்போது, பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு, 'பாக்டீரிய' தாக்குதல்களில் இருந்தும் பற்களை பாதுகாக்கும்
* பாம்பு கடித்து விட்டால், அரச மர இலைகளை கசக்கி இரண்டு ஸ்பூன் சாறு கொடுத்தால், அது பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு, விஷம் மேற்கொண்டு உடலில் பரவுவதை தடுக்கிறது
* இளஞ்சிவப்பான அரச மர இலைகளை எடுத்து சாறாக்கி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் மூன்று முறை பருக, மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தும்
* அரச இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர, சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவை குறையும். சாப்பிட பிடிக்கவில்லையெனில், இலைகளை மிக்சியில் அரைத்து பாலில் கலந்து தேநீராக குடிக்கலாம்
* அரச இலைகளுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதை நீருடன் நன்கு கலந்து, வடிகட்டிய பின், இந்த நீரை தினமும் குடித்து வந்தால், கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளோர் இதை செய்வது, மிகச்சிறந்த பலனளிக்கும்
* சிறிதளவு அரச மர இலையின் துாள், சோம்பு மற்றும் வெல்லத்தை பாலுடன் கலந்து, துாங்க செல்லும் முன் குடிக்கவும். சில மணி நேரங்களிலேயே, மலச்சிக்கலை குணமாக்கி, உடனடி நிவாரணத்தை உணரலாம்
* இளம் தளிர்களை எடுத்து, இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி, தினமும் இரண்டு முறை குடித்தால், இதயம் படபடப்பு குறைவதோடு, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்யும்
* கொழுந்து அரச மர இலைகளை எடுத்து, அதனுடன் சிறிது கொத்தமல்லி மற்றும் சிறிது பனங்கற்கண்டை சேர்த்து மென்றால், வயிற்றுப்போக்கிலிருந்து உடனடி தீர்வு பெறலாம்
* சர்க்கரை நோய் பிரச்னை உள்ளோர் அரச மர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமமான அளவில் பாலுடன் கலந்து குடித்து வர, உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்
* சிறிதளவு அரச மர விதை துாளை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமடையும். இரைப்பை கோளாறுகள் உள்ளோர், இதில் கஷாயம் தயாரித்து அதனுடன் தேன் சேர்ந்து குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்
* தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சல் உள்ளோர் அரச மர இலைகளை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து, அதோடு சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர, விரைவில் காய்ச்சல் குணமாகும். ஆனால், குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் முன் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

- கே.ஆறுமுகம்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
25-செப்-201811:28:12 IST Report Abuse
Ajaykumar பயனுள்ள தகவல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X