அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

அன்புள்ள ஆன்ட்டிக்கு,
நான், 25 வயது பெண்; எனக்கு ஒரு தோழி இருக்கிறாள். இருவருக்குமே இன்னும் திருமணமாகவில்லை. ஒரே கல்லுாரியில் படித்து, ஒரே நிறுவனத்தில் வேலை செய்கிறோம். எதற்கெடுத்தாலும் புலம்புவாள். சினிமா டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் கூட, உடனே அழுது புலம்புவது, தன்னை தனிமைப்படுத்தி வருத்தப்படுவது, துாக்கத்தை துறந்து, அதையே நினைத்து மருகுவது என்று இருப்பாள்.
எதற்கெடுத்தாலும், இப்படி அழுது புலம்பி, அடுத்தவர்களை கஷ்டப்படுத்துவதால், நிறைய தோழியர் அவளை விட்டு பிரிந்து விட்டனர். எவ்வளவோ சொல்லி பார்த்தும் திருந்துவதாக இல்லை. இப்படியே தனிமையில் இருந்து இருந்து, வீட்டில் மற்றவர்களிடம் கலகலப்பாக பேசுவதோ, பழகுவதோ இல்லை. 'இப்படி, தொட்டாச் சிணுங்கியாக இருந்தால், திருமணத்துக்கு பின் எப்படி இருப்பாளோ...' என்று வருத்தப்படுகின்றனர், அவளது பெற்றோர்.
தோழிக்கு, ஒரு அண்ணன், தங்கை உள்ளனர். விளையாட்டுக்கு ஏதாவது சொல்லி விட்டால் போச்சு, உடனே முகத்தை துாக்கி வைத்துக் கொள்கிறாள். மொட்டை மாடியில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பாள். கவுன்சிலிங் போக சொன்னால், 'எனக்கு என்ன பைத்தியமா...' என்று கேட்கிறாள்.
மற்றபடி, படிப்பிலும், வேலையிலும் கெட்டிக்காரி தான். சின்ன சின்ன சீண்டல்களையோ, ஏமாற்றங்களையோ கூட தாங்கிப் கொள்ள முடியாதவளாக இருக்கிறாளே... என்ன சொல்வது?
இந்த பிரச்னைக்கு நல்ல முடிவு சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்பு மருமகளுக்கு,
இவ்வுலகில் நால்வகை மனிதர்கள் இருக்கின்றனர். முதலாமவர், நீட்டிய பால் டம்ளரில் பாதி டம்ளர் பால் இருக்கிறது என கூறும் வெளிச்ச பக்கத்தை பார்க்கும் நம்பிக்கைவாதி. இரண்டாமவர், டம்ளர் பாதி காலியாக இருக்கிறது என கூறும் வாழ்வின் இருண்ட பக்கத்தை பார்க்கும் அவநம்பிக்கைவாதி. மூன்றாமவர், பாதி டம்ளர் பாலில் தண்ணீர் கலந்துள்ளது எனக் கூறும் யதார்த்தவாதி. நாலாமவர், டம்ளரில் எவ்வளவு பால் இருந்தால் என்ன, இருக்கும் பாலை குடிக்க போகிறேன் என கூறி, குடிக்கும் சந்தர்ப்பவாதி. இவற்றில், இரண்டாம் வகை உன் தோழி.
இறந்த கால தோல்விகளில் துவண்டு கிடந்து, நிகழ்காலத்தையும், எதிர் காலத்தையும் தொலைத்து விடக் கூடாது. உன் தோழிக்கு, சில ஆலோசனைகள்:
* சவால்களில் வெற்றி பெறு. சவால்கள் வருவது உன்னை செயலிழக்க அல்ல, உன்னை, நீ யார் என்று கண்டுகொள்ள. எந்த பணி என்றாலும் மலைத்து நிற்காதே... பணியை தனித்தனி பாகங்களாக பிரி. ஒவ்வொரு பாகத்தையும் ஜெயிக்க கால அளவு நிர்ணயி. துண்டு துண்டாய் வெற்றியை சுவைக்கும்போது, எதிர்மறை மனநிலை மாறும்
* எதிர்மறை எண்ணங்களையும், பேச்சையும் தலை முழுகு
* உன்னை சுற்றி நம்பிக்கைவாதிகள் நிறைந்திருக்கும் சூழலை ஏற்படுத்து
* இறந்த கால தோல்விகளை அலசி ஆராய்ந்து, என்ன செய்திருந்தால், தோல்விகளை வெற்றியாக்கி இருக்கலாம் என்ற தீர்வை கண்டுபிடி. உன் தோல்விக்கு, அடுத்தவர் மீது பழி போட்டு தப்பிக்காதே
* ஒரு செயலை செய்யும்போது, வெற்றியையும், அது தரும் சந்தோஷத்தையும் முழுமையாக கற்பனை செய்
* 'என் தோல்வியை எதிர்பார்த்து நண்பர்களும், உறவினர்களும் காத்திருக்கின்றனர். எனக்காக இல்லாவிட்டாலும், அவர்களை ஜெயிக்கவாவது நான் வெற்றி பெற வேண்டும். என் வெற்றி, அவர்களின் அபிப்ராயங்களுக்கான அதிரடி பதில்...' என, செயலாற்று
* நகைச்சுவை உணர்வுகளை வளர்த்துக் கொள். உன் முகம், அழுதால் நன்றாக இருக்கிறதா, சிரித்தால் நன்றாக இருக்கிறதா என கண்ணாடியில் பார். சிரித்த முகம் பேரழகு
* வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை பெற்ற, சாதனையாளர்களின் சுயசரிதைகளை படி
* ஒரு காரியத்தை செய்யும்போது, வெற்றிபெற என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதை கணக்கிடு. வெற்றியாளர்களை, சகாக்களாய் பெற்று, வெற்றிக் கூட்டணி உருவாக்கு. இன்னின்ன காரணங்களால் நீ செய்யும் காரியம் வெற்றி பெற வேண்டும் என, காரணங்களை அடுக்கு. இதை செய்து, இதுவரை யாரும் ஜெயித்ததில்லை என்கிற எதிர்மறை வார்த்தைகளை காலில் இட்டு மிதி. ஒரு காரியம் வெற்றிபெற, எதிர்பாராத வழிகளுக்கு மனதை திறந்து வை
* எல்லாவற்றுக்கும் மேலாக, இறை சக்தியை நம்பு. பிரார்த்தனை, யோகா மற்றும் தியானம் உன் மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி தரும்.
மகளே... வாழ்க்கை என்பது ஆயிரக்கணக்கான தோல்விகளும், ஒற்றை இலக்க எண்ணிக்கை வெற்றிகளும் கூடிய வினோத கலவை.
கேலிகளையும், நையாண்டிகளையும், செல்ல சீண்டல்களையும் ரசிக்க கற்றுக்கொள். தனி மரம் தோப்பாகாது. பிடிக்கிறதோ, இல்லையோ, உறவுகளையும், நட்புகளையும் கைவிடாதே.
வாழ்க்கை ஒரு மன விளையாட்டு. தன்னம்பிக்கையுடன் கூடிய புன்னகை முகத்துடன் தொடர்ந்து பந்து வீசினால், விக்கெட்டுகள் விழும். ஒரு விக்கெட் கிடைத்த பின், தொடர்ந்து விக்கெட்டுகள் கிடைக்கும். எந்த பந்தில், நாலும், ஆறும் அடிக்கப்பட்டதோ, அதே பந்தில், பேட்ஸ்மேன், 'அவுட்' ஆவார்.
தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால், இந்த பூமி பந்தை புரட்டி விடலாம் மருமகளே!
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
20-அக்-201801:41:27 IST Report Abuse
ashak அம்மா
Rate this:
Share this comment
Cancel
m.senthil kumar - tamilnadu,இந்தியா
24-செப்-201811:47:51 IST Report Abuse
m.senthil kumar சகோதரி வணக்கம். இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது இது பெரும் பிரச்சனைதான், ஏனென்றால் இதே போல் எனக்கும் இப்பிரச்சனை உள்ளது. அதற்காக அழமாட்டேன் கிடைக்கவில்லை என்றால் போராடி வாங்கிவிடுவேன் அது என்ன விலை என்றாலும். ஒருவர் என்னை திட்டிவிட்டாலோ அல்லது அடுத்தவரிடம் குறை சொல்லிட்டாலோ என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. பாம்பு போல் பழிதீர்த்து விடுவேன். இது எதனால் என்றால் என் பிறவி குணம் அப்படி இதனால் நான் பலநாள் நிம்மதி இழந்து பைத்தியம் போல் இருந்திருக்கிறேன். நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் விஷயத்திற்கு வரேன். உன் சகோதரி conscious mind ல இல்ல subconcious mind தான் ஆட்டி படைத்துக்கொண்டிருக்கிறது இதற்க்கு ஆழ் மன பதிவுதான் காரணம். அடுத்து அப்பா வழியிலோ அம்மா வழியிலோ இதே போல் யாராவது இருந்திருப்பர். இதற்க்கு மருத்துவம் உதவி பண்ணாது மருந்து உட்கொண்டால் உடல் பலவீனமடையும் ஒரே தீர்வு மனதை அமைதி படுத்தவேண்டும் தியானம் பழக சொல்லுங்கள் பிறகு பாருங்கள். அது ஒன்றே தீர்வு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X