திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

ரொம்ப விபரமான, நடிகர் நாகேஷ், 'பேசும் படம்' இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து: பள்ளி காலாண்டு தேர்வில், 'திருக்குறளை எழுதியது யார்?' என்ற கேள்விக்கு, 'ஒரு புலவர்' என்று பதில் எழுதியிருந்தேன்.
விடுமுறைக்கு பின், மீண்டும் பள்ளி திறந்ததும், வகுப்பாசிரியர் அவரவர் விடைத் தாள்களைக் கொடுக்கிற போது, என்னையும் எழுந்திருக்க சொன்னார்.
'திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் என்று உனக்கு தெரியாதா?' என்றார்.
'தெரியும்!'
'பிறகு ஏன், ஒரு புலவர் என்று எழுதினாய்?'
'ஏன் சார்... திருவள்ளுவர் ஒரு புலவர் இல்லையா?'
'அவர், புலவர் தான். நீ ஏன் திருவள்ளுவர் என்று எழுதவில்லை?'
'திருக்குறளை எழுதியது யார்ன்னு தானே கேட்டிருந்தீங்க... எழுதியவர் பேர் என்னன்னு கேட்கலியே...' என்றேன்.
'சரி... உட்கார்!' என்றார், ஆசிரியர்.

'பெருந்தலைவர் காமராஜர்' என்ற நுாலிலிருந்து: திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளூர் கிராமத்தில், காமராஜர் பேசிய போது, ஒலிபெருக்கி சரியாக வேலை செய்யவில்லை. எரிச்சலடைந்த காமராஜர், ஒலிபெருக்கிக்காரரை மேடைக்கு அழைத்து, 'இந்த ஆளோட, 'மைக்' சரியாக வேலை செய்யவில்லை. இனி யாரும் இவர், 'செட்'டைக் கூப்பிடாதீங்க...' என்று சொல்லி விட்டார்.
ஒலிபெருக்கிக்காரர் போராடி, 'மைக்'கை சரி செய்தார். காமராஜர் பேசி முடித்தார்; மக்கள் எழுந்தனர். காமராஜர், ஒலிபெருக்கிக்காரர் முகத்தை பார்த்தார். உடனே, அவரை மீண்டும் மேடைக்கு அழைத்து, மக்கள் கூட்டத்தை பார்த்து, 'எல்லாரும் கேட்டுக்கங்க... இவர், பேசாத மைக்கையும் பேச வைத்து விட்டார். நான் பேசியது உங்களுக்கு நல்லா கேட்டுச்சா?' என்றார். மக்கள், 'ஆமாம்... ஆமாம்...' என்று குரல் கொடுத்தனர்.
உடனே காமராஜர், 'இவரு திறமைசாலி. எந்த நிகழ்ச்சிக்கும், இனி, இவரையே கூப்பிடுங்க...' என்றார். மக்கள் கரவொலி எழுப்பினர். ஒலிபெருக்கிக்காரர், நிம்மதி பெருமூச்சு விட்டார்.
தன் சிறு கோபத்தால் கூட, யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற மனிதாபிமான எண்ணம் காமராஜருக்கு!

'குண்டூசி' இதழிலிருந்து: தமிழ் பத்திரிகை சரித்திரத்தில், முதன் முதலாக கேள்வி - பதில் பகுதியை துவங்கியவர், பி.ஆர்.எஸ்.கோபால். முதலில், 'சில்வர் ஸ்கிரீன்' பத்திரிகையில் இப்பகுதியை துவங்கி, பின், 'குண்டூசி' சினிமா இதழிலும் தொடர்ந்தார். அவரது சுவையான பதில்களில் சில:
கடந்த, 1938 இதழில்: தற்காலம் உள்ள நிலையில், குடும்ப ஸ்திரீகள் சினிமாவிற்கு வரலாமா?
நீங்கள் குறிப்பிடுவது எதை... தற்கால சினிமா உலக நிலையையா அல்லது குடும்ப ஸ்திரீகளிடம் உள்ள நிலையையா?
கடந்த, 1940ல் தமிழில் தயாரிக்கப்பட்ட பல சமூக படங்கள், உருப்படாமல் போனதேன்?
முதலில் சமூகம் உருப்பட்டால் அல்லவா சமூக படங்கள் உருவாகும்!
பிரபல சினிமா நடிகைகள், தங்கள் வீட்டில் குமாஸ்தாக்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்களாமே?
கெட்டது போங்கள்! இவர்களது கணவர்களுக்கு இதைவிட வேறு என்ன வேலை?
தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் இவர்களுக்கெல்லாம், தயை, காருண்யம் இவை எல்லாம் இருக்கிறதாமே, மெய்தானா?
தங்கள் சம்பள விஷயம் ஒன்றைத் தவிர!
சினிமாவில் நடிக்கத் தெரியாதவர்களுக்கு, பாடசாலைகள் ஏதேனும் இருக்கிறதா?
அட, ராமா! நம் சினிமா உலகை வேறு என்ன என்றுதான் நினைத்துக் கொண்டீர்?
தட்ச யக்ஞம், மாயா மச்சீந்திரா மற்றும் அசோக்குமார் முதலிய படங்களில் சில்லரை வேடங்களில் அற்புதமாக நடித்திருக்கும், எம்.ஜி.ஆருக்கு ஏன் பெரிய வேடங்கள் கொடுக்கக் கூடாது?
நாமெல்லாம் சில்லரைக்கு தவித்துக் கொண்டிருக்கும் போது, ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு சில்லரை வேடம் தாராளமாகக் கிடைக்கிறதே, அதைச் சொல்லும் சுவாமி!
சினிமாவில் நடிக்கும் பெண்கள், இயக்குனர்களின் கைப் பொம்மைகள் என்று கேள்விப்படுகிறேன்...
சில சமயங்களில், இந்த பெண்களிடத்தில், இயக்குனர்கள் தலையாட்டி பொம்மைகளாய் இருப்பதுண்டு.
'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி'யில், சிந்தாமணி, 999 தலைகளை தானே வாங்கினாள். ஆயிரம் தலை வாங்கி என்று அவளை சொல்வது சரியா?
தவறு தான். ஆனால், இப்போதே விளம்பரங்களில் இப்படத்தின் பெயரை எழுதுவதற்கு, மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்க, 'தொள்ளாயிரத்து தொண்ணுாற்று ஒன்பது தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்று எழுதுவது என்றால் என்ன பாடுபட வேண்டியிருக்கும்!

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-செப்-201807:15:04 IST Report Abuse
 nicolethomson சில நேரங்களில் காமராஜை சாமி படத்தில் வரும் கோவக்கார பெருமாள் பிச்சை ரேஞ்சில் பார்க்க வைக்குது அவரோட கோவம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X