ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் இது:
ஜப்பான் நாட்டில், பெரும்பாலான வீடுகள் மரத்தால், இரண்டு கனமான கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர், தன் வீட்டை புதுப்பிப்பதற்காக, மரத்தாலான சுவரை பெயர்த்து எடுத்தார்.
அப்போது, இரண்டு கட்டைகளுக்கு இடையில், ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது, எப்படி சிக்கியது என்று ஆராய்ந்தார். வெளிப் பகுதியிலிருந்து ஆணி அடிக்கும்போது, அந்த ஆணி, பல்லியின் ஒரு காலில் இறங்கி இருக்கிறது.
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது; அந்த ஆணி அடித்து, குறைந்தது மூன்று ஆண்டுகள் இருக்கும். எப்படி இந்த பல்லி, மூன்று ஆண்டுகள் உயிருடன் இருந்தது என்ற சந்தேகம் வர, மேற்கொண்டு வேலை செய்யாமல், அந்த பல்லியை கண்காணித்து வந்தார்.
சிறிது நேரம் சென்றதும், இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டார். அந்த பல்லி, தன் வாயிலிருந்து உணவை எடுத்து, சுவரில் சிக்கிக் கொண்டிருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்து ஆச்சரியமடைந்தார். மூன்று ஆண்டுகளாக, சுவரில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்துள்ளது, இன்னொரு பல்லி.
சாதாரண ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா... 10 மாதம் சுமந்த, தாய் - தந்தைக்கு, அவர்கள் முடியாத காலகட்டத்தில், நம்மால் உணவளிக்க முடியாதா...
- ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
27-செப்-201812:02:51 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஏமாந்தால் எப்படி ஊரான்ஸோத்தை முழுங்கறதுன்னு பிளான் பண்ணியே நாசமாபோறவன் தான் மனுஷன், நலவ்வர்களொருபோதும் இந்தமாதிரி ஈனத்தொழில் செய்யவேமாட்டானுக, ஒரு சமயம் கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொன்னார் ஒருவனுக்கு ஒதுங்க ஒரு வீடு (நிழல்) போதுமே என்னாத்துக்கு வாடகை வரும் என்று பத்துவீடுகள் வச்சுண்டு அவஸ்தைப்படணும் என்கிறார் அதற்க்கு கொடியே இருந்த ஒருமனிதன் சொன்னது இந்தய்யாவுக்கு ஒண்ணுமே வேண்டாம் பிள்ளையாக்குட்டியா என்று முனகினான் அதுவும் அவர் காதுலே விழாமால் போவுமா ?அடுத்துவந்தது பதில் இப்படி சொல்லும் நபருக்கு எவ்ளோ பிள்ளைகள் தெரியுமா வகைக்கு ரெண்டு பொண்ணுகள் கணவர் வீட்டுக்கு போயாச்சு பிள்ளைகள் வேலைக்குப்போகாமல் ஜாலியா இருக்காங்க என்றதும் அந்த நபர் அடுத்தநொடி எழுந்துபோயிட்டார் இது நடந்தது ஹிந்து ஹை ஸ்கூல் மைதானத்தில் 1977
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
25-செப்-201812:57:29 IST Report Abuse
raghavan அடுத்த வீட்டை ஆட்டையை போட்டதை கேட்டுத்தான் நமக்கெல்லாம் பழக்கம்..அப்படித்தானே அரசியல் புள்ளிகள் கோடீஸ்வர கோமான்களாக இருக்கிறார்கள். இவர்கள் பேச்சை கேட்க, நாள் முழுக்க வெயிலில் உக்கார்ந்து கருவாடாகி போனால் ஒரு குவார்ட்டரும், பிரியாணி போட்டாலும் கொடுப்பார்கள். பல்லிகளால் இதை போல செய்து காட்ட முடியுமா??
Rate this:
Share this comment
Cancel
nabikal naayakam - கேவலமான தூத்துக்குடி,இந்தியா
23-செப்-201811:01:38 IST Report Abuse
nabikal naayakam பல்லி மூன்று ஆண்டுகள்கூட உயிர்வாழுமா என்ன?
Rate this:
Share this comment
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
25-செப்-201808:47:15 IST Report Abuse
Rangiem N Annamalaiஅதிக பட்சம் 34 வருடம் .3 வருடம் கணக்கில் இல்லை .நிச்சயம் வாழும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X