அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2018
00:00

அன்பு ஆன்ட்டிக்கு —
நான், 26 வயது பெண். படிப்பு: பி.ஏ., திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் வயது, 30. ஆசிரியர் பணியில் உள்ளார். பெரியப்பா - பெரியம்மா, அத்தை - மாமா, சித்தப்பா - சித்தி என்று ஒரே கூட்டு குடும்பமாக வாழ்ந்தவள் நான். என்னுடைய பிறந்த வீடு, எப்போதுமே கலகலப்பாக இருக்கும். ஒரு சினிமாவிற்கோ, திருவிழாவிற்கோ போவதாயிருந்தால் கூட, குறைந்தபட்சம், 25 பேராவது இருக்கும்; ஊரே எங்களை பார்த்து அதிசயிக்கும்.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும், உறவுமுறை கொண்டாடியே பழகுவோம். யார் வீட்டிலும் உரிமையாக நுழைந்து, விரும்பியதை கேட்டு வாங்கி, சாப்பிடுவோம். சாதாரண விவசாய குடும்பம் தான் எங்களுடையது. வருமானம் அதிகம் இல்லை என்றாலும், பற்றாக்குறை இருந்ததில்லை. ஆடு, மாடு, கோழி வளர்த்து, செலவை ஈடுகட்டி விடுவோம்.
என் கணவர், அவர் வீட்டில் ஒரே மகன். எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள நகரத்தில் தான் வாழ்கின்றனர். சின்ன வீடு தான். சாப்பாடு, துணிமணி என்று எதிலும் குறை இல்லை. ஆனால், தனிமை என்னை ரொம்பவே பாதிக்கிறது.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன், மாமனார் - மாமியார் அதிக பழக்கம் வைத்துக் கொள்வதில்லை. என் கணவரும் அதிகமாக பேச மாட்டார்; தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்.
நாள் முழுவதும் வீட்டில் அடைந்து கிடப்பது, 'போர்' அடிக்கிறது என்றால், 'புத்தகம் படி, 'டிவி' பார்...' என்கின்றனர்.
என் கணவர் நல்லவர் தான். குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்று சமாதானப்படுத்துகிறார். வேலைக்கு செல்லலாம் என்றால், அதற்கும் மறுக்கிறார். வீட்டிலிருந்தபடியே ஏதாவது கைத்தொழில் செய்யலாம் என்றால், அக்கம்பக்கம் யாருமே பரிச்சயம் இல்லாததால், எப்படி கற்றுக்கொள்வது என்றும் தெரியவில்லை.
பிறந்த வீட்டுக்கு செல்லும்போது தான், நான் சந்தோஷமாக இருப்பது போல் உணர்கிறேன். எனக்கென்னமோ, இதே சூழ்நிலையில் இருந்தால், மனநோயாளி ஆகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் அம்மா.
இப்படிக்கு,
அன்பு மகள்.


அன்பு மருமகளுக்கு —
கிராமத்தில், கையில் ஒரு ரூபாய் இல்லாவிட்டாலும், கூட்டுக் குடும்பத்தை மாதக்கணக்கில் நடத்திச் செல்ல முடியும். கைக்குழந்தைக்கு ஏதாவது நோய் என்றால், குழந்தை நல மருத்துவருக்கு ஆயிரம், ரெண்டாயிரம் அழாமல், பாட்டி வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்.
குடும்ப பாரத்தை தானே சுமக்காமல் மற்ற குடும்ப அங்கத்தினர்களின் முதுகில் இறக்கி வைக்கலாம். பெரியவர்களின் அனுபவங்கள், கூட்டுக் குடும்ப பிரச்னைகளை எளிதில் தீர்க்கும்.
எல்லா வகை உறவுகளுடன் அன்பை பகிர்ந்து கொள்ள முடியும். கூட்டுக் குடும்ப அங்கத்தினர்களுக்கு சகிப்புத்தன்மையும், பொறுமையும் பெருகும். இதெல்லாம் கூட்டுக் குடும்பத்தின் சாதகமான அம்சங்கள்.
கூட்டுக் குடும்பங்களில் பாதகமான அம்சங்களும் சில இருக்கவே செய்கின்றன. கூட்டுக் குடும்பமோ, தனிக் குடும்பமோ சூழ்நிலையை பொறுத்து, நாம் தான், மாறிக்கொள்ள வேண்டும்.
மருமகளே... தனிக் குடித்தனம் பண்ணுவதில் இருக்கும் சாதகமான அம்சங்கள்: நல்லதோ, கெட்டதோ எதையும் சுயமாய் சிந்திக்கும் சுதந்திரம் இருக்கும்... தனிக்குடித்தன குழந்தைகளுக்கு ஆளுமை வளர்ச்சி அபரிமிதமாய் இருக்கும்...
பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும்... 'நாம் இருவர், நமக்கு இருவர்' என்கிற குடும்ப கட்டுப்பாடு தாரக மந்திரம் ஓங்கி ஒலிக்கும்... சொத்துகள் நேரடியாக பிரித்து கொடுக்கப்படும்...
தலைமை பண்புடன், தனி மனித பொறுப்புணர்ச்சியும் பிரமாண்டமாய் வளரும். தனிக்குடித்தன அங்கத்தினர்களில் யாரும் உயர்த்தி, தாழ்த்தி இல்லை; யாரையும் நம்பி சார்ந்திருக்காமல், சொந்த காலில் நின்று ஜெயிக்கும் மனோபாவம் தோன்றும்.
வந்ததை வரவில் வை, சென்றதை செலவில் வை மருமகளே... தனிக்குடித்தனத்தை குறை கூறாமல் சந்தோஷமாக வாழப் பார்.
கணவரிடம் பேசி, ஏதாவது ஒரு வேலைக்கு போ அல்லது கைத்தொழில் கற்றுக்கொள்; அண்டை அயலாரிடம் நட்பு பாராட்டு.
கூட்டுக் குடும்பத்தில் உனக்கு மிகவும் பிடித்த ஒரு அங்கத்தினரை அழைத்து, ஒன்றிரண்டு மாதம் உன்னுடன் வைத்துக்கொள்... பண்டிகை, திருவிழா நாட்களில் கிராமத்து கூட்டுக் குடும்பத்தில் ஐக்கியமாகு.
நேரில் சந்திக்க முடியாத கூட்டுக்குடும்ப அங்கத்தினர்களுடன், கைபேசி மூலம் அளவளாவு... ஒரே நேரத்தில் கூட்டுக் குடும்ப சந்தோஷங்களையும், தனிக்குடித்தன சந்தோஷங்களையும் தேர்ந்தெடுத்து, அனுபவி.
குழந்தைகளுக்கு உறவுமுறை முக்கியத்துவங்களை சொல்லிக் கொடு.கூட்டுக் குடும்பத்தை பிரிந்து வந்ததில், வருத்தத்தையோ, தனிக்குடித்தனம் பண்ணுவதில் சந்தோஷத்தையோ வெளிக்காட்டாதே.
கூட்டுக் குடும்பத்தில் இருந்தபோது, கிடைத்த நல்ல அனுபவங்களையும், கசப்பான பாடங்களையும், தனிக்குடித்தனத்தை சிறப்பாக நகர்த்த பயன்படுத்து.
வீட்டில் தோட்டம் போடு; தனிமையைப் போக்க, நாயோ, பூனையோ, கிளியோ வீட்டில் வளர்.
மாமனார், மாமியாரிடம் நெருக்கத்தை வளர்த்துக் கொள். இரவு உணவுக்கு பின், கணவருடன் ஒரு மணி நேரமாவது மனம் விட்டு பேசு. 'டிவி'யில், தமிழ் சீரியல்களை தவிர்த்து, 'டிஸ்கவரி' மற்றும் 'நேஷனல் ஜியோகிராபிக்' சேனல்களை பார். நல்ல புத்தகங்களை படி.
கூடுகள் மாறினாலும், பறக்கும் சுதந்திரத்தை யாராலும் சிறை பிடிக்க முடியாது மருமகளே!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay - Bangalore,இந்தியா
01-அக்-201808:03:54 IST Report Abuse
Vijay ஓகே ஆண்ட்டி ...
Rate this:
Cancel
Mahendra Babu R - Chennai,இந்தியா
01-அக்-201803:35:35 IST Report Abuse
Mahendra Babu R பிரிவோம் சந்திப்போம்
Rate this:
Cancel
Paul -  ( Posted via: Dinamalar Android App )
30-செப்-201810:55:00 IST Report Abuse
Paul தனிக்குடித்தனத்தின் சிறப்புகளை சொன்னதற்கு மிக்க நன்றி மேடம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X