அறிவுக்கும் தொழிலுக்கும் வந்தனம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 அக்
2018
00:00

தமிழகத்தில், விமரிசையாக கொண்டாடப்படுவது, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. நவராத்திரியில் கொண்டாடப்படுகிறது.
ஆற்றலின் இருப்பிடம் பராசக்தி! அவரை வழிப்பட்டால், வல்லமை உண்டாகும். வலிமையானவனுக்கு, சாதாரண புல்லும் கூட ஆயுதம். இதை, 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பர்.
தொழில் செய்வதற்கான கருவியே ஆயுதம்! புத்தகம், எழுது பொருட்கள், கல்விக்கு அடிப்படை. தராசு, படிக்கல், வியபாரத்துக்கு அடிப்படை! இவ்வாறு, அவரவர் ஆயுதங்களை, சரஸ்வதியாக கருதி, பூஜையில் வைத்து வழிபடுவதே ஆயுதபூஜை.

அழகு ரூபம்!
சரஸ்வதி தேவி, வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் அமர்ந்து, நான்கு கைகளில் ஒன்றில் அட்சரமாலையும், மற்றொன்றில் ஏடும், மற்ற இரண்டும் வீணையை மீட்டும் வகையில், எழிலாக அமர்ந்திருப்பார்.
பேச்சுக்கலையின் தேவதை என்பதால், 'வாக் தேவி' என்ற பெயரும் உண்டு. சரஸ்வதிதேவி கரத்தில் உள்ள அட்சரமாலை, ஆன்மிகத்தையும், ஏழு அறிவையும், அட்சர மாலையில் உள்ள மணிகள், கலைகளின் எண்ணிக்கையையும் குறிக்கும். வீணை, இசை கலையை உணர்த்துகிறது.
'இசை' என்ற சொல்லுக்கு, இசைய வைப்பது என்று பொருள்! வீணை இசைக்கருவி, பண்டை காலம் முதலே வாசிக்கப்பட்டு வந்தாலும், 17ம் நுாற்றாண்டில் தான், தற்போதைய உருவத்தை அடைந்தது. ரகுநாத நாயக்க மன்னர், தஞ்சையை ஆட்சி செய்த காலத்தில் தான், இந்த வடிவம் பெற்றது. பலா மரத்தை செதுக்கி, இதை செய்கின்றனர். தஞ்சாவூர் வீணை தான் பிரசித்தி பெற்றுள்ளது. கலைமகளின் வாகனம் அன்னப்பறவை. அது, வெண்மையின் அம்சமாக திகழ்கிறது.


சரஸ்வதி தேவி!
நவராத்திரி, பெண்மையை போற்றும் திருவிழா! பராசக்தியின் வீரம், வெற்றியை போற்றும் விதமாக, விஜயதசமியையும் கொண்டாடுகிறோம்.
சரஸ்வதிதேவிக்கு, பூஜை செய்வது என்பது, கல்வி அறிவை, அதன் வழியாக கிடைக்கும் ஞானத்தை பெற்று, மற்றவர்களுக்கும் தந்து, சிறப்பாக வாழ்வதற்காகத் தான்.
சரஸ்வதி, மகாலட்சுமி, பராசக்தியை வணங்கி, கல்வி, செல்வம், வீரம் பெறுவதுடன், அவற்றை பயன்படுத்தி, பூமியை அற்புதமாக்க வேண்டும் என்பதற்கும் தான்.
பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை, அறிவாலும், உறுதியாலும் தான் தீர்க்க முடியும். கல்வியுடன், அனுபவ அறிவையும் சேர்த்து சமயோஜிதமாக, மன உறுதியுடன் அணுகி, பெண்கள் வெல்ல வேண்டும்.

ஜின ஐஸ்வர்யா!
சமண சமயத்தில், சுருதி தேவி, வாக் தேவி என்றும், ஜின ஐஸ்வர்யா, ஜின வாணி என்றும் சரஸ்வதி தேவியை அழைக்கின்றனர். ஜைனர்கள், 16 வித்யா தேவியருடன், சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர்.
புத்த மதத்தினர், மூன்று முகம், ஆறு கரங்கள் கொண்ட, 'மன்சூனி' என்ற பெயரால், சரஸ்வதி தேவியை வணங்குகின்றனர். மகா சரஸ்வதி, ருர்ய சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர ஜீணா சரஸ்வதி என்றும் வணங்குகின்றனர்.


துவங்கிடுவோம்!
அம்பிகை வெற்றி பெற்ற, விஜயதசமி நாளில், செய்யும் அனைத்துக் காரியங்களும், அம்பிகை அருளால் வெற்றி பெறும்.
குறிப்பாக, கல்வி துவக்கம் முதல், கடை திறப்பு விழா வரை, அனைத்தும் செய்யலாம். மூன்று நாட்கள் துர்க்கை வடிவத்திலும், மூன்று நாட்கள் லட்சுமி வடிவத்திலும், மூன்று நாட்கள் சரஸ்வதி வடிவத்திலும் காட்சி தரும் அம்பிகையை, கை கூப்பி, வணங்கி, கவசங்கள் பாடினால், எடுக்கும் காரியங்கள் அனைத்தும், இனிதே வெற்றி பெறும்.


பூஜை பலன்!
நவராத்திரியில், ஒன்பது நாட்களிலும், சிலரால், தொடர்ந்து பூஜை செய்ய இயலாது. அவர்கள், கடைசி, மூன்று நாட்களாகிய, சப்தமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் பூஜை செய்தால், நவராத்திரியின், ஒன்பது நாட்களில், பூஜை செய்த பலனை அடைவர். அதையும் செய்ய இயலாதவர், அஷ்டமி தினத்தன்று பூஜை செய்தால், செல்வம், ஆனந்தம், சவுபாக்கியம் அனைத்தையும் அடைவர்.

சகல கலைகள் அருளம்மா!
ஞான வடிவமாய், கல்வி சொரூபமாய், திகழும், கலைமகள் சரஸ்வதிதேவி. இவர், சகல கலைகளுக்கும் அதிபதி! சரஸ்வதி தேவியை, இந்து சமயத்தில் மட்டுமின்றி, சமண, பவுத்த சமய பக்தர்களும் வணங்குகின்றனர்.
பல நாடுகளிலும், சரஸ்வதி வழிபாடு உள்ளது. சரஸ்வதிதேவிக்கென பூஜை நடத்தி, பிரமாதமாக கொண்டாடுவது, இந்தியாவின், தென்மாநிலங்களில் தான்!

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X