அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2018
00:00

அன்புள்ள அம்மா —
நான், 27 வயது பெண். பெற்றோரை சிறு வயதிலேயே இழந்தவள். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். எங்கள் இருவரையும் கடமைக்காக வளர்த்தார், உறவினர் ஒருவர். எப்படியோ படித்து, நானும், அண்ணனும் வேலை தேடிக் கொண்டோம்.
என் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தார், அந்த உறவினர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின், என் அண்ணனே, எனக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் செய்து வைத்தான்.
என் கணவர், கம்ப்யூட்டர் இன்ஜினியர்; துபாயில் வேலை செய்கிறார். அவருக்கு மூன்று தங்கைகள். எனக்கும், துபாயிலேயே வேலை வாங்கிக் கொடுத்து, அழைத்து போவதாக கூறினார். ஆனால், அவரது பெற்றோரும், தங்கைகளும் தடுத்து விட்டனர்.
நாங்கள் அப்படி சென்று விட்டால், என் கணவரது வருமானம் கிடைக்காது; உரிமையோடு எதையும் அனுபவிக்க முடியாது என்று நினைத்து, எங்களை பிரித்து வைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.
இதற்கிடையில், எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். தினமும் காலையிலிருந்து மாலை வரை, மாடாக உழைத்தாலும், ஏதாவது குறை கூறி கொண்டிருப்பர்.
வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் போனில் பேச முடியாது; கடிதமும் எழுத முடியாது. கண் கொத்தி பாம்பாக கண்காணித்தபடியே இருப்பர்.
இவர்களது, 'டார்ச்சர்' தாங்க முடியாமல், ஒருமுறை கணவர் இந்தியா வந்த போது, தனியாக வீடு பார்த்து, வைக்க சொன்னேன்; அவரும் வீடு பார்த்து, தனிக்குடித்தனம் வைத்து, துபாய் திரும்பினார்.
மாதந்தோறும், என் மாமனார் பெயருக்கு, 70 ஆயிரம் ரூபாய் அனுப்புவார். ஐயாயிரம் ரூபாய் மட்டுமே எனக்கு கொடுத்து, மீதியை அவர்களே வைத்துக் கொள்வர்.
ஐயாயிரத்துக்குள் வீட்டு வாடகை, கரன்ட் பில் என்று எப்படி குடும்பம் நடத்துவது என்று கேட்டால், 'வேலைக்கு போய் சம்பாதித்துக் கொள்...' என்று அலட்சியமாக கூறுகின்றனர்.
நான் வேலைக்கு செல்ல தயார் தான். ஆனால், இரண்டரை வயதாகும் குழந்தையை விட்டு செல்ல வேண்டுமா? நான் தான், அம்மா - அப்பா பாசம் இல்லாமல், அனாதையாக வளர்ந்தேன். என் மகனும், அப்படி வளர வேண்டுமா என்று தோன்றுகிறது.
எனவே, வேலைக்கு போவதை தள்ளி போட்டு வருகிறேன். அவ்வப்போது அண்ணன் தான், பண உதவி செய்து வருகிறான்; அவனையும் சிரமப்படுத்த விரும்பவில்லை.
கணவரிடம் கூறினால், 'கொஞ்ச காலம் அவர்களை அனுசரித்து போ... தங்கைகளுக்கு திருமணமாகி விட்டால், எல்லாம் சரியாகி விடும்...' என்கிறார்.
இந்த வயதிற்குள் நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டேன். இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான், வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பது. பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது. நல்ல ஆலோசனை கூறுங்கள் அம்மா.

அன்பு மகளுக்கு —
கணவன் வெளிநாட்டில் வேலை செய்ய, மனைவி, உள்நாட்டில் உழல்வதை, இருதரப்பு உறவுகளும் உணர்வதில்லை. உறவுகளுக்கிடையே, இங்கே பணம் தான் மிகப்பெரிய விளையாட்டை விளையாடுகிறது.
ஒரு ஆண், வெளிநாட்டு வேலைக்கு செல்லும் முன், கீழ்கண்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்...
அரசு அங்கீகாரம் பெற்ற, ஏஜன்ட் மூலம் பணிக்கு செல்கிறோமா... வேலை வாய்ப்பு விசாவா, டூரிஸ்ட் விசாவா... வெளிநாட்டுக்கு செல்ல, செலவாகும் பணத்தை முதலீடாக கொண்டு, இருக்கும் இடத்திலேயே சுயதொழில் செய்ய முடியாதா... வெளிநாட்டு வேலைக்கு போனால், மனைவி, மகனையும் உடன் அழைத்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா... என்றெல்லாம் யோசிக்க வேண்டும்.
உடன் அழைத்துச் செல்ல வாய்ப்பில்லாத பட்சத்தில், சம்பாதிக்கும் பணத்தை, மூன்று பங்காக பிரித்து, ஒரு பங்கை, தனக்கும், பெற்றோர் மற்றும் மனைவிக்கும் அனுப்ப திட்டமிடுதல் நலம். உரிய இடைவெளியில் இந்தியாவுக்கு வந்து, மனைவி, குழந்தைகளுடன் தங்கி செல்வது சிறப்பு. தான் இல்லாத சமயத்தில், அனைத்து விஷயங்களிலும் மனைவி நல்லவிதமாக நடந்து கொள்வாள், என்ற நம்பிக்கை வேண்டும்.
வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஆண், 10 ஆண்டுக்கு மேல், அங்கு வேலை பார்க்கக் கூடாது.
கணவரிடம் பேசி, பெற்றோருக்கும், உனக்கும் தனியாக பணம் அனுப்ப சொல். தனியாக வங்கி கணக்கு துவங்கு. பணம் அனுப்ப, பெற, செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்.
அண்ணன் அனுமதித்தால், மகனுடன், அண்ணன் வீட்டோடு இருக்கலாம். தயங்காமல் வேலைக்கு போ. பண பிரச்னைதான் வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களின் மனைவியரை, பல சமயங்களில் தடம்புரள செய்கிறது. வேலைக்கு செல்லும் பெண்களின் குழந்தைகள், தாய் பாசம் இல்லாமலா வளர்கின்றனர்... பணிக்கு செல்லும் நேரம் தவிர்த்து, மீதி நேரங்களில் குழந்தையுடன் இருக்கலாமே...
தினமும் வீடியோ கால் போட்டு, 'வாட்ஸ் - ஆப்' நம்பரில் கணவரிடம் பேசு. பிரச்னைகளை காது கொடுத்து கேள். உன் பிரச்னைகளை புலம்பாமல், தகவலாய் சொல்.
வேலைக்கு சென்றபடியே தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் உயர் கல்வி படி. சுய பச்சாதாபம் கொள்ளாதே.
திருமண வாழ்க்கையில் ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. பிரச்னைகளை சமாளிக்கும் விதத்தில் தான் ஒரு பெண்ணின் தனித்தன்மை வெளிப்படுகிறது. நீ கோழை அல்ல.
பிரச்னைகள், ஜல்லிக்கட்டு காளைகள் போன்று. காளைகளை எதிர்கொண்டு, கொம்புகளை பிடித்து மடக்கி, வீழ்த்த வேண்டும்.
மாமனார், மாமியார், நாத்தனார்கள் மீது அன்பு காட்டு. ஆனால், பயப்படாதே!
குப்பையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண், குரூப்1 தேர்வு எழுதி, பெரிய அதிகாரியாக பணிபுரிகிறாள். பெற்றோரை தானே இழந்தாய், நம்பிக்கையை இழக்கவில்லையே...
அண்ணனுடன் தகவல் தொடர்பில் இரு. வேலைக்கு செல், குழந்தையை கொஞ்சு, ருசியாக சாப்பிடு, ரேடியோ கேள். வாரத்துக்கு ஒருமுறை கோவிலுக்கு போ. மல்லிகை பூ கட்டி எடுத்து போய், நாத்தனார் தலையில் வை. நல்ல புத்தகங்களை வாசி. நன்னடத்தை தோழியருடன் பழகு. ஆண்களுடன் சற்று தள்ளியே நில்.

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gurusamy Kaladi - Sattur,இந்தியா
22-அக்-201817:06:11 IST Report Abuse
Gurusamy Kaladi K.Gurusamy Sattur - இந்தியா அம்மா சகுந்தலா அவர்களின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.
Rate this:
Cancel
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
22-அக்-201806:01:32 IST Report Abuse
Thalaivar Rasigan இந்த பெண் மிக சுயநலமானவர் என்று தெரிகிறது. தன்னையும் - அண்ணனையும் வளர்த்த உறவினர் பற்றி இவர் கூறியது கவனிக்கத்தக்கது.
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
21-அக்-201816:11:21 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> like this maany inlaaws are living and troubling their daughter inlaws is true, it is bettr to go for a job and earn to save you and your son , or you ve to fight and get money from your inlaws .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X