இலக்கிய உளவியலாளர்! | பட்டம் | PATTAM | tamil weekly supplements
இலக்கிய உளவியலாளர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 நவ
2018
00:00

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
11.9.1821 - 9.2.1881
மாஸ்கோ, ரஷ்யா.


உலகின் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமானவர். மனித மனத்தின் சிக்கலான உணர்வுகளையும், வாழ்வின் திருப்பங்களையும் எழுத்து வழியாக நுட்பமாக விவரித்தவர்; ரஷ்ய மொழியில் இவர் எழுதிய நூல்கள், மொழி, இனம், கலாசாரங்கள் கடந்து, மனித உறவுகளைப் புரிந்துகொள்ள இன்றும் ஒரு கருவியாக இருக்கிறது. இவ்வாறு, உலக அளவில் வாசகர்கள் கொண்டாடும் இலக்கியவாதியாக அறியப்படுகிறார் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி.
சிறுவயதில் தாயைப் பறிகொடுத்து, வலிப்பு நோய் தாக்கி, தந்தையின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அவரது வாழ்க்கை முழுக்கத் துயரங்கள் இருந்ததாலோ என்னவோ, துன்பியல் நிரம்பிய காவியங்களை அதிகம் படைத்தார்.
புரட்சிக்கான குற்றச்சாட்டில் நண்பர்களுடன் கைதாகி கடுங்காவல் தண்டனை கிடைக்கப் பெற்றார். சிறையில் அவருக்குக் கிடைத்த தனிமையும் அனுபவங்களும், பின்னாளில் அவரது படைப்புகளுக்கு உயிரூட்டின. அவர் சந்தித்த மனிதர்கள் கதைகளில் உயிர் பெற்றார்கள்.
தோல்வி, ஏமாற்றம், குடும்பப் பிரச்னை, நோயுற்ற உடல், கடன், சூதாடும் பழக்கம் என, அத்தனையிலும் ஃபியோதர் தோல்வி அடைத்திருந்தாலும், எழுதுவதில் வெற்றி அடைந்தார். அவரது படைப்புகள் மக்களிடையே நல்ல பாராட்டுகளைப் பெற்றன. ரஷ்ய இலக்கிய உலகுக்கு வெற்றிகரமாக அறிமுகமானார். கண்ணீரும் கவலையுமாகக் கடந்து வந்த வாழ்க்கையின் முதல் வெற்றி, அவருக்கு ஆனந்தக் கண்ணீரைத் தந்தது.
அறிவியலாளர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்குத் தூண்டுதலாக தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் இருந்ததாகச் சொன்னார். இவரது கதாபாத்திரங்கள் மிகவும் உதவியாக இருந்தன என்று உளவியல் அறிஞர் ஃபிராய்டு தெரிவித்திருக்கிறார். இவ்வாறு, பல அழியாப் படைப்புகளுடன் தீர்க்கதரிசியாகப் போற்றப்படுகிறார் தஸ்தயேவ்ஸ்கி.

முக்கியமான படைப்புகள்
* குற்றமும் தண்டனையும்
* அசடன்
* அசுரர்கள்
* கரமசோவ் சகோதரர்கள்
* வெண்ணிற இரவுகள்
* சூதாடி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X