கதைகளின் வழியே படிக்க விரும்புகிறோம் | பட்டம் | PATTAM | tamil weekly supplements
கதைகளின் வழியே படிக்க விரும்புகிறோம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 நவ
2018
00:00

பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்கள் எல்லாமே அவசியமானவைதான். அதே நேரம் அவை எல்லாமே சுவாரசியமாக இருக்கின்றவனா? மாணவர்கள் தங்களால் கற்றுக்கொள்ள முடியாத பாடங்களை, 'போர்' என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். இதுதொடர்பாக, ''எந்தப்பாடம் போர் என நினைக்கிறீர்கள், அதைக் கற்க மாற்றுவழி என்ன?'' என்று கேட்டிருந்தோம். திண்டுக்கல் மாவட்டம், பழநி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.

எஸ். இமாஜோயலின் (9ஆம் வகுப்பு)
வரலாறு தான் செம போர். எப்பவோ யாரோ செய்த சாதனைகளை, இன்று ஏன் படிக்கிறோமென்று தோன்றும். ஆண்டுகளை நினைவு வைத்துக் கொள்வதும் கடினமாக உள்ளது. இப்பாடத்தைக் கதைபோல நடத்தினால், ஒருவேளை பிடிக்கலாம்.

மு. நந்தகுமார் (10ஆம் வகுப்பு)
இயற்பியல் பாடம் இருக்கு பாருங்க. அப்பப்பா, செம போர். எவ்வளவு தான் மனப்பாடம் செய்தாலும், அதில் பார்முலாவை முழுமையாகச் சொல்வது நமக்கு மிகவும் கடினம். வெறும் பாடமாக நடத்திக்கொண்டிருக்காமல், இயற்பியல், வேதியியல் பாடங்களைச் சோதனை மூலம் செஞ்சு காட்டினால், ஞாபகம் வைத்துக்கொள்வது எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஞா. ஆல்வின் (9ஆம் வகுப்பு):
எனக்கு வேதியியல் பாடம் ரெம்ப போர் அடிக்கும். ஏனெனில் அந்தப் பாடத்தில் சமன்பாடுகள், எலக்ட்ரான் முறைகள் எனப்படிக்கும்போது, வேப்பங்காய் போல கசக்கிறது. அதேசமயம், தமிழ்ப்பாடம் தாய்மொழி என்பதால், கற்கண்டுபோல இனிப்பாக இருக்கிறது.

பா. வேல்முருகன் (10ஆம் வகுப்பு)
எனக்கு வேதியியல் பாடமென்றாலே ஆகாது. அதில் சமன்பாடுகள், விதிமுறைகள் என நிறைய சொல்றாங்க. படிக்கப் புத்தகத்தை எடுத்ததும், தலைசுற்றி தூக்கம் தான் வருது. என்ன பண்றதுன்னே தெரியல!

சு. அக்ஷயா (9 ஆம் வகுப்பு)
குடிமையியல் பாடம் தான் எனக்கு ரொம்ப போர். அதில் சொல்லும், அரசியல் சட்டதிட்டங்கள், இன்றைய அரசியலுக்குச் சம்பந்தமில்லை. மனப்பாடம் செய்யவும் முடிவதில்லை. புரிந்து படிக்கணும் என்றால், சம்பவங்கள், கதைகள் மூலம் பயிற்றுவிக்கலாம்.

கு.ரம்யா (10ஆம் வகுப்பு)
எனக்கு எந்தப் பாடமும் போர் இல்லை. நமக்குள் இருக்கும் தயக்கமும், முடியாது என்ற நினைப்பும்தான் காரணம். நீங்கள், ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, எழும் சந்தேகங்களை உடனே கேட்டால், எந்தப் பாடமாக இருந்தாலும் தெளிவு கிடைக்கும். பாடங்களைப் புரிந்து படிக்கும்போது, நிச்சயம் போர் அடிக்காது, கஷ்டமாகவும் தெரியாது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X