இதப்படிங்க முதல்ல!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
00:00

தமிழுக்கு வரும், இந்திப்படம்!

இந்தியில் சல்மான் கான் நடித்து, 300 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த படம், தபாங். அடுத்து, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில், "ரீ-மேக்' ஆகி வரும் இப்படம், தமிழிலும், "ரீ-மேக்' ஆக உள்ளது. தனுஷ் நடித்த, உத்தம புத்திரன் பட நிறுவனம், அப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கி இருப்பதோடு, முன்னணி ஹீரோக்களிடமும், "கால்ஷீட்' கேட்டு வருகிறது.
— சினிமா பொன்னையா.

பானிபூரி விற்கும் சந்தானம்!

வந்தான் வென்றான் படத்தில், பானிபூரி விற்பவராக நடித்துள்ளார் சந்தானம். இதற்காக, பீச் மற்றும் சாலைகளில், பானிபூரி விற்பவர்கள் போன்று, படம் முழுக்க ஒரு கைவண்டியுடன் சுற்றுகிறார். அதோடு, வட மாநில இந்தியர்களைப் போன்று, இந்தி கலந்த தமிழில் டயலாக் பேசி, வயிறு குலுங்க சிரிப்பை கொளுத்தி போட்டுள்ளார்.
— சி.பொ.,

அசின் நடிக்கும் அடுத்த தமிழ் படம்!

விஜய்யுடன் நடித்த காவலன் படத்துக்குப் பிறகு, மொத்த கவனத்தையும் மீண்டும் இந்திக்கே திருப்பி விட்டார் அசின். அவரிடம், "உங்களது அடுத்த தமிழ் படம் எப்போது?' என்று கேட்டால், "கிடப்பில் கிடக்கும், சென்னையில் ஒரு மழைக்காலம் படம், மீண்டும் தூசி தட்டப்பட்டால், அப்படமே என் அடுத்த தமிழ் படமாக இருக்கும்...' என்கிறார். சொன்னால் போலக் கேட்டால், சுட்டாற் போலக் கொடுப்பேன்.
— எலீசா.

ஒரே பெயரில் இரண்டு நடிகர்கள்!
நடிகர்கள் விமல், விதார்த் இருவரும கூத்துப்பட்டறையில் ஒன்றாகவே நடிப்புப் பயிற்சி எடுத்தவர்கள். அதேபோல், ஒரே ஆண்டில், களவாணி என்ற, "ஹிட்' படத்தை விமலும், மைனா என்ற, "ஹிட்' படத்தை விதார்த்தும் கொடுத்துள்ளனர். இந்த இருவருக்கும், இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அதாவது, இருவரது நிஜப் பெயரும் ரமேஷ் என்பது தான்.
— சி.பொ.,

ஜெனிலியா உருக்கமான நடிப்பு!

சந்தோஷ் சிவன் இயக்கும், உறுமி என்ற மலையாளப் படத்தில் நடித்து வரும் ஜெனிலியா, அப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகளில் நடித்த போது, கிளிசரின் போடாமலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதற்கு காரணம், "அந்த கதை ரொம்பவே உருக்கமாக இருந்தது. மலையாள சினிமா, "டச்'சிங்காக இருக்கும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். அதை, இப்போது நானே உணர்ந்து நடித்த போது, என்னையும் அறியாமல் உருகி விட்டேன்...' என்று தன் கோலிவுட் நண்பர்களிடம் கூறி வருகிறார். புதிதாய் வந்த சேவகன் நெருப்பாய் கட்டி வீசுகிறான்.
— எலீசா.

ஷங்கர் படத்தில் ஸ்ரீகாந்த் - அனுயா!

ஸ்ரீகாந்த் எப்படி தெலுங்கு சினிமாவில் தஞ்சமடைந்திருந்தாரோ, அதே போல், சிவா மனசுல சக்தி அனுயாவும் தெலுங்கு, கன்னடமென்று இடம் பெயர்ந்திருந்த நேரம், ஷங்கர் இயக்கும், நண்பன் படத்தில் சான்சு கிடைக்க, இருவருமே அங்குள்ள வேலைகளை அப்படியே போட்டு விட்டு, ஓடோடி வந்து விட்டனர். இதில் ஸ்ரீகாந்த், "ஷங்கர் சார் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு, தேசிய விருது பெற்ற சந்தோஷத்தை எனக்கு தருகிறது...' என்று உணர்ச்சிவசப்பட்டு கூறி வருகிறார்.
— சி.பொ.,

ஸ்ருதி ஹாசன் கவர்ச்சி அறிவிப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏழாம் அறிவு படத்தை முடித்து விட்டார் ஸ்ருதி ஹாசன். இதன் பிறகு, தி பிஸ்னஸ்மேன் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் விளம்பரத்துக்காக ஸ்ருதி எடுத்த கவர்ச்சி புகைப்படங்கள், ஆந்திர ரசிகர்களை சூடேற்றி விட்டுள்ளது. அந்த அளவுக்கு முந்தைய படங்களை விட, இப்படத்தில் கிளாமரை வெளிப்படுத்த இருப்பதை முன் கூட்டியே தெரிவித்து விட்டார்.
— எலீசா.

காமெடிக்கு மாறும் வில்லன்!

தில்லாலங்கடி படத்தில், காமெடி வேடத்தில் நடித்த மன்சூர் அலிகானுக்கு, அவ்வேஷம் புகழை தேடி தந்ததால், தன்னை வில்லன் வேடத்துக்கு, "புக்' பண்ண வருபவர்களிடம் கூட, காமெடி ரோல் கேட்கிறார். அப்படி அவர் கேட்டதன் விளைவாக கிடைத்த படம்தான், கடன் வாங்கி கல்யாணம். இப்படத்தில், நகைச்சுவை கலந்த வில்லனாக நடிக்கிறார்.
— சி.பொ.,

சினேகா உல்லால் அதிரடி நடவடிக்கை!

என்னைத் தெரியுமா? என்ற படத்தில், தமிழில் அறிமுகமானவர் சினேகா உல்லால். ஆனால், அந்தப் படம் வெற்றி பெறாததால், தோல்வி முகத்துடன் தெலுங்குக்கு திரும்பிய அவர், இப்போது, வானம் கண்டிப்பாக வெற்றியடைந்து, தமிழில் தனக்கு திருப்பத்தைத் தரும் என்று காத்திருக்கிறார். "ஒருவேளை வெற்றி கிடைக்காவிடில், இந்த முறை ஆந்திராவுக்கு திரும்ப மாட்டேன். அனுஷ்கா, தமன்னா பாணியில், கவர்ச்சிக் கோதாவில் இறங்கியாவது என்னை தக்க வைத்துக் கொள்வேன்...' என்கிறார். அரைப் பணம் கொடுத்து ஆடச் சொல்லி, ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்ன கதை!
— எலீசா.

நானூறு ஆண்டு முந்தைய சம்பவம் படமாகிறது!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வெள்ளளூர் நாடு, தமராக்கி நாடு, மயில்ராயன் கோட்டை நாடு ஆகிய ஊர்களில் வசிக்கும் அனைவரும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான். என்றாலும், இவர்களுக்குள் பெண் கொடுப்பதோ, எடுப்பதோ கிடையாது. இதற்கு காரணம், 400 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்தான். இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து, வாக்கப்பட்ட சீமை என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. அந்த சம்பவம் நடந்த ஊர், இடங்களிலேயே மொத்த படப்பிடிப்பும் நடக்கிறது.
— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X