மூளைக்காய்ச்சலால் கால்களை இழந்த இளம்பெண்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
00:00

மூளைக்காய்ச்சல் நோய் குழந்தைகளை மட்டும் தான் பாதிக்கும் என்ற கருத்து தவறானது. குறிப்பாக, இளம் பெண்களையும் பாதிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிய இந்த இளம் பெண், கால்களை இழந்ததுதான் மிகவும் சோகம். பிரிட்டனில் கேம்ப்பிரிட்ஷ்ஷயர் பகுதியில் சுட்டன் என்ற ஊரைச் சேர்ந்தவர் நிக்கோல் வில்சன்; வயது 16. நல்ல ஆரோக்கியமான இந்த இளம் பெண்ணுக்கு, ஒரு நாள் கடும் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவர் நிலைமை மிகவும் மோசமானது. உடல் கொதிக்க ஆரம்பித்தது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து கடும் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. கால்களில் கடும் வலி தாக்கியது. முகத்தில் ஒரு பகுதி செயலற்று போனது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், இது மூளைக் காய்ச்சலின் அறிகுறி எனக் கூறினர். நடனம், ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக் களில் ஆர்வம் கொண்ட நிக்கோல், மூளைக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப் பட்டார். டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார். ஆனால், இரண்டு கால்களையும் இழந்தார். கை விரல்களில் பெரும் பகுதி காணாமல் போயின; ஒரு கண்ணில் பார்வையும் பறி போனது. மூளைக்காய்ச்சல், பெரும்பாலும் குழந்தைகளை மட்டுமே பாதிக்கும். எனினும், 14 முதல் 24 வயது வரை உள்ளவர்களையும் இந்த நோய் பாதிக்கும் என பலருக்கு தெரிவதே இல்லை. பெரும்பாலானோருக்கு மூளைக்காய்ச்சல் என்றால் என்ன என்றே தெரிவதில்லை. இதற்காக தடுப்பூசிகளையும் அவர்கள் போட்டுக் கொள்வது கிடையாது. வைரஸ் அல்லது ஒரு வித பாக்டிரியாக்களால் உருவாகும் மூளைக்காய்ச்சல், மூளைப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும், முதுகு தண்டு வடத்தை பாதிக்கும். சிறுநீரக தொற்று நோயால் நிக்கோல் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி, அவருக்கு மருந்து செலுத்தப்பட்டது. ஆனால், அவர் ரத்த நாளங்கள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கை, கால்களில் எல்லாம் ரத்தகட்டிகள் போல் ஏற்பட்ட பின்னர்தான் மூளைக்காய்ச்சல் என்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். அதற்குள் அவர் மயக்க நிலைக்கு சென்று விட்டார். எட்டு மாதங்கள் தீவிர சிகிச்சைக்குப் பின், அவர் உடல் நிலை தேறியது. அந்த கால கட்டத்தில் அவரின் இரண்டு கால்களும் வெட்டி எடுக்கப் பட்டன. கைகளில் பல விரல்கள் துண்டிக்கப் பட்டன. ஒரு கண்ணில் பார்வை பறி போனது. கால்களை இழந்த நிக்கோல், மனம் தளர்ந்து விடவில்லை. இப்போதும் அவர் தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். வாரம் மூன்று முறை டயாலிசீஸ் சிகிக்சை பெற்று வருகிறார். மிக அபூர்வமான, "பி நெகட்டிவ்' ரத்த குரூப் இவருக்கு இருப்பதால், மாற்று சிறுநீரகம் கிடைப்பது காலதாமதமாகிறது. இரண்டு கால்களையும் இழந்து விட்டதால், பொய்க்கால் பொருத்தி நடமாடி வருகிறார். மூளைக்காய்ச்சல் நோய்க்கு எதிரான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். "எனக்கு ஏற்பட்டுள்ள சோதனை போல் யாருக்கும் ஏற்படக் கூடாது. காய்ச்சல் என்றால் உடனே சரியான சிகிச்சை பெற வேண்டும். நோய்களை அலட்சியப்படுத்தக் கூடாது...' என்கிறார் நிக்கோல். உடல் தளர்ந்தாலும், மனம் தளராத வீரப்பெண் இவர்.***
கே.சுனில் ஷெட்டி

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X