தன்வினை...
* எந்த ஆட்சியிலும்
தடுக்க முடியவில்லை
நிறுத்த முடியவில்லை
போலிகளை...
* மேலும், மேலும்
வளர்கின்றன போலிகள்
எல்லா இடங்களிலும்
எல்லாத் துறைகளிலும்...
* போலி மது வகைகள்
போலி மருந்து வகைகள்
போலி மதிப்பெண்கள்
போலி பட்டாக்கள்
போலி பட்டங்கள்...
* போலி ரேஷன் கார்டுகள்
பாஸ்போர்ட்டுகள்
பத்திரங்கள்
கள்ள நோட்டுக்கள்
கள்ள ஓட்டுக்கள்...
* போலி குடிநீர்
போலி என்கவுன்ட்டர்
போலி லாட்டரி டிக்கட்
போலி பஸ் டிக்கட்...
* இன்னும் எத்தனை
எத்தனையோ போலிகள்
இந்த நாட்டில்!
* இதெல்லாம் மாற்ற முடியாது
முன்வினை என்பர்
பாமர மக்கள்...
* யாருக்குத் தெரிகிறது?
போலித் தலைவர்களை வளர்க்கும்
தன் வினை என்று!
— சொல்கேளான் ஏ.வி.கிரி,
சென்னை.