இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2018
00:00

பயிற்சி வகுப்பிற்கு ஆர்வம் காட்டலாம்!
நண்பர் ஒருவர், கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மகனுடன், அரசுடமை வங்கி முன் நின்று கொண்டிருந்தார்.
'மகனுக்கு சேமிப்பு கணக்கு துவங்க வந்தீர்களா...' என்று கேட்டேன்.
'சேமிப்பு கணக்கை சில ஆண்டுக்கு முன்பே துவங்கியதுடன், 'பான் கார்டும்' வாங்கி விட்டேன்...' என்றார், நண்பர்.
தொடர்ந்து பேசிய நண்பர், 'வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தில், பல்வேறு தலைப்புகளில் அவ்வப்போது, இலவசமாக பயிற்சிகளை நடத்தி வருகின்றனர். அடுத்த வாரம், ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சியை நடத்த உள்ளனர். அப்பயிற்சியில், என் மகன் கலந்துகொள்ள, விண்ணப்பம் கொடுக்க வந்தேன்...
'மேலும், காளான், கோழி, தேனீ, பால் மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்ட சில பயிற்சிகளை, இந்த வங்கியின் வாயிலாக ஏற்கனவே முடித்துள்ளான்... படிப்பின் இடையே, 'கம்ப்யூட்டர், கேட்டரிங்' என, கற்றுக்கொண்டால், முடித்துள்ள பயிற்சியை காட்டி, வங்கி கடன் பெற்று, சுய தொழிலும் துவங்கலாமே...' என்றும் கூறினார்.
படிப்பை தாண்டி, துணை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும், என் நண்பரையும், ஆர்வமுடன் பல்வேறு பயிற்சிகளுக்கு சென்று வரும், அவரது மகனையும் பாராட்டினேன்.
கல்லுாரியில் படிக்கும் மாணவர்களே... படிக்கும் காலத்தில், மொபைல் போன், சினிமா, கிரிக்கெட் என, நேரத்தை செலவிடாமல், இதுபோன்ற இலவச பயிற்சிக்கு சென்று, சான்றிதழை பெறலாமே; படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டாலும், சுயதொழில் செய்து சம்பாதிக்கலாம்!
— சோ.ராமு, திண்டுக்கல்.

மாற்றத்தை நோக்கி...
என் அண்ணன் பெண்ணுக்கு, கடந்த நவம்பரில், தலை தீபாவளி. உறவினர் அனைவரும், உற்சாகமாக பங்கேற்றோம். தலை தீபாவளிக்கு பட்சணங்கள், புது ஆடைகளுடன் மாப்பிள்ளை - பெண்ணை வரவேற்றோம்.
பெண்ணும், மாப்பிள்ளையும் அங்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும், தீபாவளி பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்ததை அறிந்து, வியப்பும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
ஆண்கள் அனைவருக்கும், அவரவர் அளவிற்கேற்ப ஒரே நிறத்தில் குர்தா. ஒவ்வொரு குடும்பத்திற்கும், இரண்டு செம்பு டம்ளர், செம்பு தண்ணீர் பாட்டில். பணிப்பெண்ணுக்கு, சல்வார், பட்டாசு மற்றும் இனிப்பு என, அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் தந்தனர்.
'பெண் மற்றும் மாப்பிள்ளைக்கு, நாங்கள் தான் சீர் செய்ய வேண்டும். அது தான் பாரம்பரியம்...' என்றார், மூத்த உறவினர் ஒருவர்.
அதை, சம்பந்தி மறுத்தார்...
'உறவுகளுடன் உற்சாகமாக கொண்டாட வேண்டிய நல்ல நாள் தீபாவளி. ஆனால், பல சந்தர்ப்பங்களில் பாரம்பரியம், சம்பிரதாயங்களை பின்பற்றுகிறோம் என, பெண்ணை பெற்றவர்களை, பொருளாதார ரீதியாக கஷ்டப்படுத்துவது போல ஆகி விடுகிறது. உங்கள், அன்பையும், வாழ்த்துக்களையும் மட்டுமே, என் பிள்ளை எதிர்பார்க்கிறான்...' என்று கூறி, வியக்க வைத்தார், சம்பந்தி.
'இன்று, எங்களுக்கு தலை தீபாவளி. இந்த மகிழ்ச்சியை, என் செலவில் தான் கொண்டாட வேண்டும்...' என்று கூறி, எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார், மாப்பிள்ளை.
அதன்படி, எங்கள் அனைவருக்கும் நட்சத்திர ஓட்டலில் மதிய விருந்து, மாலையில், சர்கார் திரைப் படம் என, அசத்தினார்.
மகன் செய்ததை, அவர்கள் பெற்றோரும் ஆமோதித்து வரவேற்றது, எங்களை திக்கு முக்காட வைத்தது.
அன்றைய அனுபவம், இளைஞர்களை பற்றிய என் சிந்தனையை அடியோடு மாற்றியது. இக்கால இளைஞர்கள், வெறும் ஆட்டம், பாட்டம் என, கொண்டாடி தீர்ப்பவர்கள் அல்ல; சம்பிரதாயம் குறித்து ஆழமான பார்வை உடையவர்கள்... நல்லவர்கள்... பெருந்தன்மையானவர்கள்... மாற்றத்தை நோக்கி முன்னேறும் இத்தலைமுறையைப் பார்த்து, நாம் தான் மாறிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
— ஆர்.ஜே.சிவப்பிரசாத், சென்னை.

பிளாஸ்டிக் பைகளை அறவே ஒழிக்க...
கடந்த பல ஆண்டுகளாகவே, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி, இப்போது பயன்பாடு அதிகமாகி விட்டது. மண்ணும், நீரும் மாசடைந்து போனதால், அரசே இதற்கு, அடுத்த ஆண்டு முதல் தடை விதித்துள்ளது.
தடைக்கு பின்னரும் இது, திருட்டுத்தனமாக, 'குட்கா' வியாபாரம் போல் நடக்காது என்பது என்ன நிச்சயம்!
பிளாஸ்டிக் பைகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், கப்பல் மூலம் வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அரிசி வடிவில் இருக்கும், அந்த பிளாஸ்டிக் குறுணைகளில் தான், இவை தயாரிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பைகளை அறவே ஒழிக்க, அரசு நினைப்பது, மிகவும் வரவேற்க கூடியது. அதே நேரம், பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் இறக்குமதிக்கும், தடை விதிக்க வேண்டும். மூலப் பொருள் இருந்தால் தானே, பைகள் தயாரிக்க முடியும்.
எனவே, அரசு, இந்த பிளாஸ்டிக் மூலப் பொருள் இறக்குமதியை தடை செய்தால், பிளாஸ்டிக் பைகள் இல்லாத நாடாக மாறி விடும்; செய்வரா!
டி.ஜெய்சிங், கோயம்புத்துார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02-டிச-201819:26:53 IST Report Abuse
Natarajan Ramanathan 5 சதமோ அல்லது 10 சதமோ முதலில் இந்த ப்ளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்வோம். ஊரெங்கும் நாறடிப்பது அவைதான்.
Rate this:
Share this comment
Cancel
Siva -  ( Posted via: Dinamalar Android App )
02-டிச-201817:56:47 IST Report Abuse
Siva Plastic reuse education is must, need to directly attack those retailer and wholesale people who do one time Plastics. Government should help them in finding new opportunity. One time plastic is a major hurdle that can be only control with educating peoples and children. However in cities like chennai strict rules to plastic disposal even in household is very must
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
02-டிச-201816:28:30 IST Report Abuse
Girija பிளாஸ்டிக் மறுசுழற்சியின் மூலம் பேப்பர் ஜெல், முகத்திற்கு மாஸ்க் போன்றவற்றை தயாரிக்கலாம் என்று சமீபத்தில் சிங்கப்பூர் பல்கலை ஆராய்ச்சிமானவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மதுரை தியாகராஜர் கல்லூரி பேராசிரியர் வாஸுதேவன் தாருடன் பிளாஸ்டிக் கலந்து குறைந்த செலவில் ரோடு போடலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் . இதற்காக அப்துல் கலாம் அவர்கள் பத்மஸ்ரீ விருது வழங்கி அவரை பெருமைப்படுத்தி உள்ளார். தற்போது சிவகாசியில் பட்டாசு தொழில் நசித்து வருவதால் அவர்கள் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் குருணை (Granules) தயாரிப்பிற்கு மாறினால் நல்ல எதிர்காலம் இருக்கிறது . பிளாஸ்டிக்கை கலந்து ஹாலோ ப்ளாக்ஸ் செய்வதன் மூலம் உஷ்ணத்தையும் , சத்தங்களையும் வெகுவாக குறைக்கலாம் என்று மற்றொரு ஆராய்ச்சி சொல்ல்கிறது . பிளாஸ்டிக் தடை ஹெல்மெட் உத்திரவு போல் தான் .
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
03-டிச-201812:22:15 IST Report Abuse
Manianஆனால் வருத்தப்பட வேண்டிய சித்தியும் ஒன்று தற்போது ஆராச்சிகள் மூலம் வெளி வந்துள்ளது. பிளாச்டிக பாட்டில் தண்ணிரிருள் நுண் துகள் பிளாச்டிக் இருப்பதாகவும், நமது உடலில் அந்த தண்ணிரை குடிப்பதால் தற்போது 5 % சேர்ந்திருப்பதாக கண்டுள்ளார்கள். அதனாலேயே கெஞ்சர் அதிகமாக உலகம் பூராவும் பரவுகிறதாம். பிளாச்டிகின் நீண்டகால பாதிப்புகளை காண்டு பிடிக்க இவ்வளவு நாலடிவிட்ட்து - இதுபோலவே, நான்சடிக் -டேபளான் Teflon பூச்சு, ஆஸ்பெசடாஸ்,சில பூச்சி கொல்லிகள் போர்நாகுவையும் நீண்ட நாட்களுக்கு பிறகே தீமை பயக்கும் என்று கண்டுள்ளார்கள். பிளாச்டிகை முற்றிலும் தடை செய்வது அவசியம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X