இந்திய கடலோரக் காவல் படையில் காலியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2011
00:00

இந்தியக் கடலோரக் காவல் படையில் எந்திரிக் பிரிவிற்கு பொறியியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு: இந்திய கடலோரக் காவல் படையின் எந்திரிக் பதவிக்கு விண்ணப்பிக்க 01.05.1989 முதல் 31.07.1993க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை உள்ளது.
கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்த பின் மெக்கானிகல் இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்பை ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மூலமாக முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டில் இறுதித் தேர்வு எழுதுபவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு எந்திரிக் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: எந்திரிக் பதவிக்கு எழுத்துத் தேர்வு, உடல் திறனறியும் தேர்வு, மருத்துவப் பரிசோதனை என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை ராயபுரத்திலுள்ள இந்திய கடலோரக் காவல் படை தலைமையகத்திலும், கொச்சி உள்ளிட்ட பல்வேறு மையங்களிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் தகுதிகள்: இந்தியக் கடலோரக் காவல் படையின் எந்திரிக் பதவிக்கு விண்ணப்பிக்க உயரம் குறைந்த பட்சம் 157 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். உடலில் எந்த வித அங்கஹீனமும் இன்றி நல்ல உடல் நலத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: இந்தியக் கடலோரக் காவல் படையின் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பின்வரும் சான்றிதழ்களுடன் மார்ச் 26 மற்றும் 27 தேதிகளில் தேர்வு எழுத இருக்கும் மையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு விண்ணப்பங்கள், பத்தாம் வகுப்புத் தேர்ச்சி சான்றிதழ்(ஒரிஜினல்), ஒரிஜினல் டிப்ளமோ சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், கல்லூரி அடையாள அட்டை போன்ற புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு ஐ.டி., புரூப் (ஒரிஜினல்), சாதிச் சான்றிதழ், என்.சி.சி., பயிற்சி அனுபவம் இருந்தால் அது தொடர்புடைய சான்றிதழ், நடத்தைச் சான்றிதழ், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படங்கள் ஆறு.
முகவரி: Indian Coast Guard Dist HQs No5 GM
Pettai Road, Royapuram,
Chennai 600 013.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X