குருபார்வை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2011
00:00

வேணுகோபால், மதுரை
பட்டதாரியான நான் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் ஆகியவற்றின் அதிகாரி நிலைப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். இவற்றுக்கு எப்படித் தயாராக வேண்டும் எனக் கூறலாமா? இவை நல்ல நிறுவனங்கள் தானா?
ஐ.ஆர்.டி.ஏ., எனப்படும் இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஒழுங்காணையம் இந்திய காப்பீட்டு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது. லைப் எனப்படும் ஆயுள் காப்பீட்டுத் துறையிலும் ஜெனரல் எனப்படும் பொதுக் காப்பீட்டுத் துறையிலும் அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. எனினும் ஆயுள் துறையில் எல்.ஐ.,சி., பொதுக் காப்பீட்டுத் துறையில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேசனல் இன்சூரன்ஸ் ஆகியவை அரசுத் துறை நிறுவனங்கள். இவை அனைத்துமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளாக இவற்றில் கிளரிகல் பணியிடங்களுக்கு ஆட்கள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டிருந்தாலும் இன்றைய வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் நவீன தொழில்நுட்பம் அறிந்தவர்கள் இந்த நிறுவனங்களுக்குத் தேவைப்படுகின்றனர். ஆனால் போதிய வேலை வாய்ப்புகள் இவற்றில் அறிவிக்கப்படவில்லை. எனினும் இவற்றின் அதிகாரி நிலைப் பணியிடங்கள் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன. இவற்றில் நியூ இந்தியா மற்றும் யுனைடெட் இந்தியா ஆகியவற்றின் சமீபத்திய வாய்ப்புகளுக்குத் தான் நீங்கள் விண்ணப்பித்திருக்கிறீர்கள். வாரம் 5 நாட்கள் வேலை, வங்கித் துறை போல செயல்பாட்டு சீர்திருத்தங்கள் எதுவும் இல்லாத நிலையிலும் இந்த காப்பீட்டு நிறுவனங்கள் லாபகரமாகவே இயங்கி வருகின்றன. வங்கி வேலைகளோடு ஒப்பிடுகையில் வேலைத் தன்மையும் இலகுவானதாகவே உள்ளது. எனவே எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்.
யுனைடெட் இந்தியாவின் பணிக்கான போட்டித் தேர்வானது அப்ஜெக்டிவ் தேர்வாக நடத்தப்படவுள்ளது. ஆப்டிடியூட் தேர்வு எனப்படும் பகுத்தாராயும் திறன் மற்றும் பிற அப்ஜெக்டிவ் தேர்வுப் பகுதிகள் என்று இந்த நிறுவனத்தின் விளம்பரம் பொதுவாகவே குறிப்பிடுகிறது. எனினும் அதிகாரி நிலைப் பணியிடங்களுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக இடம் பெறுபவை ஆங்கிலம், கணிதம், பகுத்தாராயும் திறன், பொது அறிவுத் திறன், நடப்புச் செய்திகள், மார்க்கெட்டிங் ஆப்டிடியூட், கம்ப்யூட்டர் ஆப்டிடியூட் போன்ற பகுதிகள் தான். இவற்றில் தயாராவது முக்கியம். பகுத்தாராயும் திறன் பகுதியானது மிகவும் பரந்து பட்டது. இதில் பலவிதமான கேள்விகள் இடம் பெறலாம். Logical Deductions, Blood Relations, Series, Analogy, Classification, Data Interpretations என இதில் பலவிதமான வகைக் கேள்விகள் கேட்கப்படலாம்.
கணிதப் பகுதியின் கேள்விகள் இதுவரை நீங்கள் படித்திருக்கும் வகைகளில் தான் கேட்கப்படலாம் என்றாலும் அவற்றை பிற பகுதிகளைப் போலவே குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பது தான் வெற்றியைத் தீர்மானிக்கும்.
பொதுவாக ஆங்கிலப் பகுதியில் பாஸ் செய்தால் போதும் என்பதாகவே போட்டித் தேர்வுகள் அமைகின்றன. இதில் தரப்பட்டுள்ள வரிகளில் இடம் பெறும் தவறுகளைக் கண்டுபிடித்தல், சமமான வார்த்தைகள், எதிர்மறை வார்த்தைகள், இடியம்ஸ் பிரேசஸ், காம்ப்ரிஹென்சன் போன்ற பல வகைக் கேள்விகள் கேட்கப்படலாம். பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் ஆகிய பகுதிகளுக்கு பல மாதங்கள் நாம் தயாராக வேண்டும்.
யுனைடெட் இந்தியாவின் பலவகைப் பணியிடங்களில் சார்ட்டர்ட் அக்கவுன்ட்ஸ், சட்டம், புள்ளியியல், கணிதம், ஆக்சுவரியல் சயின்ஸ், விவசாயப் பொறியியல் ஆகிய சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம் என்பதால் சம்பந்தப்பட்ட பாடத்திலிருந்து சிறப்புப் பகுதி இடம் பெறும்.
அப்ஜக்டிவ் பகுதி முதல் தாள் என்றால் 2ம் தாளானது விரிவாக விடையளிக்கும் பகுதியாகும். இதில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவது, சுருக்கி வரைவது மற்றும் காம்ப்ரிஹென்சன் ஆகிய பகுதிகள் இடம் பெறும். இந்த எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நியூ இந்தியாவின் பணிவாய்ப்பில் பி.காம்., பி.டெக்., பி.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., தகுதியாளர்கள் விண்ணப்பிப்பதால் இந்தப் பகுதிகளில் சிறப்புப் பகுதி கேள்விகள் இடம் பெறும்.
அடிப்படைகளை நன்றாக அறிவது, தினசரி பயிற்சியை மேற்கொள்வது மற்றும் விடாமுயற்சி என உங்களது இலக்கு நோக்கிய பயணம் வெற்றிகரமாக அமையட்டும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X