இந்தியக் கடற்படையில் குறுகிய காலப் பணி நிலை அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2011
00:00

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான கடற்படையின் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணணூர் மாவட்டத்திலுள்ள எழிமலாவில் உள்ளது. இங்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் எக்சிகியூடிவ் பிரிவு (ஜெனரல் சர்வீஸ் / ஹைட்ரோகேர்) குறுகிய காலப் பணி நிலைஅதிகாரிகளுக்கான பயிற்சி துவங்க உள்ளது. திருமணமாகாத
ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: எக்சிகியூடிவ் பிரிவு குறுகிய காலப் பணி நிலை அதிகாரிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 19 1/2 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.01.1987 முதல் 01/07/1992க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதிகள்: இந்தியக் கடற்படையின் எக்சிகியூடிவ் பிரிவிற்கு விண்ணப்பிக்க பின்வரும் தகுதி ஏதாவது ஒன்று தேவைப்படும் :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் பட்டப் படிப்பை முடித்தவர்கள் ; ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள்; அறிவியல் புலத்தில் பட்டப் படிப்பை முடித்து சீனியர் டிவிசன் நேவல் விங் என்.சி.சி.,யில் 'சி' சான்றிதழ் பெற்றவர்கள்; கணிதம், புள்ளியியல், ஆபரேஷன்ஸ் ரிசர்ச், குவான்டிடேடிவ் மெதட்ஸ் போன்ற பிரிவுகளில் இள நிலை அல்லது முது நிலைப் பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் வாயிலாலக் குறைந்த பட்சம் 75 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள்.
உடல் தகுதி: உயரம் குறைந்த பட்சம் 157 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம் என்ற போதும் நிறக் குறைபாடு, மாலைக் கண் நோய் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
தேர்ச்சி முறை: விண்ணப்பிப்பவர்களின் தகுதி அடிப்படையில் உரியவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 3 முதல் 5 நாட்கள் வரை நடத்தப்படும் 2 கட்டங்களை உள்ளடக்கிய இன்டலிஜென்ஸ் டெஸ்ட், பிக்சர் பெர்சப்ஷன், உளவியல் சோதனைத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் போன்ற நிலைகளைக் கடக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தியக் கடற் படையின் எக்சிகியூடிவ் பிரிவு குறுகிய காலப் பணி நிலை அதிகாரி பதவிக்கு ஆப்-லைன் மற்றும் ஆன்-லைன் என்ற இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். ஆப்-லைனில் விண்ணப்பிப்பவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பிப்பவர்களும், விண்ணப்பித்த பின் கிடைக்கும் படிவத்தில் இரண்டு பிரின்ட் அவுட்டுகளை எடுத்து உரிய இணைப்புகளுடன் அனுப்ப வேண்டும். இது குறித்த முழு விபரங்களை அறிய இணைய தளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 27.03.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி :
POST BAG NO.04,
NIRMAN BHAWAN,
NEW DELHI 110011.
முக்கிய தேதிகள்: ஆன்-லைனில் பதிவு செய்ய, விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 27.03.2011

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X