திண்ணை! (நடுத்தெரு நாராயணன்)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2010
00:00

ரூஸ் பீட்டர் என்ற ஆங்கிலேயர் 1812 முதல் மதுரை கலெக்டராக இருந்தவர். இவர், மீனாட்சி மீது கொண்ட பக்தியால், "பீட்டர் பாண்டியன்' என்று புகழ் பெற்றார். ஓர் இரவில், இவர் உறங்கிக் கொண்டிருந்த போது, இடியும், மின்னலுமாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறுமி, அவரை எழுப்பி, வெளியே அழைத்து வந்தாள். வெளியே வந்த அடுத்த வினாடியே, சயன மண்டபத்தின் மீது, பேரிடி விழுந்து, தரைமட்டமாயிற்று; சிறுமி எங்கோ மறைந்து விட்டாள். தன்னை எழுப்பிக் காத்தது மீனாட்சியே என்று நம்பிய அவர், விலை உயர்ந்த ஒரு ஜோடி அங்கவடியைச் செய்து, மீனாட்சி கோவிலுக்குத் தந்தார். அந்த அங்கவடியை இன்றும் காணலாம்.
***
மாவீரன் நெப்போலியன், எகிப்திலிருந்து திப்பு சுல்தானுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். "செங்கடலின் எல்லைக்கு நான் வந்திருக்கும் விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இங்கிலாந்தின் இரும்புப் பிடியிலிருந்து, உங்களை விடுவிக்கும் மன உறுதியுடன், எவராலும் வெல்ல முடியாத பெரும் படையுடன் வந்திருக்கிறேன்...' என்று, நெப்போலியன் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தைக் கொண்டு வந்த தூதன், ஆங்கிலேயே ஒற்றர்களிடம் அகப்பட்டுக் கொண்டதால், கடிதம் திப்புவிடம் வந்து சேரவில்லை. இத்தகைய கடிதம் ஒன்றை, நெப்போலியன் எழுதியிருக்கிறார் என்ற சேதியே, அவருக்குத் தெரியாது. ஆங்கிலேயர், திப்புவின் மீது போர் தொடுப்பதற்கு, இதுவும் ஒரு காரணமாயிற்று. உண்மையில், ஆங்கிலேயர்களுக்கு இந்தக் கடிதம் ஒரு, "சாக்குபோக்கு' தான். இந்தியாவை, "முழுங்குவது' தானே அவர்கள் நோக்கம்!
தரைப் போரில், வல்லவனுக்கு வல்லவன் தான் நெப்போலியன். ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டில், கடற்போரில் ஆங்கிலேயரை மிஞ்சக் கூடியவரைக் காண்பது அரிது. எகிப்தில் நைல் நதி முகத்துவாரத்தில் நடைபெற்ற கடற்போரில், நெப்போலியனை ஆங்கிலேயர் முறியடித்தனர். பிரஞ்சுப் போரில் கப்பல்கள் எல்லாமே அநேகமாய் அழிக்கப்பட்டன. இவ்வாறு நெப்போலியனின் இந்தியப் பயணம் தடைபட்டது. எல்லாமே பிரிட்டிஷாரின் அதிர்ஷ்டம்!
ஆப்கானிஸ்தானில், ஜமான்ஷா ஆட்சியில் இருந்தார். திப்புவுடன் நட்புறவாக இருந்தார். இந்திய மொகலாய சக்கரவர்த்தி குடும்பத்துடன், திருமண உறவும் வைத்திருந்தார். எனவே, திப்புவுக்கு ஆதரவாக இந்தியா மீது படையெடுத்தார். அவரது படைகள், லாகூருக்கு வந்து விட்டன. ஆங்கிலேயர் ஒரு சூழ்ச்சி செய்தனர்.
ஆப்கானியர், "சன்னி' பிரிவு முஸ்ஸிம்கள், பக்கத்து நாடான பாரசீகத்தினர், "ஷியா' பிரிவு முஸ்ஸிம்கள் இருவருக்கும் எப்போதும் பகையும், மோதலும் உண்டு. ஆப்கன் படைகள் இந்தியா மீது படையெடுத்து வந்து விட்டதால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பாரசீக மன்னர் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, அதைக் கைப்பற்றும் முயற்சியில் இருப்பதாக, வதந்தியைக் கிளப்பி விட்டனர் ஆங்கிலேயர்கள். விளைவு... தன் நாட்டைச் காப்பாற்றிக் கொள்ள வேண்டி, ஜமான்ஷா, லாகூரிலிருந்து பின் வாங்கி ஓடினார். ஆங்கிலேயரின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றி இது!
***
அர்னாட் பென்னட் என்ற ஆங்கில நாவலாசிரியர், தன் அந்தரங்கச் செயலர் குறித்து, பிரமாதமாகப் புகழ்ந்துரைத்தார். பதிப்பகத்தார்கள், அந்தப் பெண்ணைச் சந்திக்க விரும் பினர். "உங்கள் செயல் திறனுக்கு என்ன காரணம்?' அந்தப் பெண்ணிடமே கேட்டனர். அவர், "என் முதலாளி தான் காரணம். ஒரு சிறிய செயலை நான் சரியாய் செய்தாலும், மனந்திறந்து பாராட்டுவார். என் குறைகளைப் பெரிதுபடுத்தாமல், என் நிறைகளையே நினைவூட்டு வார். எனவே, நான் குறைகளைக் குறைத்து, திறமைகளை வளர்த்துக் கொண்டேன்!' என்று சொன்னார்.
அங்கீகரிக்கப்படுகிற திறமை கள், விசுவரூபம் எடுக்கும்; அலட்சியப்படுத்தப்படும் திறமைகள், முடங்கிக் கிடக்கும்.
***


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X