இந்த மண்ணை கெடுத்துடும்டா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:00

புதுக்கோட்டை மாவட்டம், காரக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், 1997ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
மழைக் காலங்களில், புத்தகங்கள் நனையாமல் இருக்க, 'மழைப் பேப்பர்' என்று, எங்கள் பகுதியில் அழைக்கப்படும், 'பாலிதீன் கவர்'களால், புத்தகங்களை மூடி, எடுத்துச் செல்வோம்.
'அப்பாடா... இன்று என் புத்தகம் நனையாமல் தப்பி விட்டது...' என, நாங்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த வகுப்பாசிரியர், முகமது இஸ்மாயில், 'டேய் பசங்களா... இப்ப இந்த பை நன்மை செய்யும்ன்னு நினைச்சுட்டீங்க... இதே பை, காலா காலத்துக்கும் மக்காமல், நாட்டையே, இந்த மண்ணையே கெடுக்கப் போகிறது பாருங்க...' என்று, அவர் சொன்ன போது, அவரை நாங்கள் தனியாக திட்டி தீர்த்தோம்.
தற்போது, அவர் உயிருடன் இல்லை; ஆனால், இன்று, 'பாலிதீன் கவர்'களை அரசு, தடை செய்யுமளவிற்கு, அதன் தீமைகள் தலை விரித்தாடுகிறது என்பதை நினைக்கும் போது, அன்று அவர் சொன்ன சொல்லையும் மறக்க முடியவில்லை; அவரையும் மறக்க முடியவில்லை!
- கி.காளீஸ்வரி, புதுக்கோட்டை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X