அதிசய டீ கெட்டில்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:00

சில ஆண்டுகளுக்கு முன், ஜப்பானில், மிஷுயூ என்ற, ஏழை இளைஞன் வசித்து வந்தான். பழைய பாத்திரங்களை சீர் செய்து, அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்தான்.
அன்றாடம் கிடைக்கும் கூலியில், அரை வயிரோ, கால் வயிரோ நிரப்பி, நாட்களை ஓட்டி வந்தான்.
'திருமணம் செய்தால், மனைவி, குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு, துணிமணிகள் வாங்கி கொடுப்பதெல்லாம் எப்படி சாத்தியம்... வேண்டவே வேண்டாம்ப்பா திருமணம்! நல்லவேளை, புத்திசாலித்தனமாக முடிவெடுத்தேன்' என்று தனக்குத் தானே சொல்லி மகிழ்வான்!
இப்படியே, தன் வீர தீர சாகச முடிவுகளைப் பற்றிய நினைவில் மூழ்கியவன், வீட்டிற்கு செல்லும் பாதையிலிருந்து, தவறி, வேறு பாதையில் சென்று விட்டான்.
பாதை எங்கும் செழுமை; வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் அழகை என்னவென்பது... 'இத்தனை அழகான வண்ண மலர்களை, கடவுள் ஏன், இந்த காட்டில் ஒளித்து வைத்திருக்கிறான்... மற்றவர்கள் பார்த்தால், கண் திருஷ்டி பட்டு, மலர்கள் மணம் பரப்புவதை நிறுத்தி விடும் என்ற பயமோ...'
மேலும் நடந்தான்... அந்த தோட்டம் முழுவதும் ஒரே பழங்கள்... 'அப்பாடி, எத்தனை பழ வகைகள்... இத்தனை பழங்களையும் யார் தின்பர்... பறவை இனங்களுக்கு மிகவும் கொண்டாட்டம் தான். தினமும், கொஞ்சம் கொஞ்சமாக தின்று, பசி ஆற்றிக் கொள்ளும்.
'என்னைப் போல், வீடு வீடாகச் சென்று, வேலை கேட்க வேண்டாம். கொடுத்து வைத்த பறவைகள்...' சற்றே நெஞ்சு கனத்தது.
'இத்தனை அழகு கொழிக்கும் இந்த பழத்தோப்பு யாருக்கு சொந்தமோ... மிகப் பெரிய பணக்காரனாகத்தான் இருக்க வேண்டும். ஏழை என்றால், இவ்வளவு பெரிய தோப்பை, பறவைகளின் பசிக்கு இருக்கட்டும்; மீதமுள்ளதை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று விடுவானா என்ன... அத்தகைய ஈகை குணமுள்ளவன் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் அல்லவா!
'ஓ... ஒருவேளை நானும் பணக்காரனாகி இருந்தால், இந்த முகம் தெரியாத நண்பனை போல் இருப்பேனோ என்னவோ...' இவனின் இந்த கற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும் நோக்குடன், 'கீச்... கீச்...' என்று கத்தியபடியே, மரத்தில் அமர்ந்து, பழங்களை ருசி பார்த்து, உண்ண துவங்கின!
இதை பார்த்த மிஷுயூ விற்கும், பசி வயிற்றைக் கிள்ள, 'ஏன், நானும், ஒரு பழத்தை தின்று பசி ஆற்றக் கூடாது' என்ற ஒரு நப்பாசை மனதில் துளிர்ந்தது.
'என்ன காரியம் செய்ய நினைத்தேன்... அன்னியர்களின் பொருளுக்கு ஆசைப்படலாமா... இப்படி பழத்தை பறித்து தின்பது மிகவும் கேவலமான, திருட்டுத்தனமல்லவா... வேண்டாம்... வேண்டாம்... தெய்வமே என்னை மன்னித்து விடு... அதோ அங்கே சலசலத்து ஓடும் ஆற்றிலிருந்து, தண்ணீரை அள்ளி குடித்தால், பசி அடங்கி விடாதா என்ன... கடவுளே என்னை மன்னித்து விடு...'
அப்போது, ஒரு பெரிய பப்பாளிப் பழம் அவன் முன், 'பொத்'தென்று விழ... அதனுடன், ஒரு குட்டி அணில் பாப்பாவும் இருந்தது. அப்படியே விதிர் விதிர்த்து போனவன், அப்பழத்தை கையில் எடுக்க, அந்த குட்டி அணில் பாப்பா, 'சட்'டென்று அவன் தோளில் ஏறி அமர்ந்து, 'கீச்... கீச்... கீச்...' என்று, தன் பாஷையில், பேச ஆரம்பித்தது!
அந்த குட்டி அணில் பாப்பாவை, தட்டிக் கொடுத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், கண் மூடி, தன் இஷ்ட தெய்வத்தை தியானித்து, அந்த பழத்தை, அப்படியே பிளந்து, இரண்டாக்கி, சின்ன துண்டை, அந்த பாப்பாவிற்கு ஊட்டி விட, அது, வாலை ஆட்டியபடி ருசி பார்த்தது!
'அப்பாடி... இதைப் போன்ற, ருசியான பழத்தை, இதுநாள் வரை சாப்பிட்டதே இல்லை...' மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது.
'இப்படியே, இந்த காட்டில் இருந்து விடலாமே... உண்ண உணவு, அருமையான சூழல், இதையும் விட, எனக்கு வேறு என்ன வேண்டும்...'
இப்படி சிந்தித்தவனுக்கு, துாக்கம் கண்ணை சுற்றியது... 'உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டல்லவா' அப்படியே, அயர்ந்து துாங்கி விட்டான். எத்தனை நேரம் துாங்கினானோ தெரியவில்லை. துாக்கம் கலைந்து, கண் விழித்த போது, நன்றாக இருட்டி இருந்தது. இவனுடைய அணைப்பில், குட்டி அணிலும் நன்றாக துாங்கி கொண்டிருக்க, எங்கேயோ சற்று தொலைவில், 'ஹும்... ஹும்... ஹும்...' என்ற சத்தம்!
'இந்த நேரத்தில், என்ன சத்தம்! ஒருவேளை, பேய், பிசாசுகளின் ஓசையாக இருக்குமோ' என்று துணுக்குற்றான்.
'ஹும்... ஹும்...' என்ற, அந்த தீனமான குரல், அவனுள் ஒரு பச்சாதாபத்தை உண்டாக்க, அந்த குரல் வந்த திசை நோக்கி நடந்தான்.
அங்கே, ஒரு பெரிய வலைக்குள், ஒரு குட்டி பூனை அகப்பட்டு, தப்பி ஓட முடியாமல், தவித்து, அழுதுக் கொண்டிருந்தது.
'ஐயோ பாவம்... பூனைகளைப் பிடிக்கும் கும்பல், இப்படி, கண்ணி வைத்து பிடித்திருக்கிறது. பூனை மாமிசம் என்றால், அந்த கும்பலுக்கு மிகவும் விருப்பம்' போல.
'சட்'டென்று, அந்த வலையை கத்தரித்து, குட்டிப் பூனையை விடுவித்தான்.
'வெள்ளை வெளேர்'ன்னு எத்தனை அழகு... அன்போடு தடவி கொடுத்து, தோளில் சாய்த்துக் கொண்டான்... அதுவும், தன் குட்டி நாக்கால், தடவிக் கொடுத்து, நன்றியைத் தெரிவித்தது.
சிறிது நேரத்தில், பொழுது நன்றாக புலர்ந்து விட, 'குட்டிச் செல்லமே... உன் அம்மாவிடம் ஓடிப் போய் விடுடா... இனிமேல், இப்படி தனியாக வந்து மாட்டிக் கொள்ளாதே...' என்று புத்தி சொல்லி, வீட்டை நோக்கி புறப்பட்டான். அவன் சிறிது துாரம் சென்ற பின் தான், பூனைக்கு, ஞானோதயம் உண்டாயிற்று.
'ஐயோ... எப்பேர்ப்பட்ட முட்டாள் நான்; என்னை காப்பாற்றிய, அந்த நல்லவனுக்கு, நன்றி கூட சொல்லவில்லையே...' என்று, நொந்தபடியே வீட்டிற்கு சென்று அம்மாவிடம் கூறியது.
கண் மூடி தியானிக்க, அதன் மந்திர சக்தியால், உடனே, மிக அழகிய கெட்டில் ஆக மாறியது. உடனே, துள்ளி குதித்து மிஷுயூ கூடையில், சமத்தாக உட்கார்ந்துக் கொண்டது!
வீடு திரும்பிய மீஷுயூ, கூடையிலிருந்த பொருட்களை வெளியே எடுக்க, அழகிய கெட்டிலை பார்த்து, 'இது எப்படி, என் கூடைக்குள் வந்தது' என்று வியந்தான்.
'இத்தனை அழகான கெட்டில், எனக்கு எதற்கு... குலதெய்வத்திற்கு காணிக்கையாக்கி விடுகிறேன்!' என்று தீர்மானித்து, கோவிலுக்கு சென்று, ச்சினிக்கோ சிலையின் முன் வைத்து கும்பிட்டான்.
கோவில் பூசாரியிடம், 'இந்த கெட்டில், என் சிறிய காணிக்கை!' என்று சொல்லி கொடுத்தான். அந்த அழகிய கெட்டிலில், தண்ணீர் நிரப்பி, அடுப்பில் ஏற்றி, 'டீ' தயாரிக்க ஏற்பாடு செய்தார் பூசாரி.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், 'ஐயோ... சூடு தாங்கல...' என்று அலறியபடியே அந்த கெட்டில், 'பொத்'தென்று விழுந்து உருள, மிரண்டார் பூசாரி. தன் சிப்பந்தியை உதவிக்கு அழைக்க, தரையில் உருண்டு புரண்டு கொண்டிருந்த கெட்டில், சூடு குறைந்து விட்டதால், அப்படியே நின்று விட்டது.
'அட... இதைப் போல் பேசி ரகளை அடிக்கும் கெட்டில் இக்கோவிலுக்கு தேவை இல்லை' என்று தீர்மானித்து, அந்த மிஷுயூவிடமே விபரத்தை சொல்லி, திருப்பி கொடுத்து விட்டு, கோவிலுக்கு திரும்பினார் பூசாரி!
உடனே, அந்த கெட்டில், பூனைக் குட்டியாக மாறியது! தன் கண்முன்னே, அந்த அழகிய கெட்டில், இப்படி உருமாறிப் போனதை கண்டு, அப்படியே விக்கித்து போனான் மிஷுயூ.
''பயப்படாதே மிஷுயூ... என் உயிரை காப்பாற்றினாய்... அதற்கு நன்றி சொல்ல வேண்டாமா... எப்படி சொல்வது... என்ன சொல்வது... என்று என் அம்மாவிடம் கேட்டேன்...
''தெய்வீக சக்தி வாய்ந்த என் அம்மா தான், இந்த யோசனையை கூறினார்... உன்னை அழகிய கெட்டிலாக மாற்றி விடுகிறேன்; அவன் அதை விற்றால் நிறையவே பணம் கிடைக்கும். அந்த ஏழைக்கு பணம் மிகத் தேவையல்லவா... அதனால், அந்த பணத்தை வைத்து, அவன் சுகமாக வாழட்டும்! என்று சொல்லி, உருவமாற்றம் செய்யக்கூடிய ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்தாள்...
''நான் கெட்டிலாக மாறிய பின், என்னை கடை வீதியில் விற்று, நிறைய காசு சேர்ப்பாய் என்று எதிர்பார்த்தேன். ஆனாலும், மிக நல்ல பண்பும், தெய்வ பக்தியும் நிரம்பிய நீ, அப்படியே உன் குலதெய்வ கோவிலில் கொடுத்து விட்டாய். கோவில் சொத்தை யாரேனும் விலைக்கு வாங்குவார்களா... அதனால் தான், அங்கிருந்து தப்பிப்பதற்காக, தந்திரம் செய்து, இதோ, இங்கு உன் முன் சுய ரூபத்தில் நிற்கிறேன்...'' என்றது.
''மிஷுயூ... கவலைப்படாதே... உடனே, ஒரு கடையை திற... என் மந்திர சக்தியை உபயோகித்து, இரண்டு பூனைக் குட்டிகளை உருவாக்குறேன். அவற்றை மக்கள் பார்த்து, ரசித்து மகிழும்படியாக விதவிதமான ஜால வித்தைகளை செய்ய வைக்கிறேன்.
''அதை கண்டு மகிழ, நம் கடையில் கூட்டம் அலைமோதும். நம் வருமானமும், ஏகமாக பெருகும். நாம் இருவரும் எதிர்காலத்தில் எவ்வித கஷ்டமும் இன்றி, சுகமாக வாழலாம்...'' என்றது.
''சரி...'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.
அவ்வட்டாரத்திலே மிகப் பெரிய பணக்காரனாகி, திருமணம் செய்து, குண்டு, குண்டு குழந்தைகளுக்கு, தகப்பனார் ஆனான் என்பதை, சொல்லவும் வேண்டுமா!
- சாரதா விஸ்வநாதன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X