அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:00

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!

எம்மாம் பெரிய்ய்ய... பலுானு!
காற்றை விட, எடை குறைந்த வாயுக்களால் நிரம்பிய பலுான், 'ஏரோ சாட் பலுான்' என்று அழைக்கப்படுகிறது. வெப்பக் காற்றால் இயங்கும், 'ஹாட் ஏர் பலுான்' போன்றது தான், ஏரோ சாட் பலுான்.
தன் எடையும், வான வெளியில் உள்ள, காற்றின் எடையும், எந்த இடத்தில், சம அளவு இருக்குமோ, அந்த உயரம் வரை, ஏரோ சாட் பலுான்கள் பறக்கும்.
விமானங்கள், காற்றைக் கிழித்து பறப்பது போல, இவை பறக்காது. குறிப்பிட்ட உயரம் சென்றதும், அந்த இடத்திலேயே, நிலையாக நிற்கும் அல்லது காற்று அடிக்கும் திசைக்கு ஏற்ப, நகர்ந்துச் செல்லும்.
பொதுவாக, ஏரோ சாட் பலுான்களை, வலுவான கயிற்றில் கட்டி, அதை, தரையில் உள்ள, வலுவான பொருளுடன் கட்டி வைத்திருப்பர். தற்போது, ஏரோ சாட் பலுான்களை பயன்படுத்தி, சில வானிலை ஆய்வுகள், விளம்பரங்கள் செய்கின்றனர். ஆய்வு விமானங்கள், மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு, ஏரோ சாட் பலுான்களை அனுப்பி, ஆய்வு செய்வது உண்டு.
உதாரணமாக, எரிமலை உள்ள பகுதியில், வானிலையை ஆராய பயன்படுகின்றன ஏரோ சாட்பலுான்கள். இது போல, மலைப் பகுதிகளிலும், பனிப் பிரதேசங்களிலும், வானிலையை ஆய்வு செய்ய உதவுகின்றன.
எதிரி நாட்டு எல்லைப் பகுதிகளில், இத்தகைய பலுான்களில், ரகசிய கேமராக்களை வைத்து அனுப்பி, உளவு வேலைகள் பார்க்கப்படுகின்றன.
ரப்பர், பிளாஸ்டிக் அல்லது சிறப்பு துணி வகைகள் போன்றவற்றால், ஏரோ சாட் பலுான்கள் தயாரிக்கப்படுகின்றன. ராட்சத வடிவத்தில், இந்த பலுான்களை தயாரித்து, அதன், நான்கு முனைப் பகுதிகளில், கயிறு கட்டி, தரையில் பிணைத்து வைப்பது வழக்கம்.
இதுபோன்ற பலுான்களை, விளம்பரங்களுக்காக பயன் படுத்துகின்றனர். உலகின், மிகப்பெரிய, 'ஏரோ சாட்' பலுான், இந்தியாவில் தான், காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது.

ஓ... ஹோ... மேகம் வந்ததோ!
மழை மேகம் கூடும் போதும், மழை பொழியும் போதும், மயில்கள் நடனம் ஆடும் என்று அறிந்திருப்போம். மயில் மட்டுமல்ல; பல்வேறு பறவைகளும், மழை நேரத்தில் நடனம் ஆடும் என்பது உங்களுக்கு தெரியுமா...
கடற்கரைகளில் கிடைக்கும் கிளிஞ்சல்களை, உணவாக கொள்ளும் பறவை இனம், 'ஒய்ஸ்டர் கேச்சர்' தமிழில், இதை, 'கிளிஞ்சல் கொத்தி பறவை' என்பர்.
மழை நேரத்தில், இந்த பறவைகள், ஆனந்தமாக நடனம் ஆடும். வட்ட வடிவம் மற்றும் ஒரே நேர்கோட்டில் இணைந்து நின்று நடனம் ஆடும். பின், சிறிது நேரம் இடைவெளி விட்டு, மீண்டும் அதே போல நடனம் ஆடும். பலத்த மழை பொழியும் போதும், பனி உருகும் போதும், இந்த பறவைகள் இப்படி நடனம் ஆடுவது வழக்கம்.
'சீகல்ஸ்' எனப்படும் கடற்பறவை, பலத்த மழை பெய்த பின், பாதங்களை, ஈரமான புற்கள் உள்ள தரையில், அடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, நடனம் ஆடும். இது போல, 'ரூக்ஸ்' எனப்படும், ஒருவகை காகம், மயில்கள், சிலவகை குருவி இனங்கள், மழை நேரத்தில், தரையில் குதித்து, நடனம் ஆடும். இவை, இப்படி, அடித்தும், உதைத்தும் நடனம் ஆடும் போது, பூமிக்குள் இருக்கும் புழுக்கள், அதிர்வு காரணமாக, மேல் பகுதிக்கு வரும்.
அப்போது, அவற்றை, இந்த பறவைகள் உணவாக உட்கொள்ளும். மேலும், மழை நேரத்தில், பூமிக்குள் தண்ணீர் இறங்கும். இதனால், பூமிக்குள் வசிக்கும் புழுக்களின் வளைக்குள், தண்ணீர் புகுந்து விடுவதால், அவை, பூமியின் மேல் பகுதிக்கு வரும். அந்த நேரத்தில், அவற்றை பறவைகள் உணவாக உட்கொள்ளும். நடனத்துக்கு நடனம் ஆச்சு; 'மம்மு'க்கு 'மம்மு'வும் ஆச்சு! எப்புடி!
- என்றென்றும் அன்புடன்,
அங்குராசு!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X