இளஸ்... மனஸ்... (142)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:00

இனிய சகோதரிக்கு, வணக்கம்!
பல ஆண்டுகளாக, தினமலர் வாசகர் நாங்கள். என் பிள்ளைகள், சிறுவர்மலர் படித்து தான் வளர்ந்தனர். இரட்டையர்; ஆண் ஒன்று; பெண் ஒன்று. பிள்ளைகள், பிளஸ் 2 படிக்கும் வரை, சென்னையில், தனிக்குடித்தனம் இருந்தோம். தற்போது, குடும்ப சூழ்நிலை மற்றும் பிள்ளைகள் பொறியியல் படிப்பதற்காக, கணவரது சொந்த ஊருக்கே வந்து விட்டோம்.
கூட்டுக் குடும்பம் என்பதால், வீட்டு மாப்பிள்ளைகள், மருமகள்கள் என, ஒரு கூட்டம், வீட்டிற்கு வந்த வண்ணம் இருப்பர். இது, என் மகளுக்கு பிடிக்கவில்லை; அவள் தனிமை விரும்பி.
'பாடங்களை என்னால் படிக்க முடியவில்லை; தனிமை இல்லை...' என புலம்புகிறாள். தோழிகள், வீட்டிற்குச் சென்று, கலந்துரையாடி, படிக்க விரும்புகிறாள்.
'வயசுக்கு வந்த பெண்ணை, தோழிகள் வீட்டிற்கு அனுப்புவது தவறு...' என்கின்றனர் பெரியவர்கள். இது, மகளுக்கு பிடிக்கவில்லை.
'என்ன பத்தாம் பசலித்தனம்... வெளியே போகிற பெண்கள் எல்லாம் கெட்டுப் போய் விடுவர், பாதை மாறி போய் விடுவர் என்று நினைப்பது கேவலமானது...' என்று சொல்லி, வெம்பி வெடிக்கிறாள் மகள். எனக்கு யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல், இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறேன்; சரியான ஆலோசனை கூறுங்கள் சகோதரி.

அன்பு சகோதரிக்கு வணக்கம்!
இதுவரையில், தனிக்குடித்தனத்தில் ரொம்ப சுதந்திரமாக, பிள்ளைகளை வளர்த்து விட்டீர்கள். அதனால், அவர்களுக்கு திடீரென்று பெரியோர்கள் மூலம் வரும் கட்டுப்பாடுகள், பிடிக்கவில்லை. இந்த காலத்து பசங்களுக்கு கூட்டுக் குடும்ப சூழ்நிலைகள், புரியாது. நீங்கள் தான், மகளுக்கு சொல்கிற விதத்தில் சொல்லி, புரிய வைக்க வேண்டும்.
இன்றைய பிள்ளைகளுக்கு, மொபைல் போன், இன்டெர் நெட், வீடியோ கேம்ஸ், தனியறை என, அதிக சுதந்திரம் கொடுத்து வைத்திருக்கிறோம். உறவினர்களிடம் பேசுவதில்லை; அவர்களது வீட்டு திருமணம், மற்ற விழாக்கள் எதிலும், இன்றைய இளைய தலைமுறையினர் கலந்து கொள்ள விரும்புவதில்லை.
அவர்களுக்கு பிடித்ததெல்லாம், பீசா, பர்கர், ரெஸ்டாரன்ட், தோழிகள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் தான்.
முதலில், உங்க மகளுக்கு, கூட்டுக் குடும்ப சூழ்நிலையில், எல்லாரிடமும் பேசி, பழகி, மகிழ்ச்சியாக இருப்பது எப்படி, என்பதை சொல்லிக் கொடுங்கள்.
அடுத்து, பிள்ளைகளது படிப்பிற்காகத்தான், மாமியார் வீட்டிற்கு வந்துள்ளீர்கள். இதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா சம்பவங்களுமே நன்மைக்கே என எடுத்துக் கொள்ள வேண்டும்.
தனியறை, தனிமைச் சூழல் அதிகம் கிடைப்பதால் தான், இன்றைய பிள்ளைகள், இளைஞர்கள், திருமணம் ஆனவர்கள், சிறுவர், பெரியவர் என, எல்லாருமே கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி, பல விதமான தவறுகளைச் செய்கின்றனர்.
நம் பிள்ளைகள் மீது, நாம் வைத்துள்ள அதிக நம்பிக்கையால், அவர்கள் கேட்பதற்கெல்லாம் தலையாட்டி, கெடுத்து, குட்டிச்சுவர் ஆக்கி வைத்துள்ளோம்.
'வயசு பெண்ணை தோழியர் வீட்டிற்கு அனுப்ப மாட்டேன்...' என்று பெரியவர்கள் சொன்னால், அது பத்தாம்பசலித்தனமா... என்ன மாதிரி கொடூர காலங்களில் வாழ்ந்து வருகிறோம். இன்று பிறந்த குழந்தையை கூட, பாலியல் பலாத்காரம் செய்யும் காமக்கொடூரன்கள் நிறைந்த உலகம் இது!
பெண் குழந்தைகளுக்கு எதிராக, என்னென்ன கொடுமைகள் நடக்கிறது என்பதை, தினமும், 'டிவி'க்களில் பார்த்து அதிர்ச்சியடைகிறோம்.
பெண் குழந்தைகளை உறவினர்களே, சீரழிக்கும் போது, தோழியர் வீட்டிற்கு எப்படி தனியாக அனுப்ப முடியும்.
இங்க பாருங்க சகோதரி... 'மகள் புலம்புகிறாளே...' என்று கவலைப்பட வேண்டாம். நன்றாக படிக்கும் பிள்ளைகள் எங்கிருந்தாலும் படிப்பர்.
உறவினர் வந்தால், சிறிது நேரம் பேசி விட்டு, 'படிக்கப் போகிறேன்...' என, சொல்லி, உங்களுக்கென கொடுத்திருக்கும் அறையில் படிக்கச் சொல்லுங்க... படிக்கிற பிள்ளையை, யாருமே தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
பாடம் சம்மந்தப்பட்ட சந்தேகங்களை, தோழிகளுடன், வீடியோ கால், வாட்ஸ் ஆப் என, எத்தனையோ வசதிகள் இருக்கே... அதன் வழியாக கற்றுக் கொள்ள சொல்லுங்கள்.
எப்படியும், ஊர் புறங்களில், பெரிய வீடு, பின்புறம் தோட்டம் இருக்கும். அங்கு சென்று படிக்கச் சொல்லுங்க...
எல்லாரும் ஒன்றாக சாப்பிட்டு, அரட்டை அடித்து, விளையாடி மகிழ, கிடைத்த தருணங்களாக, இந்த கூட்டுக் குடும்ப சூழ்நிலையை நினைக்கும்படி, மகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர்களுக்கு என்ன தெரியும்; நாம்தான் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
இன்றைய இளம் பிள்ளைகள், கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, கூட்டுக் குடும்பமே சிறந்தது என்பது, என் கருத்து!
அன்புடன் ஜெனிபர் பிரேம்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X