இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2010
00:00

புதிய திரைக்கதை உத்தி!
ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் இணைந்து நடிக்கும், "குற்றப்பிரிவு' படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. உலக அளவில் புகழ்பெற்ற திரைப்படமான, "ரா÷ஷாமான்' படத்தின் பாணியில், ஒரு சம்பவத்தின் இரண்டு பக்கங்களையும் சொல்வது போல், இரண்டு விதமான கோணத்தில் கதை சொல்லப்பட்டிருப்பதன் மூலம், இப்படத்தில் புதிய திரைக்கதை உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார், படத்தின் இயக்குனர் மன்மோகன்.
— சினிமா பொன்னையா.
* * *
விஜய் நடிக்கும், "வேலாயுதம்!'
தம்பி ஜெயம் ரவியை வைத்து, "தில்லாலங்கடி' படத்தை இயக்கி வரும் ஜெயம் ராஜா, அடுத்து விஜய்யை இயக்க தயாராகி வருகிறார். படத்தின் கதைக்கேற்ப, பலவிதமான தலைப்புகளை பரிசீலனை செய்து வந்த ராஜா, இப்போது, "வேலாயுதம்' என்பதை உறுதி செய்துள்ளார்; விஜய் தரப்பும் இந்த டைட்டிலை ஓ.கே., செய்துள்ளது.
* * *
வான்தீவில் படமாக்கப்பட்ட முதல் பாடல் காட்சி!
தூத்துக்குடியிலிருந்து 25 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது வான்தீவு. இதுவரை எந்த சினிமாக்காரர்களின் காலடியும் படாத இந்தத் தீவில், முதன் முதலாக கால் பதித்துள்ளது, "மார்கழி 16' படக்குழு. ஜிம்மிஜிப் போன்ற உபகரணங்களுடன் 25 படகுகளில் வான் தீவுக்கு சென்ற படக்குழு, அங்கேயே கூடாரம் அமைத்து, ஒரு வாரம் தங்கி, ஒரு பாடல் காட்சி முழுக்க படமாக்கிய பின்னரே திரும்பியுள்ளனர்.
— சினிமா பொன்னையா.
* * *
அதிர்ச்சி கொடுத்த அசின்!
தமிழில் விஜய்யுடன், "பாடிகார்ட்' ரீ-மேக்கில் நடித்துவரும் அசின், அடுத்து, காக்க காக்க, எவனோ ஒருவன், தெலுங்கு, "சிக்' என இந்தியில் ரீ-மேக்காகும் படங்களிலும் நடிக்கிறார். இதனால், ரீ-மேக்காகும் படங்கள் மூலம், இந்திக்கு செல்ல திட்டமிட்டிருந்த நயன்தாரா, லட்சுமிராய், பத்மப்ரியா உள்ளிட்ட நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!
— எலீசா.
* * *
ஹாலிவுட் படத்தில் பத்மப்ரியா!

தென்னிந்திய மொழிப் படங்களைத் தொடர்ந்து, இந்தியில் கொடி நாட்டியுள்ள பத்மப்ரியாவுக்கு, ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. சிறிய அளவிலான கேரக்டர் ரோல்தான் என்ற போதும், "உலகமெங்கிலும் உள்ள ரசிகர்கள் என்னைப் பார்த்து ரசிப்பரே...' என்று பெருமையாய் பேசுகிறார். அரவைக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குக் கொதி பெரிது!
* * *
அதிரடி வில்லியாகும் ஸ்ரேயா!
தமன்னா, அனுஷ்காவின் அதிரடியால் காணாமல் போன ஸ்ரேயா, மீண்டும் தமிழில் தலை தூக்க ஆசைப்படுகிறார். அதன் காரணமாக, "கந்தசாமி'யில் நெகடிவ் கலந்த ஹீரோயினாக நடித்தவர், அடுத்து, "திமிரு' ஸ்ரேயா ரெட்டி போன்று, அதிரடி வில்லி ரோலில் நடிக்க வாய்ப்புக் கேட்டு, கோலிவுட் இயக்குனர்களை முற்றுகையிட்டு வருகிறார். அரிசி உழக்கு ஆனாலும், திருவந்தி காப்புக்கு குறைவு இல்லை!
* * *
ஆந்திராவில் குடியேறும் நயன்தாரா - நமீதா!
தமிழில் மார்க்கெட் இல்லாத நயன்தாரா, நமீதா இருவரும், "சிம்ஹா' என்ற தெலுங்கு படத்தில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்துக்கு, அங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், இவ்விரு நடிகைகளுமே தற்போது சென்னைக்கு டாட்டா காட்டிவிட்டு, ஆந்திராவில் குடியேறப் போவதாக கூறி வருகின்றனர். ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி!
— எலீசா.
* * *


Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X