கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2011
00:00

கேள்வி: வேர்டில் பெரிய அளவிலான ஒரு டாகுமெண்ட் முடித்த பின்னர், பாராக்களை இடம் மாற்றி வைக்க வேண்டியுள்ளது. ஒன்பதுக்கும் மேற்பட்ட பாராக்களைப் பல இடங்களில் மாற்றி வைத்திட வேண்டும் என்கிற சூழ்நிலையில், வேலையில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படுகிறது. இதற்கு வேர்ட் தொகுப்பில் ஏதேனும் வழி உள்ளதா?
-கே. ஏகாம்பரம், திருவள்ளூர்.
பதில்:இதற்கு வேர்ட் தொகுப்பில் தனியே எந்த டூலும் இல்லை. ஆனால் அதன் டூல் ஒன்றை, நம் முயற்சியுடன் இணைத்தால், நீங்கள் குறிப்பிடும் பணியினை மேற்கொள்ளலாம்.
முதலில் எந்த பாரா எந்த இடத்தில் வர வேண்டும் என்பதனைத் தீர்க்கமாக, தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது முதல் பாரா 9-ஆவது இடத்தில், மூன்றாவது பாரா முதல் இடத்தில் என அனைத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது முதல் இடத்தில் வர வேண்டிய பாராவின் தொடக்கத்தில், அது முதல் இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ எங்கு இருந்தாலும், 1 என எண் இடவும். இப்படியே ஒவ்வொரு பாராவிற்கும் எண்களை இடவும்.
பின்னர், Table மெனு செல்லவும். இங்கு Sort என்னும் கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். Sort Text என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Sort By என்பதில் Paragraphs என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதுதான் அங்கு டிபால்ட் ஆக இருக்கும். பின்னர், அருகில் மேலிருந்து கீழாகவா அல்லது கீழிருந்து மேலாகவா என்ற வகையில் Ascending /Descending என இரண்டு பிரிவு இருக்கும். இதில் உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக் கவும். பின்னர் ஓகே கிளிக் செய்தால், வேர்ட் அதன் பாராக்களை, எண்களின் அடிப்படையில் வகைப்படுத்தி வரிசைப்படுத்தித் தரும். பின்னர், எண்களை நீக்கிவிட்டு டெக்ஸ்ட்டை அமைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் நமக்கு அட்ரஸ் பார் தரப்படுகிறது. போல்டர் மற்றும் பைல் பார்க்க, அந்த பிரிவின் ஸ்குரோல் பாரை நகர்த்தி, அல்லது தொடர்ந்து என்டர் அழுத்தி பெறுகிறோம். பின் அட்ரஸ் பாரின் பயன் என்ன?
-தா. பாலச் சந்திரன், கோயம்புத்தூர்.
பதில்: சரியான சந்தேகம். பயனின்றி கம்ப்யூட்டரில் எதுவும் தரப்பட மாட்டாது. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ள அட்ரஸ் பாருக்கும் ஒரு பயன் உண்டு. விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஸ்டார்ட் மெனுவில் இருக்கிறீர்களா? உங்கள் சி டிரைவில் நிறைய போல்டர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது உங்கள் சிடி டிரைவ் அல்லது மற்ற டிரைவ்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் குறிப்பிடும் இடது புற பிரிவில் மிகவும் கீழாக ஸ்குரோல் செய்து போக வேண்டும். ஆனால் அட்ரஸ் பாரினைக் கிளிக் செய்து பாருங்கள். சி டிரைவின் போல்டர்கள் எல்லாம் தெரியாது. ஹார்ட் டிஸ்க்கின் அனைத்து மெயின் டிரைவ்களும் அடுத்தடுத்துக் காட்டப்படும். அட்ரஸ் பார் நமக்குத் தரும் வசதி இது.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரைப் பூட் செய்திடுகையில் “Windows encountered an error accessing the regisry. Windows will repair the registry for you and restart to continue” என்ற செய்தி வருகிறது. இதற்கு என்ன காரணம்?
-சி.கார்த்திகேயன், மதுரை.
பதில்: விண்டோஸ் சிஸ்டம் நம்மை எச்சரிக்கும் ஓர் இடம் இது. இதனை சரி செய்திடலாம்.
Swap file என்ற ஒரு பைலை விண்டோஸ் எல்லாக் கம்ப்யூட்டர் களிலும் உருவாக்கிப் பயன்படுத்தி வரும். கம்ப்யூட்டர் நினைவகத்தில் இடம் இல்லை என்றால் நினைவகத்தில் எழுதப்பட வேண்டியவை ஸ்வாப் பைலில் எழுதப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்வாப் பைலிற்கான இடம் போதுமானதாக இல்லை என்று தெரிகிறது. இதற்கு அதிக இடத்தை ஒதுக்கினால் இது போன்ற செய்தி வராது. இது பற்றிய மேலும் விபரங்களுக்கும் இதனை எப்படிச் சரி செய்திடலாம் என்பதற்கும் http://support. microsoft.com/?kbid=193903 என்ற முகவரியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் தகவல்களைப் படித்து செயல்படுங்கள்.

கேள்வி: எக்ஸெல் மற்றும் வேர்ட் தொகுப்பில் டெக்ஸ்ட் ஒன்றை பேஸ்ட் செய்தால் அதன் அருகே சிறிய சதுரக் கட்டம் ஒன்று தொங்கிக் கொண்டே இருக்கிறது. இதனைத் தவிர்க்க முடியாதா? அந்த இடத்தில் பேஸ்ட் செய்ததை இது சுட்டிக் காட்டுகிறதா?
-டி. ஆல்பர்ட் பெர்னாண்டோ, காரைக்கால்.
பதில்: இன்னும் சற்று கூடுதலான சமாச்சாரத்தை உள்ளடக்கி அது உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது. நீங்கள் அதனைத் தொட்டுப் பார்த்திருந் தால் முழு விபரமும் தெரிந்திருக்கும். இதில் ரைட் கிளிக் செய்தால் பேஸ்ட் செய்த டெக்ஸ்ட்டின் பார்மட்டைத் திருத்துவதற்கான ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இது நல்லதொரு வசதிதான் என்றாலும் உங்களைப் போன்ற பலருக்கு பிடிக்கவில்லை என்றால் இது போன்ற சிறிய ஐகான் வராமல் செட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்டைத் திறந்த பின் Tools கிளிக் செய்து Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுங்கள். இதில் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் Edit என்னும் டேபினைத் தட்டவும். கிடைக்கும் பல வரிகளில் Show Paste Options buttons என்ற வரியைக் கண்டு அதன் எதிரே உள்ள கட்டத்தில் காணப்படும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு கிளிக் செய்தால் டிக் அடையாளம் எடுக்கப்பட்டுவிடும். பின் OK கிளிக் செய்து வெளியேறவும். வேர்டிலும் இதே போல் அமைக்கலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்புக்கில் ரவுண்ட் ஆப் என்ற செயல்பாடு தொடர்ந்து செயல் படுவதால், சில கணக்குகளில் துல்லியமாக விடை பெற இயலவில்லை. எடுத்துக் காட்டாக என்ற எண் வரை சரியாக வருகிறது. உடன் ஒரு இலக்கம் சேர்ந்தால், ரவுண்ட் ஆப் செய்து விடுகிறது. இதனை எப்படி சரி செய்யலாம்?
-ஆர். கனகராஜ், விழுப்புரம்.
பதில்: எக்ஸெல் தொகுப்பில் பொதுவாகச் செல்லுகள் எல்லாம் General என்ற பார்மட்டைப் பின்பற்றுகின்றன. 10 இலக்கங்கள் வரையிலான எண்களை ஜெனரல் பார்மட் வெளிப்படுத்தும். எனவே அதுவரை துல்லியமாக விடை உங்களுக்குக் கிடைக்கும். 11 இலக்கங்கள் கொண்ட எண்ணை அதனால் வெளியிட முடியாது. எனவே Rounding செய்கிறது. சரியான விடைகள் முழுமையாகத் தெரிய வேண்டு மென்றால் பார்மட்டை நீங்கள் தான் சரி செய்திட வேண்டும். பார்மட்டிங் டூல் பாரில் Increase Decimal உள்ள டூலைப் பயன்படுத்தவும். அல்லது Format>Cells கட்டளை கொடுத்து Number டேபை அழுத்தி பார்மட்டை மாற்றவும்.

கேள்வி:எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றினை பிரிண்ட் எடுக்கும் போது செல்களைச் சுற்றிக் கட்டம் கட்டும் கோடுகள் அச்சாவதில்லை. இதனை எப்படி சரி செய்வது?
-என். ஷீலா ராணி, மதுரை.
பதில்: எங்கெல்லாம் செல்களைச் சுற்றிலும் மற்றும் குறுக்காகவும் பார்டர் வர வேண்டும் என எண்ணுகிறீர்களோ அவற்றை முதலில் தேர்ந்தெடுங்கள். பின் அதன்மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடுங்கள். விரியும் மெனுவில் Format Cells என்பதில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் எப்படி எல்லாம் கோடுகள் வேண்டும் என்பதற்கேற்ப ஆப்ஷன் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். நிச்சயமாய் அச்சில் கோடுகள் அதன்பின் கிடைக்கும்.

கேள்வி: என் தலைமை அலுவலகத் திலிருந்து வரும் டாகுமெண்ட்களில், தலைப்புகளுடன் கூடிய பல பத்திகள் உள்ளன. இவற்றின் டெக்ஸ்ட்டில் தேவையற்ற எழுத்துவகைகள் மற்றும் ஸ்டைல் பயன்படுத்தப் பட்டுள்ளது. என் ஊழியர்களுக்கு அவற்றை மாற்றித் தர விரும்புகிறேன். மொத்தமாக மாற்றும் வழி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-சா. பிரகாஷ், சென்னை.
பதில்: இது பலருக்குத் தோன்றும் விருப்பம் தான். இதனை மேற்கொள்ள சில வழிகளைக் கவனமாக, ஒன்றன் பின் ஒன்றாகக் கையாள வேண்டும்.
Ctrl+H கீகளை அழுத்தி Find and Replace டயலாக் பாக்ஸை வரவழையுங்கள். More பட்டனை அழுத்துங்கள். Find What என்பதில் கர்சரைக் கொண்டு வாருங்கள். Format பட்டனை அழுத்தி Style என்பதைத் தேர்வு செய்யுங்கள். Style பட்டியலில் Normal என்பதைத் தேர்வு செய்து Ok செய்யுங்கள்.
Find and Repalce டயலாக் பாக்ஸில் உள்ள Replace என்பதில் கர்சரைக் கொண்டு வாருங்கள். Specia பட்டனை அழுத்துங்கள்./ Find WhatText என்பதை கிளிக் செய்து Normal ஸ்டைலைத் தேர்வு செய்யுங்கள். Ok செய்யுங்கள். Format பட்டனை மீண்டும் அழுத்தி பின்பு Font பட்டனை அழுத்துங்கள். வேண்டிய பாண்டைத் தேர்வு செய்யுங்கள். அதன் அளவை மாற்றுங்கள். Bold, Italics போன்ற எபெக்டுகளை விருப்பப்படி மாற்றுங்கள். Ok செய்யுங்கள். Replace All பட்டனை அழுத்துங்கள். நீங்கள் செட் செய்தபடி மாற்றப்படும்.

கேள்வி: C:/Temp, C:/windows/ Temp போன்ற போல்டர்களில் ஏராளமான பைல்கள் உள்ளன. அவற்றை அழிக்கலாமா?
-டி. கார்த்திக் ராஜ், மதுரை.
பதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பல அப்ளிகேஷன்களும், இன்டர்நெட் பிரவுசர்களும், தங்கள் தேவைக்கேற்ப பல தற்காலிக பைல்களை உருவாக்கி இந்த போல்டர்களில் போட்டு வைத்திருக்கும். இந்த பைல்களை அவை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது அழிக்க முடியாது; பயன்படுத்தாத பைல்களை அழிக்கலாம்.
இந்த டைரகடரிகளுக்கே சென்று இவற்றை அழிக்க கட்டளை கொடுக்கலாம்.
அல்லது சி கிளீனர் என்ற புரோகிரா மினை இலவசமாக டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இந்த வேண்டாத தற்காலிக பைல்களை நீக்கும் பணியை அது பார்த்துக் கொள்ளும். அவ்வப்போது இந்த பைலை இயக்கினால் போதும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X