'பொற்கொடிக்கு சைக்கிள் வந்திருக்குதுக்கா! மந்திரி வர்றாரு... டவுன் ஸ்கூலுக்கு புதன்கிழமை கூட்டிட்டு வந்திரு!'
- அம்மாவிடம் சொல்லிவிட்டு விடைபெற்றார் ஊர் சிப்பந்தி. வீட்டுக்கு அப்பால் உள்ள உலகம் பொற்கொடிக்குள் விரியத் துவங்கியது.
பொற்கொடியின் தங்கை மற்றும் தம்பியின் உதவியோடு அந்த சைக்கிள் வீட்டுக்கு வந்த இரவில்...
'வண்டியை தள்ளிட்டு வர்றப்போ என் கூட படிக்கிறவ பார்த்தா தெரியுமா... வெட்கமா போச்சு!' அம்மாவிடம் சிணுங்கி கொண்டிருந்தாள் தங்கை. படுக்கையில் இருந்து பொற்கொடி எழ, சிணுங்கல் நின்றது. சில நிமிடங்களுக்குப் பின்... வாசலில் சைக்கிள் நகரும் சப்தம்.
பொற்கொடி சைக்கிளில் ஏற முயன்று கொண்டிருந்தாள். ஓடிவந்து துாக்கிவிட முயன்ற அம்மாவின் கைகளை தள்ளி விட்டாள். தானாய் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து... 'கை பெடல்' சுழற்றினாள். மூன்று சக்கர வண்டி மெல்ல நகர்ந்தது.
படைப்பு : பொற்கொடியின் சிறகுகள் (அழகிய பெரியவன் கதைகள்)
வெளியீடு : நற்றிணை பதிப்பகம்