அன்புடன் அந்தரங்கம்! (அனுராதா ரமணன்)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2010
00:00

அன்பு சகோதரிக்கு—
என் வயது 50. எனக்கு மூன்று குழந்தைகள். இரு மகன்களும், வெளியூரில், நல்ல வேலையில் உள்ளனர்; மகள், விடுதியில் தங்கி, பிளஸ் 2 படிக்கிறாள். என் கணவருக்கு வயது 57; கல்லூரி முதல்வராக இருக்கிறார். என் திருமணம் முடிந்த இந்த 30 வருடத்தில், ஒரு நாள் கூட நான் சந்தோஷமாக, நிம்மதியாக இருந்தது இல்லை. வீட்டிற்கு தேவையான, அத்தியாவசியப் பொருட் களை வாங்குவதற்கு, பணம் கேட்டால் கூட, அடி, உதை தான்; மிஞ்சினால் என்னை வெளியே தள்ளி, கதவடைத்து விடுவார்.
என் அப்பா அதை தரவில்லை, இதை தரவில்லை என்று குறை சொல்லி, அடிப்பார். என் வீட்டிற்கும், என்னை போக விட மாட்டார்; அவர்களையும், இங்கே வர அனுமதிக்க மாட் டார். என் மருத்துவச் செலவிற்கு கூட, என் அப்பாவிடம் போன் பண்ணி, அந்த பணத்தில் தான், நான் செலவு செய்ய வேண்டும். கஷ்டப் பட்டுதான் என் குழந்தைகளை வளர்த்தேன். நான் ஒழுக்கமானவள்; எந்த தப்பும் செய்யாதவள். ஆனாலும், இவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று எனக்கு புரியவில்லை. எங்களுக்கு சொந்த வீடு கிடையாது; வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறோம்.
என் கணவருடைய கெட்டப் பழக்கம், இப்போதுதான் எனக்கு தெரிய வந்தது. நாங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள, வயதுக்கு வந்த ஏழைப் பெண்களை குறிவைத்து, அவர்கள் பெற்றோர் சம்மதத்தோடு, அந்த பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். இரண்டு வருடமோ, மூன்று வருடமோ, அந்தந்த வீட்டில் இருக்கும் வரை, இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்துள் ளார். இப்படி என் கண்முன்னே மூன்று பெண் களுடன் தொடர்பு வைத்துள்ளார்; ஆனால், வெளியில் ரொம்ப நல்லவர் மாதிரி நடந்து கொள்வார்... பெண்களை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்.
ஏதாவது கேட்டால், அடி, உதை என்று தகராறு செய்வார். இதனாலேயே, நான் பால்வினை நோய், ரத்த அழுத்தம், இதயவலி என்று கஷ்டப் பட்டு கொண்டிருக்கிறேன். அவர் நண்பரிடமோ, குடும்பத்தாரிடமோ, கல்லூரி மேலாளரிடமோ சொல்லி பார்த்தால், திருந்தி விடுவார் என்று சொன்னால், அவர்கள் என்னை படுக்கைக்கு அழைக்கின்றனர். அதற்கு நான் உடன்படாததால், என் கணவரிடம், இல்லாதது பொல்லாதது சொல்லி, அடி வாங்க வைத்து விடுகின்றனர். மூன்று குழந்தைகளுக்கும் திருமணம் செய்ய வேண்டும். இந்த நிலையில், நான் என்ன செய்ய வேண்டும்.
— இப்படிக்கு,
அன்பு சகோதரி.


அன்பு சகோதரி —
உன் கடிதம் கிடைத்தது. என்ன பெண்ணம்மா நீ? கணவரை அனுசரித்துப் போக வேண்டியது நியாயம்தான். அதற்காக இப்படி அடி மாடாய், அசட்டுத்தனமானப் பதிவிரதாத்தனமாய், குட்டக் குட்டக் குனிந்து, தலையைக் காட்டிக் கொண்டிருக்கும் மக்குப் பெண்ணாய் இருப்பது அபத்தம்!
நீ ஒன்றும் நேற்றுத்தான் திருமணமானச் சின்னப் பெண்ணில்லை. அடியும், உதையும் பட்டுக் கொண்டே, மூன்று குழந்தைகளை இவரிடம் பெற்றிருக்கிறாய். தான் பெற்ற குழந்தைகளுக்குக் கூட, செலவு பண்ணாத மனிதன் என்ன மனிதன்? எதற்கெடுத்தாலும் மாமனார் வீட்டை எதிர்பார்ப்பவரை நம்பி, நீ எப்படி மூன்று குழந்தைகளைப் பெற்றாய்? இந்த மனிதர் தரும் பிள்ளைக்காக, நீ ஒவ்வொரு தடவையும், பிறந்த வீட்டின் உதவியை நாடி நிற்கும் போது, அவமானமாகக் கருதவில்லையா? "போதும் உன் உறவு!' என்று வெட்டிப் போட்டு விட்டு, போயிருக்க வேண்டாமோ!
சகோதரி... பொறுமை மிகுந்தப் பெண்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனாலும், இது எருமை மாட்டுப் பொறுமை. நல்ல கணவனின் சுகதுக்கத்துக்காக, ஒரு பெண் எத்தனை வேண்டுமானாலும் பொறுத்துப் போகலாம் அல்லது எப்படியும் திருந்தி விடுவார் என சிறிதளவு நம்பிக்கை இருந்தாலும், பொறுமை காக்கலாம்; இது தேறாத கேஸ்.
நளாயினி கூட, வியாதியில் அழுகிச் சொட்டும் கணவரை, கூடையில் வைத்து தூக்கிக் கொண்டு, விலை மகள் வீட்டுக்குப் போனாள் என்றுதான் இதிகாசங்களில் இருக்கிறதே தவிர, அப்படிப்பட்ட கணவரிடம், அவள்படுத்து, வியாதியை வாங்கிக் கொண்டதாக எங்கேயும் குறிப்பிடவில்லை.
நான் சொல்வது புரிகிறதா? கட்டுக் காவல் ஏதுமின்றி, உன் கணவர் தான் எங்கெல்லாமோ மேய்ந்து விட்டு வருகிறார் என்றால், நீ ஏன் அவருடன் படுத்தாய்? பெண்டாட்டி ஒத்துழைக்காத காரணத்தினால், அவர் மேயப் போனார் என்று யாரும் சொல்ல முடியாது; படுத்ததற்கு சாட்சி... மூன்று இருக்கிறதே.
இதோ பார்... "எனக்கு வயதாகி விட்டது; என்னால் முடியவில்லை...' என்று, அழுத்தமாகச் சொல். அடித்தால், "பிள்ளைகளிடம் சொல்லி, மானத்தை வாங்குவேன்...' என்று கத்து. ஆமாம்... தாராளமாய் நாலு வீடுகளுக்குக் கேட்கும்படியாகக் கத்து. இதற்காக உதவி கேட்டு கணவரின் நண்பர், கல்லூரி மேலாளர் என்று அலையாதே... நம் பிரச்னையை, நாமேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்னும் ஒன்று செய்... நேரே பக்கத்து வீட்டில் உள்ள, இவரிடம் காசுக்கு விலை போகிறப் பெண்களில் எவளாவது ஒருத்தியிடம், மிகவும் அந்தரங்கமாகச் சொல்வது போல் துணிந்து பொய் சொல்:
தங்கச்சி, அவருக்கு எய்ட்ஸ் நோய் இருக்கு. எங்க குடும்ப டாக்டர் நல்ல மருந்து, மாத்திரை எல்லாம் கொடுத்திருக்கார். ஆனால் பாரு... வேளா வேளைக்கு ஒழுங்கா அவரை மருந்தைச் சாப்பிட வைக்கவே முடிய மாட்டேங்குது... நீ சொன்னாக் கேட்பாரு. உன் மேல உசிரையே வச்சிருக்காரு! - இப்படி சொல் போதும்.
ஒருத்தியிடம் இருந்து, அத்தனைப் பெண்களுக்கும் விஷயம் பரவி விடும். நீ, உன் மகன்களிடம் போய் தங்கு; கூப்பிட்டால் வராதே. பையன்களின் திருமணம் பற்றி கவலைப்படாதே. பெண் படித்து முடிக்க, இன்னும் குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் இருக்கிறது. இந்த ஆட்டம் ஆடுபவர், அதற்குள் ஒரு மாதிரியாக அடங்கி விடுவார்.
தைரியத்தைக் கை விடாதே!
— இப்படிக்கு,
அன்புடன்,
அனுராதா ரமணன்.

* * *


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X