திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
00:00

கடந்த, 1881ல், கல்லுாரி பேராசிரியர் ஒருவர், வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்களும் ஆர்வமாக கவனித்து கொண்டிருந்தனர். 'உலகத்தில் உள்ள அனைத்தையும் கடவுள் தான் உண்டாக்கினார் என்பது உண்மையா...' என்றார், பேராசிரியர்.மாணவர்கள் மத்தியில் அமைதி. ஒரு மாணவர் எழுந்து, 'ஆம்... அதில் சந்தேகப்பட ஏதுமில்லையே...' என்றார்.'சரி... அப்படியானால், சாத்தானையும், அதாவது கெட்டவற்றையும் அவர் தான் படைத்தாரா...' என்று கேட்டார், பேராசிரியர்.சற்றும் தாமதிக்காத மாணவர், 'சார்... நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், சில கேள்விகளை நான் உங்களிடம் கேட்கலாமா...' என்றார்.'ஒய் நாட்... தாராளமாக கேட்கலாம்... இதுபோன்ற நிலையை தான், நான் எதிர்பார்க்கிறேன். வாட் ஈஸ் யுவர் கொஸ்டீன்...' என்றார்.'குளிர் என்ற ஒன்று உண்டா...''நீ ஏதோ வித்தியாசமாக கேட்க போகிறாய் என்று எதிர்பார்த்தேன். மிக சாதாரணமாக கேட்கிறாய்... குளிர் உண்டே... எங்களுக்கெல்லாம் குளிர்கிறது... ஏன், உனக்கும் குளிருமே... நீ உணரவில்லையா...' என்றார், பேராசிரியர்.'சாரி, சார்... நீங்கள் தவறான விடையளிக்கிறீர்... குளிர் என்பது, தனியான ஒன்றல்ல... வெப்பம் முழுவதுமாக மறைந்துவிட்ட ஒரு நிலை தான்... மேலும், சார்... தவறாக எண்ண வேண்டாம்... தங்களிடம் மேலும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்... கேட்கலாமா...' என்றார், மாணவர்.பேச நாவெழாத நிலையில், 'கேள்...' என்று பேராசிரியர் சைகை காட்ட...'உலகில் இருள் என்ற ஒன்று உண்டா...' என்றார்.'உண்டே...' என்று, பேராசிரியர் மென்று விழுங்க...'மறுபடியும் தவறாக பதிலளிக்கிறீர்... உலகில், இருள் என்று ஏதுமில்லை. வெளிச்சம் மங்கி, முழுவதுமாக இல்லாது போகும் நிலையே இருளாகும்... அதனால் தான் நாம், 'லைட் அண்டு ஹீட்' பற்றி படிக்கிறோம்... 'குளிரை பற்றியோ, இருளை பற்றியோ படிப்பதில்லை... இதே போல தான் சாத்தான் என்றோ, கெட்டவை என்றோ ஏதுமில்லை... மனதில் உண்மையான அன்பும், நம்பிக்கையும், கடவுள் மீது அசைக்க முடியாத பற்றும் கொள்ளாத நிலையே, 'ஈவிள்' எனப்படுகிறது...' என்றார், மாணவர்.விளக்கத்தை கேட்ட, ஆசிரியர் மற்றும் மாணவர்கள், அவரை பாராட்டினர்.அந்த மாணவர், விவேகானந்தர். தான் வாழ்ந்த, 32 ஆண்டுகளுள், இந்து மதத்தின் உயர்வை, உலகுக்கு பறைசாற்றியவர்.ஜன., 12, 1863ல் பிறந்து, ஜூலை, 4, 1902ல், உயிர் நீத்தார்.அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில், இவர் ஆற்றிய உரை, உலக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து: உலக புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர், முகமது அலிக்கு, 'மேஜிக்' வித்தைகள் தெரியும். இதனால், அடிக்கடி லண்டனுக்கு வந்த இவரை, 'பிரிட்டிஷ் மேஜிகல் சொசைட்டி' உறுப்பினராக சேர்த்துக் கொண்டது. மேஜிக் நிபுணர்கள், தாங்கள் செய்யும் வித்தைகளின் ரகசியத்தை வெளிப்படுத்தக் கூடாதென்று பிரமாணம் செய்து கொள்வர். இதற்கு எதிராக, அதன் ரகசியத்தை மக்களிடையே வெளிப்படையாக செய்து காட்டினார், முகமது அலி.விதிகளுக்கு மாறாக, முகமது அலி செய்யும் முறை, மேஜிகல் சொசைட்டியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்கி விட்டனர்.
நடுத்தெருநாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandrasekaran jeevaratnam - Chennai,இந்தியா
06-ஜன-201912:02:18 IST Report Abuse
chandrasekaran jeevaratnam இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது யாதெனில் வயதிற்கும் ஞானத்திற்கும் தொடர்பில்லை . 32 வயதிற்குள் எவ்வளவு ஒரு தெளிவான சிந்தனை ?தெளிவான விளக்கம்? புரிதலும் புரியவைப்பதுவும் மிகவும் உயர்வாக உள்ளதே. வயதாகியும் தெளிவில்லாத சிந்தனையும், பேச்சும், நடத்தையும், அரைகுறையாக எதையும் புரிந்துகொண்டு தானும் துன்பப்பட்டு மற்றவரையும் துன்பப்படுத்தும் ஜென்மங்கள் திருந்த ஞானியரின் வரலாற்றையும் போதனைகளையும் படிக்கவேண்டும். சிறுவயதினர் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக வாழ, வெற்றிபெற, ஞானியர்கள் வாழ்க்கை பேருதவியாக இருக்கும் அல்லவா? சிந்தனையில் தெளிவிருந்தால் பேச்சில் தெளிவிருக்கும் செயல்கள் போற்றுபவையாக அமையும் பிறகு வேறென்ன வேண்டும்.
Rate this:
Manian - Chennai,இந்தியா
07-ஜன-201911:23:29 IST Report Abuse
Manianசற்று மாற்றி யோசிக்கலாமே நேரான தர்க்கம், எதிர்மறை தர்க்கம் என்பதில் இரண்டு வித தர்க்க விஷயங்கள் உண்டு. நேரான வாதத்தில், ஆதாரத்தை முதலில் சொல்லி, முடிவுக்கு வருவார்கள். அதைத்தான் பேராசிரியர் செய்தார். ஆனால், விவேகானத்தாரோ, அடிப்படையில் இருந்து விடை அளித்தார். யோகிகள் இப்படித்தானே சொல்லி கொடுப்பார்கள். அது "எது" அது? இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு, இலை-முதல்- வேர் வரை தர்க்கம் அவர்களுக்கு இயற்கையாக வரும். ஆதி சங்கரருக்கு பதினாறு வயசில் ஞானம் வரவில்லையா? ஆனால், அவரும் சண்டாளன் ரூபத்தில் வந்த பரம சிவன் கேள்வி கேட்ட பின் தானே தான் செய்த தவறை உணர்ந்தார்? உண்மையை புரிந்து கொண்டார்? தள்ளி நில்லு என்று சொன்னது, என் சண்டாள உருவத்தையா, இல்லே என் உள்ளே இருக்கும் ஆத்ம ரூபனான பரமாத்வையா? ஏன் சங்கரர் அதை முன்பே தெரிந்து கொள்ளவில்லை? இலை-முதல்- வேர் வரை சிந்தனையை அவர் மூலம் உலகத்திற்கு கற்பிக்கவே/வளர்க்கவே பரமன் அப்படி கேட்டார். ஆகவே, வயதில் எதுவும் இல்லை. குழந்தைகள், வானம் ஏன் நீலமா இருக்கிறது என்றால், அதற்கு புரியும்படி பதில் சொல்ல முடியுமா? இன்டக்டிவ் ரீசனிங் -இலை மரத்தில் மரத்திற்கு உயிர் இருக்கும், அதற்கு வேரும் இருக்கும்- என்பதை புரிந்து கொள்ள வழி காட்டியும் வேண்டும். விவேகானந்தருக்கு கல்கத்தாவில் அப்படி பட்ட குரு ராமகிரஷ்னண பரமஹம்சர் இருந்தார்.ஆனால், கல்லூரி நாட்களிலேயே, சுய சிந்தனை முறையும் புரிந்து கொண்டிருந்தார். பாரதியாரை அவமானப்படுத்த, அவர் ஆசிரியர் காந்திமதிநாதன் 'பாரதி சின்னப் பயல் என்று முடியும் பாடலை எழுது என்ற போது, பாரதியார் “ ..காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்" என்று எழுதி அவரை தலை குனிய வைக்கவில்லையா? பேராசியருக்கு சாதாரண பள்ளி ஆசிரியர்களே இருந்தார்கள் (ஒரு அனுமானம்தான்). அவர்களுக்கும் இன்டக்டிவ் ரீசனிங் முறை பற்றிய ஞானம் இருந்திருக்காது....
Rate this:
Manian - Chennai,இந்தியா
09-ஜன-201908:59:55 IST Report Abuse
Manian".. திருந்த ஞானியரின் வரலாற்றையும் போதனைகளையும் படிக்கவேண்டும்... ". அது சரி, அதை எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லையே அயின்டினோ, புருடானோ, புத்தரோ எப்படி எல்லாம் முயற்சி செய்து, எப்படியெல்லாம் சிந்தனை செய்து அவர்கள் சொன்னதை அவர்கள் ம் முயற்சிகளை, சிந்தனைகளை வரிசை படுத்தி, கண்டுபிடித்தார்கள் என்று சொல்ல வில்லையே "என்" என்ற கேள்விக்கு சிறுவயது முதலே சரியான விடை கிடைத்தால்தான், இண்டக்டிவ் ரிசனிங் திறன் வளரும். பல பழம்கொடிகளை நாம் ஏன் புரிந்து கொள்ள முஐடியவில்லை. அதை சிக்கமாக சொன்னவர்கள், "சுருங்க சொல்லி விளங்க வைத்தால்" முறையை பயன் படுத்தினார்கள். அவர்கள் சொன்ன காலத்தில் இருந்தவரக்கல்லுக்கு அதே புரிதல் இருந்தது. ஆனால், பின்னல் வந்தவர்கள், பெரியவர்கள் சொன்னது என்று சந்தர்ப்ப-சாடச்சியங்களை தெரிந்து கொள்ளவில்லை. ஏச்சு நத்தை யூதர்களின் அறியாமையை போக்கி சொன்னவை, இன்று எல்லோருக்குமே புரிந்து, சரித்திர கால மற்றய தொடர்புள்ள உண்மைகளை அவர் பூராவும் சொல்லவில்லையே? ஆபேரி இருந்தாலும் அவர் சொன்னதெல்லாம், உலகில் எல்லா நாடுகளுக்கும் பொறந்து என்று கிருஸ்துவர்கள் ஏன் நம்புகிறார்கள். ஏச்சு பிரான், யூதர்களின் "பாவிகளே" என்கிறார். அவர்கள் நடத்தை, சமுதாயம் சீர் கெட்டிருந்தது, இன்றய, திருடர்கள் கழகம் போல். ஆனால், இந்து மதம், குழந்தைகளை பாவிகளாக பார்க்க வில்லையே . நம்மிடமே கடவுள் ருக்கிறார் எனாரால், நாம் எப்படி பாவிகள் ஆகமுடியும். ? உள்ளத்தில் உள்ள கடவுளை மறைத்து, தீயவர்கள் நாவர்களுக்கே பொருந்தும். இருந்தாலும், ஏசுநாதர் சொன்னார் என்று நாம வைத்து மத மாற்றம் ஏன் செய்கிறார்கள்? ஏனென்றால், ஆடுகள் மந்தை போல், இண்டக்டிவ் ரிச்சனிங்கை உபயோகிக்க நாடார்கள் என்று புரிந்து கொண்டுள்ளார்கள். ஆரம்பத்தில் காசு கொடுத்து, பின் ஏமாற்றுகிறார்கள். சுருக்கமாக, "சிறுவயதினர் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக வாழ, வெற்றிபெற, ஞானியர்கள் வாழ்க்கை பேருதவியாக இருக்கும் அல்லவா? சிந்தனையில் தெளிவிருந்தால் பேச்சில் தெளிவிருக்கும் செயல்கள் போற்றுபவையாக அமையும் பிறகு வேறென்ன வேண்டும்... என்பது மந்திரத்தில் மாங்காய் போடு என்பது போல். சித்திக்க முதலில் காருக்கு குடிக்க வேண்டும். புரிதல் தன்னாலேயே வரும்....
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
06-ஜன-201911:26:13 IST Report Abuse
Manian விவேகானந்தர் கேட்ட கேள்வி இரண்டு பக்கம் உள்ள கேள்வி. இதை (binary) சொல் என்பார்கள். இந்த சொற்களுக்கு இரண்டு பக்கம் உண்டு. ஒன்று நேரான பதில்,மற்றது எதிர்மறையான ( true - false ) பதில்.பூ-தலை உள்ள நாணயம், வெளிச்சம், வெளிச்சம் இல்லாமை (இருட்டுக்கு என்று இன்னொரு பெயர்) கடவுள் உண்டு - எதிர்மறை கடவுள் இல்லை(சாத்தான்). புள்ளிவிவர கணக்குகளில் இப்படி கேள்வி கேட்டு பல பதில்கள், மூன்று, நான்கு.. (உயிரோடு இருத்தல் alive, சுய ஞாபக்கம் இல்லாமல் இருத்தல்- Coma, உயிர் போன நிலையில் இருத்தல் - செத்தவர் dead.) போன்றவையும் உண்டு. இந்த மாதிரி கேள்விகளை புரிந்து கொள்வதற்கு நேரான வேரிலிருந்து இலைக்கு போதல்- from generalization to specificity -உதாரணமாக, 0,1,2,3,4,5,6,7,8,9 என்பது தசம எண்கள். இப்போ, 7 என்பது தசம எண்ணா? ஆமாம். 7+4 தசம எண்ணா? ஆமாம். இதை நேர்வாத தர்க்கம் என்பார்கள். பொதுவாக கம்பியூட்டரில் எழுத்ப்படும் மென்பொருள்களை -அல்காரிதம் என்கிறோம். இலையிலிருந்து வேருக்கு செலுத்தல் முறைகள் தலை கீழ்முறை -inductive logic- என்பதில், இலை இருக்கு, அது கிளையில்லிருக்கு, கிளளை மர்தில்இருக்கு ஆகவே மரத்திற்கு வேர் இருக்க வேண்டும்.ஆராச்சிகள் எல்லாம் இப்படித்தான் இண்டக்டிவ் லாஜிக் மூலமே நடை பெருகின்றன.இதை சூக்ஷும அறிவு என்பார்கள். வேதாந்தம் புரிய இந்த அணுகு முறையே தேவை. கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்பதை நேரடி தர்க்க வாதத்தால் புறிந்து கொள்ள முடியாது. ரிக் வேதத்தில், இயர்க்கை என்ற ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் அழகான இருக்கின்றன. ஒன்று அந்த மரத்தின் பழத்தை தின்கிறது, இன்னொன்று எதையும் தின்னாமல் முதல் பறவையை பார்த்துக்கொண்டிருக்கிறது என்று ஆரம்பிக்கிறது. விலக்கம் என்ன வென்றால், இந்த சரீரம் -உடலல் என்ற இயற்கையில்,ஒன்று ஆத்மாவாக வசித்து,செயல்படுகிறது. மற்ற பறவை பரமாத்மா- ஆத்மா இருக்கும் உடலால் செய்யும் எல்லாவற்றையம் -மனம்,வாக்கு,காயம்- என்ற அந்த உடலில் ஆத்மா இருந்து செய்யும் கர்மங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது டனிருக்கிறது. ஆகவே, தான் மனசாட்சி என்ற பரமாத்வாவிற்கு தெரியாமல் எதையும் செய்யமுடியாது என்றார்கள். அதையே பொதுவாக, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய், நெஞ்சில் கை வைத்து சத்தியம் செய் என்றார்கள். ஆத்மாவையோ, பரமாத்மாவையொ நேரில் காண முடியாவிட்டாலும் ,அனுமானிக்க முடியம். பரமா்மாவே இல்லை என்பவர்களும், இல்லாத ஓன்றை எப்படி எதிர்க முடியும்? எதிர்த்தால் அது இருப்பதை ஒப்புக் கொண்டவர்கள் ஆகிவிடுகிறா்கள். ஆகவேதான் கடவுள் மறுப்போறையும்,எதிர்மறை தர்க்கம் மூலம் இந்து மதம் ஏற்றுக்கொள்கிறது. அதாவது கடவுள் மறுப்பு செய்பவர்களுக்கு அதை சொல்லும் சரரியான வார்த்தை மொழியில் இல்லை. ஆகவவே, இயற்கைதான் கடவுள் என்றாலும் சரியே. பள்ளிகளில் இந்த இலை-முதல்-வேர்-வரை தர்க்க வாதாம் தனியாக கற்பிப்பிக்க படுவதில்லை. ஆனால் உபயோகிக்கிறோம். ஜியோமெட்ரியில்( Geometry) இது ஆரம்பிக்கறது.2 பக்கம், அதன் உள் அடங்கிய கோணம், ஒன்று போல் இருந்தால், அவை ஒன்றே வகை பட்ட (Congruence) முக்கோணங்கள். அது போலவே அல்ஜீப்ராவும் கற்பிக்க பட வேண்டும் (இல்லை என்பது வேறு விஷயம்) (5 +3)x(5 +3) என்பதை (5 +3)^2 ஸ்கொயர் என்று சுருக்கமாக எழுதலாம். அதையே ( a+b )^2 என்றும் எழுதலாம் .ஆனால் (ஆப்பிள்+ இளநீர்)^2 ஸ்கொயர் என்று ஏன் எழுத முடியாது.? ஏன் என்றால் சிறப்பு பெயர் பெற்ற ஆப்இள், இளநீர்களுக்கு சுய பெருக்கும் சக்தி கிடையாஉ.ஆகவே, அவற்றை முதலில் தனி ஒற்றெழழுத்தாக்கினால் மட்டுமே சுய பெருக்கல் முடியும். அந்த இலையில் அவற்றின் தனிப் ஒள் தன்ஐ நீக்கப்படும். எண் கணித முறை அங்கே மாறிவிடும். தண்ணீரை அளக்கலாம். அதே அளவு முறையில் ஆவியான வாயு நிலை அடைந்த திரவத்தை அளக்க முடியாதே கனபரிமாணம், அடர்த்தி முறை புகுந்து விடுகிறது. சரி, இவ்வளவு விரிவான விளக்கம் ஏன் என்றால், விவேகானந்தரின் வாத திறமை இலை-வழிவேர்காணல் முறை, பேராசியர் எண் கணித்தபடி வேர்- முதல்- இலை வரை,கையாண்டதால் மாடிக்கொண்டார். கேள்வி ஒன்று ஆனால் அதை அணுகும் தர்க்க முறை வேறு. இதன் காரணமாகவே கணித மேற்படிப்பபுக்களை மாணவர்கள் விரும்புவதில்லை. கல்வி முன்னேற, இரண்டு வகை தர்க்கங்களும் கற்பிக்க படவேண்டும்.அதற்கு பாடப்பத்தகங்களில் இந்த பகுதிகள் திறைமையாக கற்பிக்கும் சுய சிந்தனை உள்ள ஆசிரியர்களும் இல்லை,ஆரராய்ச்சிகளும்-காப்புறிமைகளும் இல்லை,வேலை திறமைகளும்இல்லை. பன்முக புரிதலுக்கு தர்க்கவாத எண்ணம் தேவை.
Rate this:
Manian - Chennai,இந்தியா
07-ஜன-201905:15:15 IST Report Abuse
Manianஎன் விளக்கத்தை கேட்ட நண்பர், இதை இன்னும் கொஞ்சம் விரிவாக இந்த மறை முக இலை முதல்-வேர் வரை -தர்க்கத்தை: லாஜிக்கை(Logic) விளக்குங்கள், அதை எழுதுங்கள் என்றார்- யாரவது ஒருவருக்காவாது இது பயன்படலாம் என்பதால் அதை விவரிக்கிறேன். நாலாவது நூற்றாண்டில் (4 CE) ஆரிய பட்டர் என்ற வான சாஸ்திரி, கிரகங்களின் சுழற்சியை -ஓட்டத்தை -பாகைகளாக (டிகிரி Degree) எழுதும் பொது, வலது பக்க கடைசி இடத்தில நிரப்ப ஒரு குறியீடு எண் (symbol) கிடைக்கவில்லை. கையில் உள்ள ஐந்து விரல்களை எண்ணும் போது, ஆறு என்றால் அடுத்த தன் கை விரல் ஒன்றை நீட்டியோ, மடக்கியோ காட்டுவார்கள். இது விரல் கூட்டல் முறை. பூஜ்யம் என்பதற்கு அப்போது குறியீடும் இல்லை. ஆகவே, ஆரிய பட்டர் ஒரு சிறு புள்ளியை (.) அந்த இடத்தில் வைத்தார். 200 வருஷம் கழித்து, பிரம்ம குப்தர் என்பவர், அரேபிய வணிகர்களுக்கு விற்பனை, வருமானத்தை எப்படி எழுத்த வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். பொதுவாக, இதை பள்ளிகளில் பாடமாக கற்ப்பிக்க வில்லை. அப்போது, அவர் ஆரிய பட்டர் வைத்த சிறு புள்ளியை, (●) பெரிதாக்கி இடம் நிரபப்பி(filler ) வைத்தார். அந்த கணித முறையை இராக்கிய அரேபிய வணிகர்கள் மெசொபொடாமியா (Mesopotamia - modern Iraq ) கலீபாவிடம் சொன்னார்கள். கலீபா, சமிஸ்கிருதத்தில் எழுத பாட அந்த கணித முறையை, பாரசீக மொழில் மொழி பெயர்க்க பட்டு கொண்டு வரச்செய்தார். அதே சமயம், பவுத்த மததில் சூனியம் (காலி இடம், பூஜியம்,சைபர்) என்ற சொல் இருப்பதை தான் இந்த பெரிய புள்ளி காட்டுகிறது என்று எண்ணி, அந்த புள்ளியின் நடுவில் நிறைந்த கருப்பு நிறத்தை எடுத்துவிட்டு, இன்றய 0 ( . → ● → 0) வாக மாற்றினார்கள். 9-ம் நூற்றாண்டில், மகமத் அல் குவாரிஸ்மி என்ற கணித விற்பன்னர், பாக்தாதில் இருந்த 'புத்திசாலிகள் வீடு (House of Wisdom )என்ற கல்வி நிலையத்தின் தலைவராக இருந்தார். அவரே, இந்திய பூஜிய முறை கொண்ட தசம (Decimal 10) எண் முறை-01,2,3,..,9 யை எண் கணிதத்தை அல் ஜிப்ரா என்ற பெயரில் புதிய கணித பகுதியை அரேபிய மொழியில் எழுதினார்.அது லத்தீன் மொழி வழியே 12ம் நூற்றாண்டில்,பிஃபினாச்சி(Fibonacci. )என்ற அறிஞரால் யூரோப்பாவில் பரவியது. அல்-ஜபார் என்பதே லத்தின் மொழியில் அல்ஜிப்ரா அல்காரிதம் என்று மறுவியது. தசம எண்களில், எதையும் 0 (பூஜியம் )என்பதால் வகுக்க முடியாது (1/0, 2/0..) 15-ம் நூற்றான்டில் இன்ஐய உலகை நவவவீனமாக்கி, ஒப்பற்ற சர்ஐசக் நியூட்டனேர,அதே அல்ஜிப்ராவை விரிவு படுத்தி,பதிதாக கேல்குலஸ் (Calculus ) என்ற தொடர் கணிதத்தையும் கண்டு பிடித்தரர். அவரது மனதில் ,ஒரு எண்ணை பூஜியத்தால் வகுத்து, துண்டு துண்டாக ஏன் அதன் பரிமாணத்தை காணக்கூடாது.? அதில் வரும் விடையில் வரும் குரையும் கூடவே குறைக்கலாமேதண்ணீர், காற்று, ஒளி,ஒலி, மின் அலைகள் திடப் பொருள்கள் இல்லை என்றாலும், குறைபாடு உள்ள அளத்தலால் ஏன் கூட்டமுடியாது? 50 லிட்டர் என்பது தோராயமாக 49.95 முதல் 50.5 வரை இருந்தால் என்ன? 30 மைல் வேகம் தோராயமாக இருந்து விட்டு போகட்டுமே. சிறிது குறை இருந்தாலும் அளக்க முடிகிறதே ஆகவே,29.5 கீழ் வரம்பு,30.5 மேல் வரம்பக்குள், வேகம் சுமார் மணிக்கு 30 மைல் என்பது சரிதானே. இன்றய எல்லா வாகன வேகங்களும் இப்படி தோராயமானதேமுழு எண்களின் கூடுதலை கிரீக் Σ n , என்றால், அதே சிக்மாவை இரு பக்கம் நீட்டி கீழ் -மேல் வரம்புகளை காட்டி ʃ dx கூட்டல் குறியீடு செய்வோம். ஆகவே, நியூட்டனின் சிந்னை இன்டக்டிவ் ரீசனிங் முறையில்இலை இருந்தால் மரத்தில் வேரும் இருக்கும் என்ற தர்க்க வாதத்தால் வளர்ந்தது. அதனாலையே புவி ஈர்ப்பு விசை(Gravity ) உந்து சக்தி ( Momentum ),கால்குலஸ், வான சாஸ்திரம் என்ற பல்முனை (Polymath) இணைப்பகளை (Holistic view)காண முடிந்தது. ஆகவே தலை முதல்-கால் வரை,நுனி (இலை) முதல் வேர்வரை கல்வி இருந்தால் மட்டுமே ஒருவர் தன் நிறை-குறைகளை உண்மையாக உணர்ந்து குறைகளை நீக்க, குறைக்க வழிதேடாவரை, நான் படித்த கல்விக்கு ஏற்ப வேலை கிடைக்கவில்லை என்பதால் எதுவும் மாறாது. அதவாவது, படித்த எல்லா விஷயங்களின் மறைந்திரரு்கும்இணைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும். பண்ட மாற்றலில்,என் மாட்டை தருகிறேன்,உன் மோட்டார் சைக்கிளை தாயேன் என்பதில், இரண்டிற்ககும் உள்ள வெளிப்படையகத் தெரியாத,விலை மதிப்பு இருப்பதால்தானே ஒன்று உயிர் உள்ளது,மற்றது ஜடப்பொருள்தானேசமயலுக்கு சாமான்கள் வாங்கினால் மட்டும் போறாது. எப்படி,இணைந்த முறையில் சமைப்பது, ருசி பார்ப்பது என்பதுவும் தெரிய வேண்டும். அதற்கு இன்டக்டிவ் லாஜிக் சேர்ந்த கல்வியும், அறிதலும் வேண்டும். அப்படி பட்ட கல்வி கேஜி முதல் - காலேஜ் வரை வருமானால், இந்தியா உலகை ஆளும், இல்லையேல் புலம்பியே சாக வேண்டும். அரசியல் தலை சிறந்த பன்முக கல்வியாளர்கள் வரமாட்டார்கள் என்பதை உலகெங்கிலும் காணலாம்.திரு கலாமுக்கு ஏற்பட்ட துன்பங்களே இதற்கு உதாரணம். - கற்றதும் ,பெற்றதும், புரிந்து கொண்டதும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X