அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
00:00

அன்பு சகோதரிக்கு,என் வயது: 50, கணவர் வயது: 54. காதல் திருமணம் செய்தவர்கள். எங்களுக்கு ஒரே மகள். வயது: 25. ஐ.டி., பணியில் உள்ளாள். நானும், என் கணவரும், என் மகளை, சக தோழியாகவே கருதி வளர்த்துள்ளோம். படிப்பு, வேலை, திருமணம் என, அனைத்தும் அவள் விருப்பப்படியே!தன்னுடைய, 23வது வயதில், 'இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்...' என்று ஒரு பையனை, எங்களிடம் அறிமுகப்படுத்தினாள். 'பி.இ., பட்டதாரியான அவர், நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார். என் அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார்...' என்றாள்.குடும்ப பின்புலம் பற்றி பையனிடம் கேட்டபோது, 'அம்மா இறந்து விட்டார்; அப்பா மட்டுமே! அம்மாவின் மறைவுக்கு பின், சொந்த ஊரை விட்டு, சென்னைக்கு குடியேறி விட்டதால், உறவினர் யாருடனும் தொடர்பில்லை...' என்று கூறினான்.'அவரது நண்பர்களிடமும், அப்பாவிடமும் ஒருமுறை விசாரித்து விட்டாயா...' என, மகளிடம் கேட்டேன். 'அப்பா இவருடன் தங்கி இருக்கவில்லை. ஆசிரமத்துக்கு சென்று விட்டார். நானும், அவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவதால், அவரை பற்றி எனக்கு முழுவதுமாக தெரியும். அதனால், தனியாக விசாரிக்க வேண்டாம்...' என்று கூறிவிட்டாள்.மகளின் விருப்பத்துக்கு தடையாக இருக்க வேண்டாம் என்று, திருமணம் செய்து வைத்தோம்.சமீபத்தில், மகளின் திருமண சடங்கு விசேஷத்துக்கு, எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார், என் உறவுக்கார பெண் ஒருவர். அப்போது, 'இவரா உங்க மாப்பிள்ளை... இந்த பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சே... எங்க வீட்டுக்கு அருகில் தான் குடியிருந்தாங்க. ஆனா, பெண்ணுக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிஞ்சுட்டாங்க... விவாகரத்து வழக்கு நடந்துட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன்...' என்று சொல்ல அதிர்ச்சியடைந்தேன்.மகளிடம் மிகுந்த தயக்கத்துடன் விஷயத்தை கூற, 'ஆமா... எனக்கும் இந்த விஷயம் தெரிஞ்சு தான் கல்யாணம் செய்துகிட்டேன்...' என்று, வெகு சாதாரணமாக சொல்லி விட்டாள்.சுக்குநுாறாக நொறுங்கி போனோம்.'விவாகரத்து ஆகாத நிலையில், மாப்பிள்ளை இன்னொரு திருமணம் செய்ததே தப்பு; நிறைய சட்ட சிக்கல் ஏற்படுமே...' என்று நாங்கள் தவிக்க, 'எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்...' என்று, அவன் மீதான காதலால் அமைதியாக இருக்கிறாள். அவள், தற்சமயம் கர்ப்பமாக இருக்கிறாள்.அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், தவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு, நல்ல ஆலோசனை தருவீர்கள் என்று நம்புகிறோம்.— இப்படிக்கு,அவளின் தாய்.
அன்பு சகோதரிக்கு,நேரில் பார்க்காமலேயே, 'ஆன்லைனில்' சுடிதார்களும், செருப்புகளும், அழகு சாதன பொருட்களும் வாங்கி குவிக்கின்றனர், இன்றைய இளைய தலைமுறை பெண்கள். 'பிட்சா, பர்கர், கே.எப்.சி., சிக்கன்' போன்றவற்றை, 'ஆர்டர்' செய்து சாப்பிடும், நொடி நேர சந்தோஷம் போதும்; அவை, உடல் ஆரோக்கியத்தை கெடுக்குமே என்ற பயம் இல்லை.அதே, நுகர்வோர் கலாசாரத்தை தான், தங்களது திருமண வாழ்க்கைக்கும், அவர்கள் பின்பற்றுகின்றனர். 'உத்தரவாதத்துடன் கூடிய, 50 ஆண்டு திருமணம் தேவையில்லை. அலுவலகத்தில், கண்ணுக்கு அழகாக ஒருவன் வேலை பார்க்கிறான். அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதா, அவனது குடும்ப பின்னணி மர்மமாக இருக்கிறதா... அதனாலென்ன, அவனை பிடித்து போடு... பிரச்னை வந்தால், நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம்... இன்றைக்கு சந்தோஷ தாம்பத்யம் அனுபவிப்போம்...' என்கிறாள், உன் மகள்.'ஓரிரவு தாம்பத்யம்' எனப்படும், 'ஒன் நைட் ஸ்டாண்ட்'டுக்கு கூட, இன்றைய இளைய தலைமுறை, படித்த, கை நிறைய சம்பளம் வாங்கும், 60 சதவீத பெண்கள் தயார்.
சகோதரி...நீ, உன் மகளை நன்றாக தான் வளர்த்திருப்பாய்... அவளுக்கு தேவைப்படும் சுதந்திரத்தை கொடுத்திருப்பாய்... அவளது விருப்பு, வெறுப்புகளில் தலையிடாமல் இருந்திருப்பாய்... ஆனால், எல்லாம் கை மீறி போய்விட்ட பின், மகளுக்கு இதுபற்றி எவ்வித அறிவுரை கூறியும் பயனில்லை.இனி, நீ செய்ய வேண்டியவைகளை பட்டியலிடுகிறேன்...* மருமகனுக்கும், அவனது முதல் மனைவிக்கும் இடையே நடக்கும் விவாகரத்து வழக்கு, எப்போதிருந்து நடக்கிறது... இரு தரப்பு வக்கீல்கள் யார்... எந்த ஊர், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. விவாகரத்து கேட்பதற்கான காரணமாக, மருமகனின் முதல் மனைவியும், மருமகனும் நீதிமன்றத்தில் என்ன கூறியுள்ளனர். பரஸ்பர சம்மதத்துடன் கூடிய விவாக ரத்தா என, அனைத்து தகவல்களையும், தகுந்த வழக்கறிஞரை வைத்து சேகரி* விவாகரத்து பெறுவதில், முழு மனதுடன் உன் மருமகனின் முதல் மனைவி இருக்கிறாள் என்பதை உறுதி செய்த பின், அவளுடன் சமாதானம் பேசு. 'உன் மருமகன் ஒரு சாடிஸ்ட்...' என, முதல் மனைவி கூறினாலும், அந்த, 'சாடிஸ்ட்'டுடன் சாத்தியப்படும் காலம் வரை, உன் மகள் வாழட்டும்* விவாகரத்து வழக்கை, எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ முடித்து, மகள், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன், விவாகரத்து ஆணையை பெற பார்* மகளுக்கு, முதலில் நடந்த திருமணம் செல்லாது. விவாகரத்துக்கு பின், மகளுக்கும், மருமகனுக்கும் கோவிலில் திருமணம் செய்து வைத்து, திருமணத்தை முறைப்படி பதிவு செய்* உன் குழந்தையை மகிழ்ச்சிப்படுத்த, பக்கத்து வீட்டு குழந்தையின் கிலுகிலுப்பையை பிடுங்கி கொடுத்து விட்டோம். அந்த கிலுகிலுப்பை, உன் குழந்தையின் கையிலேயே இருந்தால், பரம சந்தோஷம். மூன்றாவது கைக்கு கிலுகிலுப்பை போகாமல் பார்த்துக் கொள்* 'செகண்ட் - ஹேண்ட் பொருளை, உனக்கே உனக்கு என்று வாங்கி கொடுத்து விட்டோம். இனியாவது, திருமண பந்தத்தின் உன்னதத்தை உணர்ந்து, கணவனை, கண்காணிப்பு, 'கஸ்டடி'யில் வை. அடுத்தடுத்து, உன் கணவன், திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடாமல், அவனை, சாம, தான, பேத, தண்ட முறைகளில் வசப்படுத்து...' என, கேட்டாலும் கேட்காவிட்டாலும் இந்த அறிவுரையை, உன் மகளுக்கு ஓது. நல்லதே நடக்க, இறைவனை பிரார்த்திக்கிறேன்.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthik r - coimbatore,இந்தியா
08-ஜன-201920:47:44 IST Report Abuse
karthik r ஒரு பெண் ஒரு ஆணிடம் ஏமாந்து மற்றொரு ஆணை திருமணம் செய்தல் தவறு இல்லை அனால் அதே ஒரு ஆண் செய்தல் தவறு அதும் மூன்றாவது செல்லாமல் இருக்க கண்காணிக்க வேண்டும் , பெண்ணின் பெற்றவர்களே காதல் திருமணம் செய்தவர்கள் தான் அனால் தன் மகள் தன் பேச்சை கேட்க வேண்டும் என்று ஆசை , அந்த ஆண் தான் திருமணம் அனாதை அந்த பெண்ணிற்கு மறைக்காமல் உண்மையை சொல்லியிருக்கிறான் அதை அந்த பெண்ணும் ஏற்று இருக்கிறாள் , முதல் மனைவியை என காரணத்திற்கு பிரிந்தார் என்று மட்டும் விசாரியுங்கள் காரணம் நியமனதாக இருந்தால் விட்டு விடுங்க , வாழ போகும் பெண்னே அதை ஏற்ற பிறகு நான் மிகுந்த புத்திசாலி அனுபவசாலி என்று கொழப்பாதீங்க ஒவொருவருக்கும் தனித்தன்மை மாறும் , மகளும் மருமகன் சேர்ந்து ஒற்றுமையை வாழ இறைவனை பிராத்தனை செய்யுங்கள் அம்மா
Rate this:
Share this comment
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
07-ஜன-201913:46:41 IST Report Abuse
V.B.RAM 'செகண்ட் - ஹேண்ட் பொருளை, உனக்கே உனக்கு என்று வாங்கி கொடுத்து விட்டோம்???? என்ன ஒரு தவறான கருத்து. ஆண் இரண்டாவது திருமணம் செய்தால் செகண்ட் - ஹேண்ட் மனதை தொட்டு சொல்லுங்கள் இந்த காலத்தில் முக்கியமாக நகரத்தில் எத்தனை பெண்கள் முதல் ஹாண்ட் என்று.
Rate this:
Share this comment
Cancel
Being Justice - chennai ,இந்தியா
06-ஜன-201920:54:31 IST Report Abuse
Being Justice இன்றைய தலைமுறையின் சீர்கெட்ட நடவடிக்கைகளில் ஒன்று. பிடித்து வாங்கிய உடை பிடிக்காமல் போனால் தூக்கி எறிந்து விடுவது போல வாழ்க்கைத்துணையை நினைக்கின்றனர். தன்னுடைய பெற்றோர் போல தானும் காலம் காலத்திற்கு சேர்ந்து வாழவேண்டும் என்று நினைப்பதில்லை. கலிகாலத்தில் கற்பு என்று ஒன்றும் இல்லை என்பதே இவர்களின் எண்ணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X