மதுரையின் மகிஷாசுரமர்த்தினி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2011
00:00

மார்ச் 27 - மாரியம்மன் பங்குனி திருவிழா ஆரம்பம்!

மாரியம்மன் வழிபாடு, தொன்று தொட்டே நம் மக்களிடம் உள்ளது. ஒவ்வொரு நகரின் காவல் தெய்வமாகவும், வெப்புநோய் தீர்ப்பவளாகவும் இவள் விளங்குகிறாள். பராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்து வதற்காக எடுத்த அவதாரமே, துர்க்கை அல்லது காளி. மகிஷாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காக, அவளுக்கு, சிவன், சக்தி கொடுக்க, அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமாலின் சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தலாகவும், அக்னி பகவானின் சக்தி கண்ணாகவும், மன்மதனின் சக்தி புருவமாகவும், குபேரனின் சக்தி மூக்காகவும், முருகனின் சக்தி உதடாகவும், சந்திரனின் சக்தி தனங்களாகவும், இந்திரனின் சக்தி இடையாகவும், வருணனின் சக்தி கால்களாகவும் அமைந்தன. ஆக, சர்வ சக்தி பொருந்தியவளான இவள், மகிஷாசுரனுடன் போரிட்டு வென்றதால், "மகிஷாசுரமர்த்தினி' என பெயர் பெற்றாள். இந்த சக்திக்கு, பல பெயர்கள் அமைந்தன; அதில் ஒன்று மாரி.
மற்றொரு வரலாறும் உண்டு.
ஜமதக்னி மகரிஷியின் மனைவி ரேணுகாதேவி, கற்புத்திறன் மிக்கவள். ஒரு சமயம், தண்ணீர் எடுக்கச் சென்ற போது, ஒரு கந்தர்வனின் அழகைக் கண்டு ஆச்சரியமடைந்தாள். எனவே, அவளது பத்தினித் தன்மைக்கு களங்கம் ஏற்பட்டதாக சொல்லி, தன் மகன் பரசுராமன் மூலம் அவளை வெட்டினார் ஜமதக்னி. தன் சாமர்த்தியத்தால் தாயை உயிர்ப்பித்தார் பரசுராமர். இவளே, "மாரியம்மனாக' வணங்கப்படுகிறாள்.
இதே கதையை வேறு விதமாகவும் சொல்வர்.
ஜமதக்னி முனிவர், கார்த்தவீரியன் என்பவனால் கொல்லப்பட்டார். அவரது மனைவி ரேணுகா, உடன்கட்டை ஏறினாள். அப்போது மழை பெய்யவே, சிதை அணைந்தது. தீக்காயங்களுடன் இருந்த ரேணுகா, வலி தாளாமல், அருகில் இருந்த வேப்பமரத்தின் இலைகளை ஆடையாக அணிந்தாள்; வேப்பிலையை அரைத்துப் பூசினாள். மஞ்சள், சந்தனம் தடவிக் கொண்டாள். குளிர்ச்சிக்காக கூழ் குடித்தாள். இதன் காரணமாகவே, மாரியம்மன் கோவில்களில் தற்போதும் இந்த வழிபாடு நடப்பதாகச் சொல்வர்.
சுமார், 800 ஆண்டுகளுக்கு முன், மதுரையை ஆட்சி புரிந்து வந்தார் கூன்பாண்டியன் . அப்போது, மதுரையின் கிழக்குப்பகுதி மகிழ மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்தது. அக்காட்டை, குறிப்பிட்ட ஒரு இனத்தவர் ஆக்கிரமிப்பு செய்தனர். அவர்களின் தொந்தரவு கூடுதலாகவே, மன்னர் அவர்களின் கொட்டதை அடக்கி, விரட்டி அடித்தார். அந்த இடத்தில், பாதுகாப்புக்காக வைகையில் கிடைத்த அம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவளே, வண்டியூர் மாரியம்மன்.
ஆரம்ப காலத்தில் துர்க்கையாக வணங்கப்பட்ட இவளுக்கு, கிழக்கு எல்லையில் கோவில் கட்டப்பட்டது. "துர்க்கம்' என்றால், "கோட்டை' என்று அர்த்தம். மதுரையின் எல்லையில், கோட்டை போல இருந்து, மக்களை காப்பவள் என்ற பொருளில் இவ்வாறு அழைக்கப்பட்டாள். மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள், போருக்கு செல்லும் முன், வெற்றி வேண்டி இவளை வணங்கியுள்ளனர்.
இவளது காலடியில் மகிஷாசுரன் இருக்கிறான். துர்க்கையின் காலடியில் தான் மகிஷாசுரன் இருப்பது வழக்கம். இங்கு, மாரியம்மனின் காலடியில் மகிஷம் இருப் பதால், இவளை, "மதுரையின் மகிஷாசுர மர்த்தினி' என்பர். இவள், வலது காலை மடித்து அமர்ந்திருக்கிறாள். பொதுவாக, இடது கால் மடித்த அம்பாளையே கோவில்களில் பார்க்க முடியும். குறிப்பிட்ட, சில கோவில்களிலேயே வலது கால் மடித்த நிலையில் பார்க்கலாம். வலது கால் மடித்த அம்பாள், பெரும் சக்தி வாய்ந்தவள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் உள்ள முக்கிய கோவில்களில் விழா நடக்கும் முன், முதல் பூஜை இவளுக்கே செய்யப்படுகிறது.
இங்கு அம்பிகைக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, மூலஸ்தானத்தில் பெரிய பாத்திரத் தில் வைத்திருப்பர். அம்மை நோய் உள்ளவர் களுக்காக தீர்த்தம் வாங்கிச் செல்கின்றனர். தோல் வியாதி உள்ளவர்கள், அம்பிகைக்கு, உப்பு, மிளகு இடுவர். வேண்டுதல் நிறைவேறிய வர்கள் வெள்ளிக்கிழமைகளில் கூழ்வார்த்தல் நேர்ச்சை செய்கின்றனர்.
இக்கோவிலின் எதிரே வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் உள்ளது. திருமலைநாயக்கர் மகால் கட்டுவதற்காக மணல் எடுத்த இடத்திலுள்ள பள்ளத்தை அழகான குளமாக மாற்றி விட்டனர். இந்தக் குளத்தைத் தோண்டும் போது கிடைத்த விநாயகர் சிலை தான், மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள பிரமாண்டமான முக்குறுணி விநாயகர்.
இங்கு, பங்குனியில் பிரம்மோற்சவம் நடக்கும். இந்த விழாவைக் கண்டு, அம்பாளின் அருள் பெறுங்கள்.
***

- தி செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X