வாழ்க்கை வசமாக...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
00:00

இனிக்கும் உறவுகள் என்றும் தொடர...
புத்தாண்டு பிறந்து விட்டது. நம்முடைய குறைகளை களைந்து, சந்தோஷமாக வாழ விரும்புகிறீர்களா...
இதோ சில டிப்ஸ்:* ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தவுடன், 'இது சொந்த வீடா... வாடகை வீடா... வாடகை எவ்வளவு...' என கேட்காதீர்... அவர்களின் பொருளாதார நிலையை அறிய, வீட்டை, கண்களால் ஆராயாதீர்* நீங்க முதலியாரா, கவுண்டரா, கிறிஸ்தவரா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்* காபியோ, டீயோ கொடுத்து உபசரித்தால், 'கொடுங்கள்...' என, அன்போடு கேட்டு, அருந்துங்கள் அல்லது மோரோ, குளிர் பானமோ கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். 'இப்பதானே காபி சாப்பிட்டு வந்தேன்...' என்று அலட்சியப்படுத்தாதீர்* அழைப்பிதழ் கொடுக்க வரும்போது, அவர்களிடமே பெயர் கேட்டு எழுதாதீர்* வீட்டிற்கு வந்தவர், 'வருகிறேன்...' என்று சொல்லி, வெளியே சென்று தெருவில் நடக்கும் வரை அல்லது வாகனம் எடுக்கும் வரை, அவர்களுடன் இருங்கள். மாறாக, கேட்டையோ, கதவையோ உடனே மூடாதீர்* 'உங்க மனைவி, ஏன் வேலைக்கு போறாங்க - போகலை...' என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்* ஒருவரது வீட்டுக்கு சாப்பாட்டு நேரத்தில் செல்லும் போது, 'சாப்பிடுறீங்களா...' என்று கேட்கும் வீட்டில், தண்ணீர் கூட குடிக்காதீர். மாறாக, 'சாப்பிடுங்க...' என்று சொல்கிற வீட்டில் நிச்சயம் சாப்பிடுங்க* 'பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா...' என்று கேட்காதீர். உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கின்றனர், எங்கு வேலை செய்கின்றனர் என்று சொல்லுங்கள். கேட்பவருக்கு பிடித்திருந்தால் சொல்லட்டும்; வற்புறுத்தாதீர்* 'ப்ரெண்டா பேசறேன், உரிமையில் பேசறேன்...' என, பொதுவில் அவர்களுக்கோ, அவர்களின் பிள்ளைகளுக்கோ, 'அட்வைஸ்' செய்யாதீர்* 'உங்களுக்கு என்ன குறைச்சல்... இரண்டு பேரு சம்பளம்... பையன், கை நிறைய சம்பாதிக்கிறான்...' -இப்படி சொல்பவர், நினைக்கிறவர்களிடம் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள் அல்லது உறவுகளை விட்டு விலகி விடுங்கள்* வந்த இடத்தில், உங்கள் புத்திசாலிதனத்தை காட்டாமல், அன்பை காட்டுங்கள். நீங்கள், எங்கெல்லாம் வீடு அல்லது மனை வாங்கி வைத்துள்ளீரோ, அதை பட்டியலிடாதீர். அது, அவர் மனைவிக்கு, மிகுந்த தர்மசங்கடத்தை உருவாக்கும்* வீட்டிற்கு வருவோரிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி, அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் என்று, பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்* வீட்டுக்கு வந்தவர்களிடம், கணவனை அல்லது மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர். அதேபோல், கணவன் அல்லது மனைவி பற்றியோ, விளையாட்டுக்கு சொல்கிறேன் என, கிண்டலடிக்காதீர்* உங்களின் சொந்த மற்றும் குடும்ப விஷயங்களை, ஒன்றிரண்டு நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்து, மற்ற நண்பர்களிடம் நாசூக்காகவும், இயல்பாகவும் பழக கற்றுக்கொள்ளுங்கள்* உங்களுக்கு எதெல்லாம் தர்ம சங்கடத்தை உருவாக்குமோ, அதை பிறரிடம், பலர் முன் கேட்காதீர்; பேசாதீர்* தேவையான செய்தி, உங்களுக்கு வந்து சேரும் அல்லது நீங்கள் தகுதியான நபர் என்றால், உங்கள் காதுகளில் அந்த செய்தி, 'பர்சனலாக' கொடுக்கப்படும். உறவுகளை புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்து விட்டீர்களா! - ஜோ.ஜெயக்குமார்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
09-ஜன-201906:15:40 IST Report Abuse
Manian இந்த மாதிரி கேள்வி கேடபவர்களை திருத்த முடியாது. ஆனால் இன்னோர் வழி உள்ளது. அது சரி, எந்த சித்தர், பறந்து போய் சீனாவில் நம்ம அக்கு பங்ச்சரை சொல்லி கொடுத்தாருண்னு தெரியுமா? தெறியாதே. அதாவ்துங்க, இந்த அக்கு பங்ச்சர்ன்னு இப்போ சொல்றதை வர்ம பிடி என்று சொல்லுவாங்க. இப்ப கூட கிராமத்திலே இடுப்பிலே புடுச்சுக்கிடடா, நாம் குடும்பத்து சிகை அலங்கார சிற்பி - அதாங்க பார்பர்ம்பங்களே, அவங்க நம்மை தூக்கி இடுப்பை ஒரு ஆடடு ஆடடினா வலியே போயிரும், அந்த வர்ம பிடியைத்தான் போகர் என்ற சித்தர் - அவரை போகியாங் என்று சென்னைவளே சொல்லுருக்காங்களாம். அவருதான் அங்கே பறந்து போய் அதை சொல்லி கொடுத்தாராம். அங்கே இருத்த சீனா ராஜா, இனிமே எல்லோருமே ஆக்குபங்ச்சர்தான் வைத்தியம்னு செய்துகிடனும்ன்னாராம். ஆனா நாம , இன்னுமே அதை தெரிஞ்சுக்கிடலையே. வந்தவர் உடனே ஓடி விடுவார். தெறியானதுன்னு சொல்லுவாரா? ஆகவே, அவரை திசை திருப்பறதுதான் ஒரே வழி. - நண்பர் கனசபாபதிக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
07-ஜன-201908:05:44 IST Report Abuse
Manian பொதுவாக, நாட்டுப்புரத்தில் இருந்து வரும் பழைய ஆட்களே இப்படி செய்வார்கள். அவர்களுக்கு, எல்லோரும் நம்மளுக்கு வேண்டியவர்கள், ஆகவே அவர்களை பற்றி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். நாகரிகமா நடந்து கொள்ளாதவரக்ள், பொதுவாக, அரை குறைகளே.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
06-ஜன-201912:23:56 IST Report Abuse
Girija சிம்பிளா டி வீ சீரியல் பாக்காதீங்கன்னு சொன்னா போச்சு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X