இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2019
00:00

வினை விதைத்தவன்...
சமீபத்தில், உறவினர் ஒருவரை சந்தித்தேன். தற்சமயம், விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். அவருடைய பெண் மற்றும் பையன் இருவரும், முன்னாள் மனைவியுடன் வசித்து வருகின்றனர்.
தன் பெண்ணை சந்திக்க முயன்றதாகவும்... ஆனால், அவள், முகம் கொடுத்து பேச மறுப்பதாகவும், அலைபேசியில் தொடர்பு கொண்டால், 'பேச விருப்பமில்லை...' என்று, இணைப்பை துண்டித்து விடுவதாகவும் புலம்பினார்.
இதே உறவினர், சில ஆண்டுகளுக்கு முன், முதல் பெண் குழந்தை பிறந்தபோது, தன் குடியே மூழ்கி விட்டது போல், உறவினர்களிடம் கூறினார்.
'பொட்டபுள்ள பொறந்துருச்சு... இனி எல்லாம் செலவு தான்... முதல் குழந்தையே, 'நெகடீவ்' (பெண் பிள்ளையை குறிக்கும் சொல், ஆண் என்றால், 'பாசிடீவ்') ஆகிப் போச்சு...' என்று புலம்புவார். அக்குழந்தையை அன்பாக துாக்கி கொஞ்சவோ, அரவணைத்துக் கொள்ளவோ செய்ததில்லை. பெண் குழந்தையை பெற்றதால், மனைவியிடமும் பாராமுகம் காட்டினார்.
அப்போது, அவருக்கு நாங்கள் எடுத்துக் கூறிய அறிவுரைகள், விழலுக்கு இறைத்த நீரானது.
என் உறவினர், விதைத்த வினையை தான், இன்று அறுவடை செய்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அவர் மனைவியும், மகளும் அவரிடமிருந்து தப்பித்து கொண்டனர் என்றே சொல்லத் தோன்றுகிறது.
இனிமேலாவது, ஆண் அகம்பாவர்கள் திருந்துவரா!
— சக்தி.எஸ்.சுதர்சன், பெங்களூரு.

ஏமாற்று பேர்வழிகள் ஜாக்கிரதை!
தோழியின் மகன், சென்னையில், ஒரு பிரபல பள்ளியில் படிக்கிறான். மாணவனின் வகுப்பில் படிக்கும் பெற்றோர் அனைவரும், 'வாட்ஸ் ஆப் குரூப்' உருவாக்கி, அப்பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வர்.
இதனால், குழந்தைகளின் பெற்றோருக்கு, இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
அன்றாடம் ஆசிரியர் சொல்லும் தகவல்கள், போட்டிகள் அனைத்தும் பகிரப்பட்டு, மிகவும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, அவர்கள் வகுப்பு, அனைத்து போட்டிகளிலும் முதல் இடத்தை பெற்று வந்தது.
வேறு பள்ளியிலிருந்து புதிதாக வந்து சேர்ந்த மாணவனின் பெற்றோரும், இந்தாண்டு, குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டனர். அப்புதிய மாணவனின் அம்மா, தோழிக்கு, 'மெசேஜ்' அனுப்பி, நிறைய சந்தேகம் கேட்பார்.
உதவும் குணம், நீங்கள் மிகவும் புத்திசாலி என்று, அவரை புகழ்ந்து கொண்டே இருப்பார். நாளடைவில் இருவரும், அந்தரங்கம் மற்றும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு ஒன்றி விட்டனர். பின், ஆண்டு விழாவில் சந்திக்கலாம் என்று, அவர்கள் பேசிக் கொண்டனர்.
ஆண்டு விழாவிற்கு கணவர் மட்டுமே வந்தார். விசாரித்ததில், 'என் மனைவிக்கு உடம்பு சரியில்லை... அவரால் வர முடியவில்லை...' என்று கூற, தோழிக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. மறுநாள் போன் செய்து, 'நான் நேரில் வந்து பார்க்கிறேன்...' என்றாள்.
அதற்கு அவளோ, 'என் மாமியார் மிகவும் கொடுமைக்காரர். என் சம்பந்தப்பட்டவர் யாராவது வந்தால், அவர்களை மனம் நோகும்படி பேசுவார். ஆதலால், வரவேண்டாம்...' என்று, மறுத்து விட்டார்.
சந்தேகம் ஏற்பட, அவர்கள் ஏரியாவில் வசிக்கும் இன்னொரு மாணவனின் பெற்றோரை விசாரித்தபோது, அவனது அம்மா, கிராமத்துவாசி என்றும், அந்த அளவுக்கு படிப்பறிவோ, மொபைல் போனை உபயோகப்படுத்த தெரியாதவர் என்றும் தெரிய வந்தது.
அவரின் கணவர் தான், 'மெசேஜ்' அனுப்பியதும் மற்றும் குரலை மாற்றி பேசிய ஏமாற்று பேர் வழி என்று தெரிந்ததும், சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கு சென்று, நேரில் அவரை வெளுத்து வாங்கி விட்டார்.
தாய்மார்களே... 'குரூப்'பில் நமக்கு யார், 'மெசேஜ்' செய்கின்றனர் என, தெரிந்து, உங்கள் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்வது நல்லது. இதுபோன்ற, 'சில்மிஷ' பேர்வழிகளிடம், உஷாராக இருங்கள்.
— பிரியா, சென்னை.

கழிப்பறையின் கதை!
'கழிப்பறை இல்லாத வீடுகளே இருக்கக் கூடாது...' என்று, மக்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறது, மத்திய அரசு. வீடுகளில் கழிப்பறை கட்ட, மானியம் வழங்கி, உற்சாகமூட்டி வருகிறது. 'கழிப்பறை இல்லாத வீட்டைச் சேர்ந்த மணமகனுக்கு, கழுத்தை நீட்ட மாட்டேன்...' என்று பெண்களும் ஆவேசக் குரல் எழுப்ப துவங்கி விட்டனர்.
இது ஒரு வகையில் மகிழ்ச்சியை வரவழைத்தாலும், நேரில் சந்தித்த சம்பவம், என் நெஞ்சை நெருடச் செய்தது.
சமீபத்தில், தொழில் நிமித்தமாக ஆந்திர மாநிலம் சென்றிருந்தேன். மத்திய அரசு பணியில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்க நேர்ந்தது. அது ஒரு, அரசு குடியிருப்பு.
மறுநாள் காலை, இயற்கை அழைப்பை நிவர்த்திக்க முனைந்தபோது, இரண்டு கைகளிலும் சொம்பில் தண்ணீர் எடுத்து, 'வா... வெளியே போகலாம்...' என்றார், நண்பர். 'என்னப்பா இது... அரசு குடியிருப்புல, 'டாய்லெட்' இல்லையா?' என்றேன். 'இருக்கு... ஆனா, குடியிருப்பில் உள்ளோர் யாரும் அதை உபயோகிப்பதில்லை...' என்று, 'திகில்' கிளப்பினார்.
தொடர்ந்து அவரே, 'அட... ஆமாம்ப்பா... தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்ன்னு சொல்றா மாதிரி, இங்குள்ளோருக்கு, வெட்ட வெளியை உபயோகப்படுத்தியே பழக்கம் ஆயிடுச்சு... குடியிருப்புல இருக்குற, 'டாய்லெட்'டை சிலர், குளிக்கவோ, குடோன் மற்றும் 'ஸ்டோர் ரூமாக' உபயோகப்படுத்திக்கிட்டு இருக்காங்க...' என, மேலும் மிரள வைத்தார்.
அரசு, என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பகீரத பிரயத்தனம் மேற்கொண்டாலும், கண்ணை இறுக மூடி, திறக்கவே மாட்டோம் எனும் மனோபாவம், மக்களிடம் இருந்தால், யாரால் என்ன செய்ய முடியும்?
—வா.தமிழ்ச்செல்வன், சென்னை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
17-ஜன-201903:27:06 IST Report Abuse
Manian pattikkaattaan - Muscat,ஓமன்- நண்பர்கள்: தவறான கருத்து. மனைவி வீட்டில் எல்லாமே பெண்கள். இளமையின் காரணமாக, சமுதாய கட்டுப்பாட்டுடன் , வயது காலத்தில் வெளியே சென்று காப்பற்ற பெண்களால் முடியவில்லை. ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்களையாவது காப்பாற்றி கொள்ளலாமே என்ற நடை முறை காரங்களே காரணம். புரிதல் இல்லாமல், எந்த காரணத்திற்கு என்று கேட்க்காமல், கூவுவது பேதமை. மேலும் லஞ்சம் கொடுக்காமல் எதுவுமே நடககாது என்ற நிலையில், சில சமயங்களில் எடுக்கும் முடிவுகளுக்கு யாரிடம் கேட்டு முடிவெடுப்பது? உதாரணமாக, இங்கே திருடர்கள் கழகம் தகுதியானவர்களை ஜாதிய முறையால் விரட்டி விட்டது. அவர்கள் ஏன் வெளி நாடு போனார்கள், துப்பாக்கி ஏந்தி திருடர்கள் கழகத்தார்களை ஏன் கொல்லவில்லை? அரிவாளால் ஏன் வெட்டுவதில்லை? யூதர்கள் சாகபோற்றோம் என்று தெரிந்தும், ஏன் நாசிகளிடம் சண்டை இட்டு சாகாவில்லை? இதெல்லாம் சரியான கேள்வியா? வரதடச்சினை சுமார் 1920 க்கு மேல்தான் நம்மிருக்கைக்கு வந்தது. எனது குழு பாண்டியர் காலத்தில், பெண்களுக்கே பேரச்சம் கொடுக்கப்படு அவர்கள் சொன்னார்கள். மேலும், திருமணங்கள் பொதுவாக, சொன்தத்திலேயே நடந்தது. எனவே அடிப்படை காரணங்களை ஆராயாமல், அதை யாரும் செய்யவில்லை, நமது இஷ்டம் போல் பிதற்றுவது அறியாமை.
Rate this:
Share this comment
pattikkaattaan - Muscat,ஓமன்
17-ஜன-201910:12:49 IST Report Abuse
pattikkaattaan நண்பரே.. நம் சமுதாய அடிப்படையே ஆண் என்றால் உயர்ந்த பிறப்பு , பெண் என்றால் தாழ்ந்த பிறப்பு என்ற வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது .. இதில் உங்களை மட்டும் குறை சொல்லமாட்டேன் .. என் மனைவி வீட்டிலும் நிறைய பெண் மற்றும் சில ஆண்கள் .. ஆனால் வளர்க்கும்போதே அவர்கள் தாய் ஆண் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுத்து, கல்வி கொடுத்ததும் , பெண் குழைந்தைகளை அவர்களுக்கு அடங்கி சேவகம் செய்யவேண்டும் என்பது போலவும் வளர்த்துவிட்டார்கள் .. இன்றுவரை அவர்கள் வீட்டு பெண்களுக்கு தன்னம்பிக்கை , தைரியம் என்பதே இல்லை .. என் மனைவி மட்டுமே எப்படியோ டிகிரி முடித்திருந்தாள் .. அவருக்கு உன்னால் முடியும் ..முடியும் என்று நான் திரும்ப திரும்ப வலியுறுத்தி , மேல் படிப்பு படிக்கவைத்து , டூ வீலர் , கார் டிரைவிங் எல்லாம் கற்றுக்கொடுத்து , ... இன்று எங்கள் குடும்பத்தில் எல்லோரும் எப்படி இவளால் முடிகிறது என்று வியக்கும் அளவிற்கு காரியங்கள் நடத்துகிறார் ..என் பெண் குழந்தைகளையும் நாம் தன்னம்பிக்கையூட்டி வளர்த்து வருகிறேன் .. பெரியவள் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றாள்... அரசு தொழில்நுட்ப கல்லூரியில் இளங்கலை பயின்று, இப்போது வெளிநாட்டில் ஆராய்ச்சி படிப்பு படிக்கிறாள் .. சிறியவள் கட்டிடக்கலை பயின்றுவருகிறாள் .. மீண்டும் சொல்கிறேன் நம் வளர்ப்பில்தான் உள்ளது .. ஆணோ , பெண்ணோ நன்முறையில் வளர்த்து , நல்ல எதிர்கால குடிமக்களை உருவாக்குவோம் .....
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
16-ஜன-201919:43:57 IST Report Abuse
Mohan Sundarrajarao வீட்டுக்குள் கழிப்பறை இருப்பது சுகாதாரம் இல்லை. இந்த காலத்தில் , வேறு வழி இல்லை என்றால், கழிவறை, செப்டிக் டேங்க் இவற்றை சரியாக கட்ட வேண்டும். பராமரிப்பு வேண்டும். ஆனால் நாம் அதை கட்டிவிட்டு மறந்து விடுகிறோம். பல வீடுகளில் செப்டிக் டேங்க் அருகிலேயே வாட்டர் sump உள்ளது. போரெவெல்ல் -உம் உள்ளது. இவை சுகாதாரம் அல்ல. ஒவ்வொரு வீட்டிலேயும் செப்டிக் குழியும் வேண்டாம், ஊருக்கு வெளியே வெட்ட வெளியில் கழிப்பதும் வேண்டாம். வேறு வழிகளை யோசிக்க வேண்டும். ஒவ்வொரு வீதியிலும் community கழிவறைகளை ஏற்படுத்தலாம்.
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201913:37:15 IST Report Abuse
PrasannaKrishnan In TN so many hate Modi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X