அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2019
00:00

* ஆர்.கோவிந்தன், தேனி: எதற்கெடுத்தாலும், பிரச்னைகளுக்காக, பலரும், கிளர்ச்சி செய்கின்றனரே... இதை, 'டிவி'யிலும் ஒளிபரப்பி வருகின்றனரே...
இது, தவறான செயல்! நமக்கு, உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவர் கவனிப்பார்... அவர், அதை சரி செய்ய முயல்வார்... சரியாகவில்லை என்றால், அவரைப் போட்டு அடிக்கலாமா? 'டிவி'யில், இவற்றை பார்க்காதீர்கள்!

என்.பஞ்சவர்ணன், நாகர்கோவில்: சினிமாவில் நடிக்க விரும்புகிறேன்; சென்னை வந்து முயற்சி செய்யலாமா?
சென்னையில், நிறைய ஓட்டல்கள் உள்ளன... அங்கு, 'சப்ளையர்' வேலை, நிச்சயமாகக் கிடைக்கும்!

எஸ்.சரவணன், பாண்டி: எனக்குப் பிடித்த, கொஞ்சம் பழைய நடிகையரை, விட்டு விட்டு, திரைப்படங்களில், இளமையானவர்களை நடிக்க வைக்கின்றனரே... ஏன்?
இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை... லென்ஸ் மாமாவிடம் கேட்டேன்... 'பிஞ்சு வெண்டக்காய் தான் சுவையாக இருக்கும் என்பது கூட உனக்குத் தெரியாதா...' என, முகத்தில் அடித்தார் போல், பதில் கூறினார்!

பெ.ராஜதுரை, சென்னை: விஷம் கலந்த கழிவுநீரை, நதி நீரில் கலந்து விடும் சாயப்பட்டறை அதிபர்களை என்ன செய்வது?
'கம்பி' எண்ண வைக்க வேண்டும். ஆனால், சில அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும், அவர்களிடம், கை நீட்டி, கை கட்டி நின்று விடுகின்றனரே... அரசும், இதற்கு உடந்தையாய் இருப்பது தான், மிகவும் சங்கடமாக உள்ளது!

எம்.கல்பலதா, சென்னை: மணி, உங்களது, கை பேசியில் விடியற்காலையிலேயே, குறுந்தகவல் செய்பவர்கள் உண்டா?
உண்டே! பணியில் இருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர்; பெரிய எழுத்தாளர்; இதுவரை, 100 புத்தகங்கள் எழுதி விட்டார். 100வது புத்தகத்தின் விலை, 1,500 ரூபாய். விடிகாலை, 4:00 மணிக்கெல்லாம் குறுந்தகவல் அனுப்பி விடுவார்.
அது, ஆங்கிலத்தில் இருக்கும்... அத்தனையும் தத்துவங்கள். கடைசியில், ஆங்கிலத்திலேயே, காலை வணக்கம் சொல்வார்; அது மட்டுமே எனக்கு புரியும்!
உடனே நானும், 'குட்மார்னிங் சார்...' என்று மட்டும் பதில் அனுப்பி விடுவேன்!
சில நாட்களில், களைப்பு அல்லது வேறு வேலை காரணமாக அவர் குறுந்தகவல் அனுப்பவில்லை என்றால், அவருக்கு, நானே காலை வணக்கம் அனுப்பி விடுவேன்... காலை, 4:00 மணிக்கு!

* எம்.ஜெசி, சென்னை: யாருக்கு, நெஞ்சு வலி அதிகமாக வரும்?
அரசியல்வாதிகளுக்கு... பொய் பேசுபவர்கள், அவர்கள் தானே! பொய் பேசினால், 'இது' கண்டிப்பாக வந்தே விடும்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
13-ஜன-201913:53:05 IST Report Abuse
Manian எஸ்.சரவணன், பாண்டி: (1 ) கொஞ்சம் பிரபலமானார் அதிக சமபளம் கேட்ப்பார்கள். பல கால்ஷிடுக்களை வைத்துகொண்டு ஆடம் போடுவார்கள். விஞ்ஞான பிரச்சினைகளை ஈகோவால் உண்டதாக்குவார்கள் என்று ஒரு சினிமா புரொடியூசர் சூனார். (20 கதைக்கு ஏற்றபடி நடிக்கும் பின் முகத்தன்மை, போடடோஜெனிக் முகவெட்டு , நடிப்பு, பாடும் திறமை உள்ளவர்கள் குறைவே. புதிய நடிகைகள் நன்றாக முன்னுக்கு வர உழைப்பார்கள். கதைக்கு தன்குந்த ஆடகளையே தேர்ந்துடுது, தங்கள் சொல்வது போல் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் விரும்புவார். எப்போது வரவேண்டும் என்றாலும் ஷுட்டிங்குக்கு வருபவர்களை விரும்புவார்கள். இப்படி பல காரணம் உண்டு. நாமும் புதிதாகா வந்த ஹோட்டலை தேடி ஏன் கெள்கிரோம்? தோசையை விட்டு விட்டு பிய்ட்ஸாவுக்கு ஏன் ஆசை படுகிறோம்?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஜன-201910:57:55 IST Report Abuse
D.Ambujavalli வழக்குகளில் theerppu ethirmaraiyaaka vanthaalum 'nenchu vali' varum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X