அடுத்தவர் நலனுக்காக...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2019
00:00

ஒருவரின் தியாகம், பலரை வாழ வைக்கும். இதை விளக்கும் வரலாறு இது:
'உத்தமர்கள் பல பேர் இருந்திருக்கின்றனர். அவர்களைப் போல நம்மால் இருக்க முடிகிறதோ, இல்லையோ; அப்படிப்பட்டவர்கள் எல்லாம் அவதரித்த பூமி இது... அந்த உத்தமர்களை நினைத்தால் கூடப் போதும். மனது தானே துாய்மையாகி விடும்...' என்பார், காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.
அப்படிப்பட்ட தியாக சீலர் ஒருவரின், வரலாற்றைத் தரிசிக்கலாம் வாருங்கள்!
கருடனுக்கும், நாகர்களுக்கும் ஓர் ஒப்பந்தம் இருந்தது. அதன்படி, ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு நாக குமாரன் வந்து, கருடனுக்குப் பலியாக வேண்டும்.
அந்தாண்டு; சங்கசூடன் என்னும் நாக குமாரனின் முறை வந்தது; விடை பெற வேண்டியவர்களிடம் விடை பெற்ற சங்கசூடன், அனுமதி பெற வேண்டியவர்களிடம் அனுமதி பெற்று புறப்பட்டான்.
சங்கசூடனின் தாயார், தன் மகன் பின்னாலேயே அழுது புலம்பியபடி வந்து கொண்டிருந்தார். அவரது புலம்பல், பார்த்தவர்களின் மனங்களைப் பிழிந்தது.
வருகிற வழியில், மலைய மலையில் வசித்து வந்த ஜீமூதவாகன்- - மலையவதி தம்பதியை சந்தித்தான், சங்கசூடன். தற்செயலாக, சங்கசூடனுடன் பேசத் துவங்கிய ஜீமூதவாகன், நடந்ததை அறிந்தார். அவர் மனம் என்னவோ செய்தது.
'சங்கசூடனா... மறுக்காதே, உனக்குப் பதிலாக, நான் போய் கருடனுக்கு உணவாகிறேன்...' என்று அழுத்தமாகச் சொல்லி, சங்கசூடனின் போர்வையை வாங்கி போர்த்தி புறப்பட்டார்.
சங்கசூடனின் போர்வையைப் போர்த்தியபடி வந்த ஜீமூதவாகனை, சங்கசூடன் என்றே நினைத்தது கருடன்; தன் வழக்கப்படி கொத்திக் கொத்தி உண்ணத் துவங்கியது. அது சாப்பிட வசதியாக, ஜீமூதவாகன், தன் உடம்பின் எல்லா பாகங்களையும் திருப்பித் திருப்பிக் காட்டி, 'நன்றாக உண்ணுங்கள்...' என்றார்.
கருடனுக்கு அது புதுமையாக இருக்கவே, சந்தேகம் தட்டியது. உடனே உண்பதை நிறுத்திய கருடன், சில வினாடிகளில் உண்மையை உணர்ந்தது; ஜீமூதவாகனை பாராட்டி, 'பெருந்தன்மை உள்ளவனே... உன் செயல் என்னை, என்னவோ செய்து விட்டது. உன் மனம் மகிழும்படியாக, என்ன வேண்டுமோ கேள், செய்கிறேன்...' என்று பரிவோடு கேட்டது.
நெகிழ்ந்த ஜீமூதவாகன், 'கருடனே... எனக்கு, என் உடம்பைப் பற்றிய கவலை கிடையாது. நீங்கள் எனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால், இன்று முதல் பாம்புகளை உண்ணக் கூடாது. இதுவே நான் கேட்கும் வரம்...' என, வேண்டினார்.
கருடன் மனம் மகிழ்ந்தது; உடனே போய் அமிர்தத்தை எடுத்து வந்து, ஜீமூதவாகன் மேல் பொழிந்தது. ஜீமூதவாகன் உடல், காயங்கள் நீங்கிப் பழையபடி ஆனது. அதன் பின் கருடன், 'ஜீமூதவாகனா... உன் எண்ணப்படியே, இன்று முதல் நான் பாம்புகளை உண்ண மாட்டேன்...' என்றபடியே சென்றது.
தங்கள் நலனுக்காக, தன் உயிரையே பலியிடத் துணிந்த ஜீமூதவாகனைப் பாராட்டியது, நாகக் கூட்டம்.
இவ்வாறு, அடுத்தவர் நலனுக்காகத் தங்கள் வாழ்வையே இழக்கத் துணிந்த உத்தமர்களை மறவாமல் இருப்போம்... இன்னல்கள் இல்லாமல் போகும்!

பி.என்.பரசுராமன்

ஆலய அதிசயங்கள்!
குளித்தலை மற்றும் மணப்பாறை வழியில் இருப்பது, ஐவர் மலை என்ற, ரத்தினகிரி மலை. இந்த மலை மேல், காகங்கள் பறப்பதில்லை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
13-ஜன-201905:31:15 IST Report Abuse
Manian மிக நல்ல கருத்து. அனால் இன்று கருடன் எந்த பாம்பாக இருந்தாலும் தின்கிறது. அதுபோலவே, நாகங்கள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வாழந்த காலத்தில் அது முடிந்தது. ஆனால், அரசியல், அரசாங்க வியாதிகள் நாகமாக மாறி வருவதால், மக்களின் பணத்தை பிடுங்க, தேவையானால் அவர்களையும் கொல்வதால் , இன்று ஜீமூதவாகனார்கள் யாருமே இல்லை என்பதும் வருத்தனமான செய்திதான். நியாயம், தர்மம் இருந்த பொது நடந்தவை, இன்றைக்கு நடை முறையில் சாத்தியம் இல்லை. தர்மம் அநேகமாக செத்து விட்டது. தர்மத்தின் சாடிச்சியான கோவில் சிலைகளும் அதன்னாலேயே கொள்ளை அடிக்க படுகின்றன. மக்கள் திருந்தினால்தான் அந்த நாள் வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X