இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2019
00:00

எதிர்பாராத பரிசு!
உறவினர் பெண், இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். சில நெருக்கடிகளால், அப்பெண்ணின் படிப்பு தடைபடக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. நன்றாக படிக்கும் பெண்ணின் படிப்பு தடைபடக் கூடாது என, உறவினர்கள் அனைவரும் கலந்து பேசினோம்.
அந்த பெண்ணுக்கு, உடை, புத்தகங்கள் வாங்குவது, கல்லுாரி கட்டணம் கட்டுவது மற்றும் இதர செலவுகளுக்கு யார் யார் உதவ முடியும் என திட்டமிட்டு, எங்களுக்குள் பேசி, 'பட்ஜெட்' தயார் செய்து உதவினோம். அப்பெண் தேர்வு எழுதி, 'கேம்பஸ்' தேர்வில் வெற்றி பெற்று, பெங்களூரில் உள்ள, 'விப்ரோ' நிறுவனத்தில், மென்பொருள் இன்ஜினியராக பணியில் சேர்ந்தாள்.
நம்மால் முடிந்ததை செய்து, அப்பெண்ணின் வாழ்க்கைக்கு உதவினோம் என, அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.
பணிக்கு சேர்ந்த முதல் மாத முடிவில், அந்த பெண்ணிடமிருந்து எங்களுக்கு ஒரு, 'பார்சல்' வந்தது. அதில், ஒரு புடவை, ஜாக்கெட் மற்றும் வேட்டி, டவலுடன் ஒரு கடிதமும் இருந்தது.
'முதல் சம்பளத்தில், எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்... உங்கள் உதவியால் இன்று நான் உயர்ந்துள்ளேன்...' என, எழுதியிருந்தார். உதவிய உள்ளங்கள் ஒவ்வொருவருக்கும், கடிதமும், பார்சலும் சென்றுள்ளது என்பதை, பின்னர் அறிந்தேன்.
'நன்றி மறப்பது நன்றன்று' என பேசியும், கேட்டும் வருகிறோம். எனினும், அந்த மகா உணர்வை அனுபவிக்கும்போது, கண்கள் பனித்தன. எங்களில் யாரும் பெரிய செல்வந்தர்கள் இல்லையாயினும், தக்க சமயத்தில் உதவியது குறித்த பெருமை இருந்தது. ஆனால், ஒரு சிறிய பெண், தன் முதல் சம்பளத்தில், எல்லாரையும் கவுரவித்தது, மறக்க முடியாத நிகழ்வாக என்னுள் பதிந்தது.
— எஸ்.பாலசுப்ரமணியன், ஐதராபாத்.

'சிம் கார்டை' துாக்கி எறிபவரா நீங்கள்?
பல தொலை தொடர்பு நிறுவனங்கள், இலவசமாக கொடுக்கும், 'சிம் கார்டு'களை வாங்கி, அவன் பயன்படுத்தாமல், தன் மற்ற நண்பர்களுக்கு கொடுத்து விடுவான், என் நண்பன்.
சமீபத்தில், விசாரணைக்கு என்று கூறி, என் நண்பனை அழைத்து சென்றனர், காவல் துறை அதிகாரிகள்.
பிரச்னை என்னவென்றால், இவன் கொடுத்த, 'சிம் கார்டை' பயன்படுத்தி, எவனோ ஒருவன், பல பெண்களுக்கு, ஆபாச குறுந்தகவல் அனுப்பியுள்ளான்.
அந்த மொபைல் எண்ணை தெரிவித்து, காவல் நிலையத்தில், புகார் கூறியுள்ளனர், அப்பெண்கள்.
'சிம் கார்டு' நிறுவனத்தை தொடர்பு கொண்ட காவல்துறை அதிகாரிகள், அந்த எண்ணுக்கான, 'அட்ரஸ் புரூப்'பை வைத்து, என் நண்பனை, விசாரணைக்கு அழைத்துள்ளனர். பல சிரமங்களுக்கு பின், இந்த பிரச்னையிலிருந்து மீண்டு வந்தான், நண்பன்.
எனவே, உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டாலோ, 'சிம் கார்டு' தொலைந்து விட்டாலோ, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், 'சிம் கார்டை' செயலிழக்க சொல்லி, தகவல் சொல்வது மிக முக்கியம்.
இதுபோல், இலவசமாக கிடைக்கும், 'சிம் கார்டு'களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். இல்லையேல், இதுபோன்று மாட்டி, அவஸ்தைப்பட வேண்டும்!
— கே.சசிகுமார், நாகப்பட்டினம்.

புத்தகம் கொடுக்க விரும்புகிறீர்களா?
சமீபத்தில், நண்பரின் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். விழா முடிந்து வெளியே வரும்போது, தாம்பூல பையை கொடுத்து, அருகில் மேஜையிலிருந்த புத்தகங்களை காட்டி, 'இதில், உங்களுக்கு தேவையான புத்தகங்கள் இருந்தால், எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றனர்.
அங்கு, குழந்தைகளுக்கான, தெனாலிராமன், பீர்பால் மற்றும் வண்ணம் தீட்டும் புத்தகங்கள். பெண்களுக்கான, கோலம், மெஹந்தி, சமையல். மாணவர்களுக்கான, கட்டுரை, இந்தி, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' மற்றும் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவரவருக்கு, தேவையானதை எடுத்துச் சென்றனர்.
பலரும், புத்தகங்கள் தருகிறோம் என்ற பெயரில், அவர்களுக்கு பிடித்த புத்தகத்தையோ அல்லது நம்மிடம் இருக்கும் புத்தகத்தையோ கொடுத்து, பயனில்லாமல் செய்து விடுவர்.
ஆனால், இங்கு, விருந்தினர்களுக்கு பிடித்தமான பல்வேறு புத்தகங்களை வழங்கியது, பாராட்டும்படி இருந்தது.
அவர்களை பாராட்டி, எனக்கு பிடித்த ஒரு பழமொழி புத்தகத்தை எடுத்து வந்தேன்.
புத்தகம் கொடுக்க விரும்புவோர், இந்த வழியை பின்பற்றலாமே!
பா.சின்மயானந்தம், மதுரை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
20-ஜன-201906:38:32 IST Report Abuse
Manian எதிர்பாராத பரிசு- நல்ல உள்ளம்தான். அதை இன்னும் கூட படடை தீட்டி இருக்கலாமே. நிகழ் சித்த உதைவியை உங்களை பேரால் இன்னா ஏழை பெண்ணிற்கும் படிக்க உதவி செய்ய போகிறேன். உங்களுக்கு தெரிந்த ஏழை பேரன், கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் விதைத்த ஒரு விதை இன்னும் பல மரங்கள் முளைக்க உதவியாக இருக்கட்டும். உங்களின் அன்புக்கு நன் அனுப்பும் பரிசு ஈடு இல்லை என்றாலும், இதை என் ஞாபகார்த்தமாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மக்கள் செல்வி - என்று எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே. நீங்கள் இந்த பக்கம் வரும்போது எனக்கு தகவல் சொல்லுங்கள். இதுபோல இன்றுவரை எனக்கு உதவி செய்தவர்களுக்கு எழுதி உள்ளேன். அவர்களும் தற்போது என் சுற்றத்தினர்கல்கா மாறி விடடார்கள். (2 ) புத்தகம் கொடுக்க விரும்புகிறீர்களா? இதுவும் நாளா எண்ணம்தான். பொதுவாக, இந்த புத்தகங்களை எடுத்து செல்பவர்கள் படிப்பதில்லை. நாளைக்கு பாத்துக்கலாம் என்று. மேலும் இதை தங்கள் நன்பர்களுக்காவது கொடுக்கலாம். அதை விட, இதை எடுத்து சென்று, முடிந்த பொது திருப்பித்தாருங்கள் என்று சொல்லி, வேறு விஷேங்களும் இது போல் செய்யலாம். டிவி பார்க்கும் ஆர்வம் புத்தகம் படிப்பதில் பொதுவாக படிப்பதில் இல்லை. தற்போது நான் எந்த புத்தகமும் வாங்குவதில்லை. அதை பாதுகாக்கும் திறன்,ஆர்வம் இல்லை என்பது வருத்தம் தருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X