அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2019
00:00

கே
தற்போது, பதவி உயர்வு பெற்று, போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் நண்பர் ஒருவரை, விழா ஒன்றில் சந்திக்க நேர்ந்தது.
பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் கூறிய சுவையான அனுபவம்...
வடிவேலுவின் பரம ரசிகரான இந்த அதிகாரி, அப்போது, வடபழனியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், எஸ்.ஐ., ஆக பணிபுரிந்து கொண்டிருந்தார்.
வடிவேலுவை நேரில் சந்திக்க விரும்பும் தன் ஆவலை, துணை நடிகர் ஒருவரிடம் கூறியிருக்கிறார். வடிவேலுவின் நண்பரான அந்த துணை நடிகரும்,எஸ்.ஐ., யை,
ஏவி.எம்., ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த வடிவேலிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.
சீருடையில், கம்பீரமாக சென்றால், 'கெத்'தாக இருக்குமே என்ற எண்ணத்தில், மிடுக்காக சென்ற இன்ஸ்பெக்டரை, வடிவேலுவிடம், 'அண்ணே... இவரு, உங்க தீவிர ரசிகர்...' என்று அறிமுகம் செய்து வைத்தார், அந்த துணை நடிகர்.
கஞ்சி போட்டு, 'அயர்ன்' செய்யப்பட்ட காக்கி சீருடையில் விறைப்புடன் இருந்த,
எஸ்.ஐ.,யும், மலர்ச்சியாக
புன்னகைத்து தலையசைக்க, வடிவேலுவோ அலட்சியமாக, 'ஆங்... ஆங்...' என்றபடி திரும்பிக் கொண்டார்.
வெறுத்து போன போலீஸ் நண்பர் கிளம்பி வந்து விட, மறுநாள், 'சார்... நீங்க நேத்து, சீருடையில் வந்திருந்ததால, போலீஸ் வேஷம் போட்டிருக்கிற, 'ஜூனியர் ஆர்டிஸ்ட்'ன்னு நினைச்சுட்டாராம், அண்ணன். நீங்க நிஜ போலீஸ்ன்னு சொன்னதும், ரொம்ப, 'பீல்' பண்ணினாரு...' என்றாராம், துணை நடிகர்.
- இது எப்படி இருக்கு!


ஒரு புத்தகத்தில் படித்தது...
எல்லாரையும் போல, சம்பிரதாயமான வாழ்க்கை நடத்தும் சாது பிராணியா நீங்கள்... நாலு பேர் உங்களை கவனிக்கிற மாதிரியோ, மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாகவோ இருப்பதென்றால், உங்களுக்கு வேப்பங்காயாக கசக்குமா...
வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இருப்பது மடத்தனம்; ஆனால், தனிப்பட்ட தன்மை என்று எதுவும் இல்லாமல் அமுங்கிப் போவதும் புத்திசாலித்தனமாகாது.
கீழே உள்ள கேள்விகளுக்கு, ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லி, நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
பலவகைப்பட்ட மனிதர்களுடன் பழகுவதில் உங்களுக்கு ஆர்வம் உண்டா?
ஒரு நிகழ்ச்சிக்கு போகும்போது, மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு பகட்டாகவோ, மோசமாகவோ உடை அணிந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு பிறகும், அந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வீர்களா?
உங்களிடம் உள்ள ஆடை வகை, 'லேட்டஸ்ட்' நாகரிகமானதல்ல; ஆனால், அணிவதற்கு வசதியாக இருக்கிறது. அதை உடுத்துவீர்களா?
அண்மையில் வெளிவந்த புத்தகங்களில் ஏதேனும் படித்து, பரபரப்பும், மகிழ்ச்சியும் அடைந்தீர்களா?
வயதில் இளையவர்களுடன் பழகுவது உங்களுக்கு, இன்பம் தருகிறதா?
ஒரு பாதுகாப்பான வேலை... அது, போரடிக்கும் பட்சத்தில், விட்டு விடுவீர்களா?
உங்களுடைய பந்தாவான அலுவல்கள் கெட்டு விட்டால், கோபம் வருமா?
வெளிநாட்டில் வாழ்க்கை நடத்த வேண்டி வந்தால், முயன்று பார்க்க ஆசைப்படுவீர்களா?
சில சமயங்களில், பண விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதுண்டா?
நண்பர்களின் பிறந்த நாள், விழா தினம் முதலியவற்றை நினைவு வைத்திருப்பது கஷ்டமாக இருக்கிறதா?
புதிய சொற்கள் மற்றும் பரிபாஷைகள் ஆகியவற்றை அவ்வப்போது கையாளுவீர்களா?
கடந்து போன, 50 ஆண்டுகள், வரப்போகும், 50 ஆண்டுகள் - இந்த இரண்டில் எது விருப்பமோ, அதை வாழலாம் என்று உங்களுக்கு சந்தர்ப்பம் தரப்பட்டால், வரப்போகிற, 50 ஆண்டை தேர்ந்தெடுப்பீர்களா?
'புல்லை மிதிக்காதே, பூவை பறிக்காதே...' என்பது போன்ற கட்டளையை, எப்போதேனும் நீங்கள் மீறியதுண்டா?
உங்கள் பெற்றோருக்கு பிடித்திருந்த அரசியல் கட்சிக்கு எதிரான வேறொரு கட்சியில், நீங்கள் சேருவீர்களா?
சாஸ்திரீய கலைகளில் உங்களுக்கு ஆர்வமும், ஈடுபாடும் உண்டா?
உங்கள் வீடு, நண்பர்களின் வீடுகளிலிருந்து வித்தியாசமான அமைப்பும், அலங்காரமும் கொண்டதா?
நாலு பேர் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில், பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்ளாத ஒரு கருத்தை, நீங்கள் பிடித்து வைத்து வாதாடுவீர்களா?
சதுரம் சதுரமான டிசைன்களை காட்டிலும், சுழி சுழியான டிசைன்கள் உங்களுக்கு பிடிக்குமா?
கல்யாணம் செய்து கொள்வதென்றால், அதிகம் பேருக்கு தெரியாத, ரகசிய திருமணத்தை விரும்புவீர்களா?
வித்தியாசமாக இருப்பது குறித்து, உங்களுக்கு ஓரளவு கர்வம் உண்டா?
விடை:
ஒவ்வொரு, 'ஆமாம்' என்ற பதிலுக்கும், ஐந்து மதிப்பெண்கள்.
மொத்தம், 80லிருந்து, 100க்குள் வாங்கினால்: கருத்துகளும், கற்பனைகளும் கொழிக்கும் நபர் நீங்கள். உங்களுடைய தீவிரமான தன்மையால், கஷ்டம் ஏற்பட்டால் கூட, விடாப்பிடியாக பழைய பழக்க வழக்கங்களை எதிர்த்து நிற்பீர்கள்.
மதிப்பெண் 55 - 75: அசாதாரண செயல்களை புரியும் துடிப்பு, அடிக்கடி உங்களுக்கு ஏற்படும். துணிச்சலுள்ள மனிதர்களையே நீங்கள் நாடுவீர்கள். வழக்கத்துக்கு விரோதமான இடங்களுக்கு செல்லவும், மற்றவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை காணவும் ஆசை உண்டாகும்.
மதிப்பெண் 30 - 50: நன்மை உண்டு என்று தோன்றினால் மட்டுமே, வழக்கத்துக்கு விரோதமானதை செய்ய முற்படுவீர்கள். உங்களை பிறர் விமர்சிப்பது பிடிக்காது. ஆனால், பிறரை நீங்கள் விமர்சிப்பீர்கள்.
மதிப்பெண் 0 - 25: புதிய கருத்துக்களையோ, விஷயங்களையோ தொடவே அஞ்சுகிறவர் நீங்கள். நாலு பேர் கவனிக்கிற மாதிரி இருப்பதை வெறுப்பீர்கள். பின்னணியில் இருப்பதே உங்களுக்கு பிடிக்கும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
22-ஜன-201907:46:11 IST Report Abuse
Manian ரசிகன் பந்தாவோடு போனா, நடிகனுக்கு பயம் வரத்தானே செய்யும். கூடடித்துப் போற பயலிடம், எப்படி உடை உடுத்திகிட்டு போனா அவ்ருக்கு புடிக்கும்னு கெளவை கேக்கலாமா போன, வந்தவனை உண்மையான போலீசுக்காரனுக்கு எப்படி வடி வேலுக்கு தெரியும் அளவு படிப்பு இருந்துச்சா?. நண்பர் ஒருவருடன் பேங்கில் லோன் வாங்கி அபோனீன். அவர் உறுதி இருந்த தாடை அலங்காகம், அந்த பேச்சு மேனேஜர் மாதிரி ஏ இருந்தது. லோன் கிடைத்தது. வெளியே வந்து, எப்படி அவர் மாதிரியே டிரெஸ் போட்டுக்கிட்டு போனீங்கன்னு கேடடேன் . அதுவா அமேற்கா ராச்சி இதழ் ஓனரில், நம்மை முன்னே பின்னே தெரியாதவர்களை பார்க்கா போனால், அவர்கள் போல் உடை உடுத்தி இருந்தால், அதுவே அவர்களுக்கு நாம் விரும்பும் தண்மை கொடுக்கும். அந்த பேங்கில் வேலை செய்யும் ஒரு பெண் பணியாளரிடம் இது பற்றி கேட்டு, நேரிலும் பார்த்தேன். அதனாலேயே இப்படி வந்தேன் என்கிறார். மேலும் இன்னொரு செய்த்யும் சென்னார். வெளிறிய நிறங்களில் மேல்-கீழாக கொடு போடுடா சாறுகளை கோடில்லாத அடர் கால் பேண்டுடன் அணிய வேண்டும்.அது பார்ப்பவர்களுக்கு நம் மீது ஒருவிக ஈர்ப்பை தருகிறது, மகிஷ்ச்சியாய் தருகிறது என்றும் சொன்னார். இன்று பலர் எந்த சிந்தனையும் இல்லாம, கன்னட கண்டா காடி கலரில் ஆடை அணிந்து வரும்போது, அவர்கள் ரவுடி போல் தெரிவதற்கு அத்துணை தன காரணம் என்றும் கண்டுள்ளார்கள். என் உடையாள் மாறி விடடான. பார்பவர்க்காளும் சற்று மரியாதையுடனும் , அன்புடனும் பழகுகிறார்கள். "ஆள் பத்தி, ஆடை பாதி என்பதில், ஆடை எப்படி இருந்தால் பாதி" என்பது புரிந்தது.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-ஜன-201904:15:41 IST Report Abuse
Cheran Perumal புகழின் உச்சாணியில் இருக்கும்போது அனாவசியமான கேட்டது காண்பிப்பதும் பின்னர் மார்க்கெட் தொலைந்ததும் சீந்த ஆளில்லாமல் இருப்பதும் சினிமாவில் சகஜம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X