அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2019
00:00

எஸ்.கீதா, மதுரை: உங்களுக்கு மிகவும் பிடித்த வாகனம் எது? காரா, மோட்டார் சைக்கிளா, ஸ்கூட்டரா?
இந்த மூன்றுமே கிடையாதம்மா... காலால் மிதித்து செல்லும், சைக்கிள் தான்... அதைத் தான், டீ கடை முன் சுலபமாக நிறுத்தி, அலுவலக ஊழியர்களுக்கு, டீ, காபி வாங்கிச் செல்ல முடியும்!

* எம்.பாரதி, நெல்லை: வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறேன்... இதற்கு யாரைக் கும்பிட வேண்டும்? கடவுளையா, மனிதரையா?
கடவுளைக் கும்பிடுங்கள்... ஆனால், உங்கள் தன்னம்பிக்கை, தளராத முயற்சி, தைரியம் ஆகியவற்றை விடாமல் கும்பிடுங்கள்... இவை தான் உங்களுக்கு தவறாமல் உதவும்!

ஆர்.ஹேமா, மாயவரம்: நீங்கள் விரும்பிப் பார்க்கும், செய்தி, 'சேனல்'கள் எவை... சினிமாவில் வரும், தமாஷ் காட்சிகளை ஒலி - ஒளிபரப்பும், 'சேனல்'களை பார்ப்பீர்களா?
தமிழ் செய்தி, 'சேனல்'களில் இரண்டு மட்டும் பார்ப்பேன்; அவை, நடுநிலையாக இருக்கும். ஆனால், அதில் ஒன்று, சமீப காலத்தில், கொஞ்சம் நிலை தடுமாறுவதாகத் தோன்றியது...
அதன் அதிபர், சமீபத்தில் என்னை சந்திக்க, அலுவலகம் வந்திருந்தார்... சிறிது நேரம் பொது விஷயங்களைப் பேசி, அவர் கிளம்பும்போது, 'நடுநிலை' பற்றிய விஷயத்தைக் கூறினேன்!
நடுங்கிப் போனவர், 'கவனித்து கொள்கிறேன்' எனக் கூறிச் சென்றார்!
நான் ரசித்து பார்க்கும் இரண்டு தமாஷ், 'சேனல்'கள், ஒளிபரப்புக்கு இடையே, 'சிறிது இடைவேளைக்கு பிறகு...' என கூறி, 15 நிமிடம் விளம்பரங்களை ஒலி - ஒளிபரப்புவதால், இப்போது, அவற்றை பார்ப்பதைத் தவிர்க்கிறேன்!

* ஜி.கதிர்வேல், சென்னை: 'அனுபவம், அனுபவம்' என்று கூறுகின்றனரே... அது என்ன?
ஒரு மனிதன் செய்யும் தவறுகளை, 'அனுபவம்' என்பர்; அதை உணர்ந்து தம்மை மாற்றிக் கொள்பவர்கள், எல்லா நன்மைகளையும் அடைவர்!

மா.மூர்த்தி, சேலம்: 'சொர்க்கம்... சொர்க்கம்...' என்று சொல்கின்றனரே... அது எங்கே இருக்கிறது?
யார் ஒருவன் கடன் வாங்காமல் வாழ்கிறானோ, அவன் வீட்டில்! 'நரகம் எங்கிருக்கிறது...' என, நீங்கள் கேட்கவில்லை... நானே சொல்லி விடுகிறேன்... அது, கடன் வாங்கியவன் வீடு!

* கு.மணிகண்டன், கோவை: ஆசை என்பது என்ன... அது, வெட்கம் அறியாது என்கின்றனரே... அது குறித்து விளக்குங்களேன்!
இன்றுள்ள அரசியல்வாதிகள் தான் உதாரணம்! எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு தாவுவது... அடுத்த தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறாது என, கனவு கண்டவுடன், மீண்டும், வெளியேறிய கட்சியை சென்று அடைவதும், அவர்கள், அவரை ஏற்றுக் கொள்வதும் தான்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan Raman - Neyveli ,இந்தியா
10-பிப்-201918:40:55 IST Report Abuse
Saravanan Raman 'ஆசை வெட்கம் அறியாது, என்பதற்கு உதாரணம்- இன்றைய அரசியல்வாதிகள் தான்' என்னும் அந்துமணி அவர்களின் ஆவேச பதில், அட்சரலட்சம் பெறும்
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
22-ஜன-201908:19:37 IST Report Abuse
Manian ஜி.கதிர்வேல்- ஆண்களுக்கு சுமார் 27-28 வயதில், முன் மண்டையில் உள்ள பிராண்டல் லோப் (Frontal Lobe) என்பது முதிரச்சி அடைகிறது என்று ஆராச்சிகள் கண்டுள்ளன (18 வயதில் மூளையின் மற்ற பாகங்கள், உடல் வளர்ச்சிசே அடைகின்றன).அதன் பிறகுதான், விடலை பருவத்தில் செய்த தவறுகளை உணருகிறோம். சிந்ததை செய்து - எது நல்லது கேட்டது ன்று நிர்ணயம் செய்கிறோம். திட்டங்கள் தீட்டுகிறோம். தவறு செய்தால், மன்னிகவும்- 'சாரி ( ) '. சொல்கிறோம். ஒரு சிறந்த வழிகாட்டியை (Menஏor) தேடுகிறோம். அவர்கள் சொல்வது அவர்களை தவறுகளை உணர்ந்து, சரியான வழிகளை கண்டுபிடித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தாவறுகளை நீக்க முடியாவிடடாலும் , குறைப்பது எப்படி என்று சொல்லித் தருவார்கள். மன குமுறல்களை, குறைகளை அவர்களிடைம் பகிர்ந்து கொள்ளும்போது, அது நடைமுயையில் 75 -95 % மக்கள் வாழ்வில் நடப்பதுதான், பழையவற்றை மறந்து முன்னே செல்லவேண்டும். நாம் செய்த முயற்சியில் என்ன தவறு நடந்து ( ) என்று கண்டு, அதே தவறை மறுமுறை செய்ய கூடாது என்றெல்லம் சொல்வார்கள். ஒரு முதிர்ந்த நண்பனாக தெரிவார்கள் . ஆகவேதான், பள்ளியில் படிக்கும் நாட்களிலேயே சமுதாய சேவை செய்ய வேண்டும். பலரது அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். தவறுகள் செய்து தோல்வி அடைவதை அது தடுக்கும். பள்ளியில் படிப்பது நம்மை சுற்றி உள்ள உலகம் எப்படி நம்மை பாதிக்கும் என்று புரிந்து கொளவதற்கே (மொட்டை உருப் போட்டு படித்து மறப்பதர்ற்கில்லை- இயற்கை விதிகள் பாரபட்சம் இல்லாமல் தண்டிக்கும் - மோட்டார் சைக்கிளில் வேகமாக போய் முன் செல்லும் வண்டியில் முட்டி சாவது - தம்பி, மெல்ல போ என்று புவி ஈர்ப்பு விதி சொல்லாது. அனுபவபாடம் மற்றய சமுதாயம், சுற்றத்தார்கள், உணவு முறைகள், பழக்கங்கள் போன்றவரை கற்க அனுபவ பாடமே தேவை. அதை பள்ளிகளில் கற்று கொடுப்பது கிடையாது- உதாரணமாக, எளல்லோரும் சாப்பிட ஆரம்பிக்கும் முன் அவசரமகா தான் மட்டும் சாப்பிடுவது, எச்சில் கை வழிய மற்றவர்களுக்கு முன் எழுந்திருந்து அவர்கள் இலையில் எச்சிலை சொட்டிக் கொண்டு செல்தல், மேல் அதிகாரியிடம் , தவறு செய்து விட்டேதேன், மன்னியுங்கள் என்று கூறாமல், யோவ், நீயும் தானே அப்படி ஆரம்ப காலத்திலே தப்பு செஞ்சிருப்பே, லேட்டனா என்னா, இப்போ வந்திட்டில்னில்லே என்று சொல்லி வேலை இழத்தல், இது புரியவில்லை, தயவு செய்து சொல்லித் தாருங்கள் என்று பணிவாக கற்காமல், என்ன பெரிய வேலை என்று தவறு செய்து வேலை இழத்தல்.. எல்லாம் தவறு செய்து கற்றவர்களே சொல்லி தர முடியும்.- அன்பு மணி அவர்கள் அதை ஒரு சுருக்கமா ஒரு குறள் போல் சிக்கமாக சொல்லிவிட்டார். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X