பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
00:00

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசின் கொள்கை அடிப்படையில் நிறுவப்பட்டு தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் இயங்கி வருகிறது.
நவோதயா வித்யாலயா சமிதி சார்ந்த கல்வி நிறுவனங்களில் தற்போது காலியாக இருக்கும் 251 காலியிடங்களை விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனமாக செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: குரூப் ஏ பிரிவிலான பிரின்சிபலில் 25, இதே பிரிவிலான அஸிஸ்டென்ட் கமிஷனர் - அட்மினிஸ்ட்ரேஷனில் 3, குரூப் சி அஸிஸ்டென்டில் 2, குரூப் சி கம்ப்யூட்டர் ஆபரேட்டரில் 3, குரூப் பி பிரிவிலான பி.ஜி.டி., பிரிவு முது நிலை ஆசிரியரில் 218ம் சேர்த்து மொத்தம் 251 இடங்கள் காலியாக உள்ளன.

வயது: பிரின்சிபல் பிரிவுக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும், அசிஸ்டென்ட் கமிஷனர் பிரிவுக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும், இதர பிரிவுகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: பிரின்சிபல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்புடன் பி.எட்., படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். மேலும், இவர்கள் குறைந்த பட்சம் 7 வருட கால பணியனுபவம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
அசிஸ்டென்ட் கமிஷனர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே பிரிவிலான பதவியில் 8 வருட காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டிருப்பதோடு பட்டப் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
அசிஸ்டென்ட் பிரிவுக்கு பட்டப் படிப்புடன் கம்ப்யூட்டரில் திறன் தேவைப்படும்.
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கு பட்டப் படிப்புடன் கம்ப்யூட்டர் தொடர்பான எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜில் பணியாற்றும் திறன் தேவைப்படுவதுடன் ஒரு வருட கால கம்ப்யூட்டர் டிப்ளமோ படிப்பையும் முடித்திருக்க வேண்டும். பி.ஜி., டீச்சர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது என்.சி.இ.ஆர்.டி.,யின் இரண்டு வருட இன்டக்ரேட்டடு போஸ்ட் கிராஜூவேட் படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் பி.எட்., படித்திருந்தால் முன்னுரிமை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2019 பிப்., 14.

விபரங்களுக்கு: https:// www.digialm.com/per/g01/pub/1258/EForms/image/2_PDFS/NVS_Advt_2019.pdf

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X