விண்டோஸ் மீண்டும் பதிக்கையில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2011
00:00

கம்ப்யூட்டர் இயக்கம் வைரஸ் அல்லது வேறு பிரச்னைகளால், முடங்கிப் போய் வேறு வழியின்றி மீண்டும் விண்டோஸ் இயக்கத் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? ரீ இன்ஸ்டால் செய்திடும் முன் கீழ்க் குறித்த பத்து பணிகளை முதலில் மேற்கொள்ளுங் கள். அப்போது தான் இன்ஸ்டால் செய்த பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல, நீங்கள் ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த பைல்களைத் தொலைத்து விட்டு திகைத்து நிற்க மாட்டீர்கள்.
முதலில் அவசர அவசரமாக ரீ இன்ஸ்டால் செய்து உடனே கம்ப்யூட்டரில் பணியாற்ற வேண்டும் என எண்ணாதீர்கள். இதற்கென கூடுதலாகவே நேரம் ஒதுக்கி மற்ற வேலைகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வையுங்கள். உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டுரை, பிசினஸ் மீட்டிங் சார்ந்த வேலைகள் என இருந்தால் அவற்றை வேறு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளுங்கள் அல்லது ஒத்தி வையுங்கள்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்திடும் நேரத்தில் அதனை அப்டேட் செய்வது குறித்தும் யோசியுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இடம் கொடுத்தால், விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறலாம்.
அடுத்து இங்கே தரப்படுவது நீங்கள் உங்கள் பழைய பைல்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1. லாக் இன் யூசர் ஐடி., பாஸ்வேர்ட்:
நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட், யூசர் ஐடிக்களை பிரவுசரில் வைத்து பாதுகாத்து பயன்படுத்துவதாக இருந்தால், சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்த பின் இவை எல்லாம் காணாமல் போயிருக்கும். எனவே இவற்றை எல்லாம் எப்போதும் ஒரு பைலில் போட்டு வைத்து அதனை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாத்து வைத்திருக்கவும். அல்லது நீங்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான டைரி அல்லது வேறு எதிலாவது குறித்து வைக்கவும்.

2. இமெயில் போல்டர்கள்: எந்த இமெயில் கிளையன்ட் புரோகிராமாக இருந்தாலும் அதன் இன் பாக்ஸ், அவுட் பாக்ஸ், சென்ட் ஐட்டம்ஸ், ட்ராப்ட் மெயில்கள் என அனைத்தையும் எக்ஸ்போர்ட் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கும் வழி இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி அதே பைல் பெயர்களில் சேமித்து வைக்கவும். மீண்டும் இந்த இமெயில் கிளையண்ட் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின் பைல்களை காப்பி செய்துவிடலாம்.

3. லேட்டஸ்ட் புரோகிராம்களும் டிரைவர்களும்: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்கள் என்ன என்ன என்று உங்களுக் குத் தெரியும் என்றா லும், சில நேரங்க ளில் அவை நம் நினைவிற்கு வராமல் இருக்கும். ஆனால் இவை எல்லாம் உங்கள் டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட் ஐகான்களாகவோ, குயிக் லாஞ்ச் புரோகிராம்களாகவோ இருக்கும். எனவே டெஸ்க்டாப் தோற்றத்தினை அப்படியே ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து பைலாக சிஸ்டம் புரோகிராம் இல்லாத போல்டரில் வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வழிகாட்டி யாகக் கொண்டு உங்களுக்கான புரோகிராம்களை நீங்கள் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு வழியும் உள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு இன்ஸ்டால் செய்திருக்கும் புரோகிராம்கள் பட்டியலை அப்படியே காப்பி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். பொதுவாக நாம் கூடுதல் புரோகிராம்களை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடும் பழக்கம் கொண்டிருக்கிறோம். எனவே இந்த புரோகிராம்களை எல்லாம், சி டிரைவ் அல்லாத, வேறு ஒரு ட்ரைவில் சாப்ட்வேர் அல்லது டவுண்லோட் என்று பெயர் கொடுத்து பாதுகாத்து வைத்துப் பின்னர் பயன் படுத்தலாம். இந்த புரோகிராம் களை இன்ஸ்டால் செய்த பின்னரும் டவுண்லோட் செய்த இ.எக்ஸ்.இ. பைல்களை அல்லது ஸிப் பைல்களை அப்படியே வைத்திருப்பது எப்போதும் உதவும். இந்த புரோகிராம்கள் சில சிடி அல்லது டிவிடியில் இருந்து இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய சிடிக்களைத் தனியாக சிஸ்டம் சிடிக்கள் அல்லது சாப்ட்வேர் சிடிக்கள் எனத் தனியே தொகுத்து வைத்திருக்க வேண்டும். இவற்றில் நாம் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது மதர் போர்டுக்கான டிரைவர் சிடிக்கள் தான். கம்ப்யூட்டர் வாங்கும்போது உங்களுக்கு இவை வழங்கப்பட்டிருக்கும். பலர் இது எதற்கு என்று தூக்கிப் போட்டிருப் பார்கள். அடிக்கடி இதனைப் பயன்படுத் தாததால் இது இருக்குமிடம் மறந்து கூடப் போயிருக்கும். இந்த சிடிக்கள் மிக மிக அவசியமானவையாகும்.
விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த பின் அனைத்து புரோகிராம்களையும் டிரைவர் களையும் ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டியதிருக்கும். இவற்றின் தற்போதைய அப்டேட்டட் பதிப்புகள் இருக்கிறதா என அவற்றின் இணைய தளங்களில் தேடி அவை உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கக் கூடியவை என்றால் அவற்றைத் தேடி டவுண்லோட் செய்து அவற்றையே பயன்படுத்தலாம்.

4. ஹார்ட் டிஸ்க் பேக் அப் மற்றும் சுத்தம் செய்தல்: விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திட முடிவு செய்தவுடன் நாம் இதுதான் சமயம் என்று ஹார்ட் டிஸ்க்கை சுத்தப்படுத் தலாம். தேவையற்ற பைல்கள், பயன்படுத்தாமல் ஆண்டுக் கணக்கில் ஹார்ட் டிஸ்க்கில் அடைபட்டிருக்கும் பைல்கள் என இருப்பவற்றை எல்லாம் அழித்திடுங்கள். பிரிய மனமில்லை என்றால் சிடிக்களில் பதிந்து வைத்து பின் அழித்திடுங்கள். இது கொஞ்சம் நேரம் எடுக்கும் அல்லது நாள் எடுக்கும் வேலைதான். எந்த பைல்களை அழித்துவிடலாம் என்று முடிவெடுப்பது என்பது சிரமம். எனவே ரீ இன்ஸ்டால் செய்திடலாம் என முடிவெடுப்பதாக இருந்தால் ஒரு வார காலம் ஒதுக்கி இந்த வேலையைக் கவனிக்கவும். பைல்களை அழித்த பின் மீதமிருக்கும் அனைத்து பைல்களையும் மொத்தமாக ஒரு முறை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு ஸ்கேன் செய்து பார்த்திடவும். ஏனென்றால் வைரஸ் பாதித்த பைல்களில் இருந்து வைரஸ்களை நீக்கலாம்; அல்லது அந்த பைல்களையே அழித்துவிடலாம்.

5. சர்வீஸ் பேக் பைல்கள்: நீங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த பதிப்பை ரீ இன்ஸ்டால் செய்கிறீர்களோ, அதற்கான அண்மைக் காலத்திய சர்வீஸ் பேக் பைல்களையும் இணைத்தே பதியவும். விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்தபின் அப்டேட் மூலம் இவற்றையும் இறக்கிப் பதிந்தால் உங்கள் சிஸ்டம் பாதுகாப்பாக இருக்கும்.

6. விண்டோஸ் இன்ஸ்டலேஷன்: விண்டோஸ் இன்ஸ்டால் செய்கையில் அதன் புராடக்ட் கீயினை எப்போதும் கை வசம் எழுதி வைத்திருக்க வேண்டும். இதனை ரீ இன்ஸ்டலேஷன் போது அடிக்கடி பயன்படுத்த வேண்டிய திருக்கும்.

7. இன்ஸ்டால் செய்தபின்: ரீ இன்ஸ்டால் செய்த பின் முதலில் உங்கள் பெர்சனல் செட்டிங்ஸ் மீது கவனம் செலுத்தி அவற்றை மேற்கொள்ளுங்கள். டிஸ்பிளே ரெசல்யூசன், டெஸ்க்டாப் பேக் கிரவுண்ட், பவர் செட்டிங்ஸ், எக்ஸ்புளோரர் அல்லது மற்ற பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் புரோகிராம் செட்டிங்ஸ், குக்கீஸ், ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்க செட்டிங்ஸ், டிபிராக் செட்டிங்ஸ் என பெர்சனல் விஷயங்களை முதலில் செட் செய்தால்தான் நமக்கு கம்ப்யூட்டரை இயக்க ஒரு பழக்கமான சூழ்நிலை கிடைக்கும்.

8.பாதுகாப்பு புரோகிராம்கள்: அடுத்ததாக ஆண்டி வைரஸ், ஸ்பை வேர் புரோகிராம், பயர்வால் ஆகியவற்றை மேற்கொள்ளவும். முக்கியமாக உங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப் பினைச் சரியாக முன்பு இருந்தது போல் அமைத்துக் கொள்ளவும்.

9. ரெஸ்டோர் பாய்ண்ட்: புதிய சர்வீஸ் பேக்கினை இன்ஸ்டால் செய்தவுடன் அதனுடன் சேர்த்து புதிய ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ளவும்.
இதன் பின் உங்கள் டிரைவர்கள் மற்றும் பிற புரோகிராம்களை ஒவ்வொன்றாக நிறுவவும். பிரச்னைகள் வந்தால் அவற்றிற்கான லேட்டஸ்ட புரோகிராம்கள் மற்றும் டிரைவர்களை இணையத் திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasann - vizak,இந்தியா
02-ஏப்-201109:03:44 IST Report Abuse
vasann very useful tips handle computers continue
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X