சாம்சங் சேட் 335 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
சாம்சங் சேட் 335
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 மார்
2011
00:00

எந்த நேரமும் மெசேஜ் அனுப்பிக் கொண்டும், சோஷியல் நெட்வொர்க் தளங்களில் தவழ்ந்து கொண்டும் இருக்கும் இளைஞர்களைக் குறி வைத்து வடிவமைக்கப் பட்டிருக்கும் மொபைல் போன் சாம்சங் சேட் 335. நல்ல ஒரு மெடாலிக் பிரேமுடன், கவர்ச்சிகரமான தோற்றத்தை இது கொண்டுள்ளது. இதில் உள்ள குவெர்ட்டி கீ போர்டில் அனைத்து கீகளையும் எளிதாகவும் லாவகமாகவும் கையாளலாம். நடுவில் இருக்கும் ஆப்டிகல் ட்ரேக் பேட் தளமும் பயன்படுத்த மிக வசதியாகவும், உடனுடக்குடன் தகவல் பெற்றுத் தரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
நெட்வொர்க்கிங் தளங்களுக்கு இணைப்பு பெற எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., மற்றும் வை-பி கை கொடுக்கின்றன. குறிப்பாக வை-பி வழி இணைப்பு மிக வேகமாகவும், சிரமம் எதுவும் இல்லாமலும் வழி நடத்துகிறது.
எம்பி3 மற்றும் எம்பி 4 பைல்கள் இயக்கப்படுகின்றன. எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. வழக்கமான ஆர்கனைசர், புளுடூத் மெசஞ்சர், வாய்ஸ் ரெகார்டர், ஸ்டாப் வாட்ச், டைமர், டிக்ஷனரி போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன.
2 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 36 மணி நேரத்திற்குத் தாக்குப் பிடிக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,800.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X