எதிரொலியின் கதை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2019
00:00

பஞ்சபுரி நாட்டில், ஒரு ராஜகுமாரி வசித்து வந்தாள். அவள் பெயர், ராகவி; தங்க நிற மேனி கொண்ட அழகி. சிரித்தபடியே இருப்பாள். அவளிடம் ஒரே ஒரு கெட்ட குணம் இருந்தது... எப்போதும் பேசியபடியே இருப்பாள்; நிறுத்தவே மாட்டாள். இதற்காக, அவளை பல முறை கண்டித்திருக்கிறார், அரசர். ஆனால், பழக்கம் மாறவில்லை.
ஒரு சமயம், அரண்மனைக்கு, ஒரு முனிவர் வந்திருந்தார். அவரை வரவேற்று, உபசரித்த அரசர், சில நாட்கள் அரண்மனையில் தங்கும் படி கேட்டுக் கொண்டார்.
நந்தவனத்தில், அவருக்கு தனியாக, ஒரு இடம் ஒதுக்கிக் கொடுத்த ராஜகுமாரி, தேவையான வசதிகளையும் செய்து தந்தாள். முனிவரிடம், எப்போதும் எதைப்பற்றியாவது பேசியபடியே இருப்பாள். அன்று, அவர் தவம் கலையும்படி பேசி விட்டாள்.
முனிவருக்கு கடும் கோபம் வந்து விட்டது.
''பேசிப் பேசி பிறருக்கு துன்பம் தருவதால், இனி, நீ நாட்டில் இருக்கக் கூடாது; பக்கத்திலுள்ள மலைக்காட்டிற்கு ஓடிப்போ. அது மட்டுமல்ல; இனி, நீ நினைத்ததைப் பேச முடியாமல், பிறர் பேச்சின், கடைசி வார்த்தையை மட்டும், திருப்பிச் சொல்லியபடி அலைந்து கொண்டிரு. உன்னை, யாராவது மணந்தால் தான் சாபம் தீரும்...'' என்று, சபித்தார்.
ராகவியின் வாய், 'சட்' என, அடைத்து விட்டது. முனிவரின் கடைசி வார்த்தையான, 'தீரும்... தீரும்...' என்பதை, இரண்டு தரம் சொன்னாள். நினைத்தைப் பேச வரவில்லை.
ராகவி கண்களில் நீர் வடிய, முனிவர் பாதங்களில் விழுந்தாள்.
''சாபம் கொடுத்தால் கொடுத்தது தான்; மாற்ற முடியாது...'' என்றார், கண்டிப்பாக.
ராகவியும், ''முடியாது... முடியாது...'' என்று சொல்லியபடியே, காட்டை நோக்கி ஓடினாள்; அங்கிருந்த, மலைச்சாரலில் சுற்றியபடியே இருந்தாள்.
மலை உச்சியில் நின்றபடி, காட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி. அப்போது, கீழே ஒற்றையடிப் பாதை வழியாக, ஒரு இளவரசன் வருவதைக் கண்டாள். ராகவிக்கு, எப்படியாவது அவனை மணக்கும் ஆசை ஏற்பட்டது.
மறைந்தபடியே, அவனை பின்தொடர்ந்தாள். யாரோ பின் தொடருவதாக, இளவரசனும் சந்தேகமடைந்து, ''யாரது...'' என்றான்.
ஓலமிட்டாள், ராகவி.
வியப்படைந்த இளவரசன், ''இப்படி வா என் முன்னால்...'' என்றான்.
இனி, மறைந்திருக்க கூடாது என்று உணர்ந்த ராகவி, ''முன்னால்... முன்னால்...'' என்று சொல்லியபடியே, அவன் முன் வந்து நின்றாள்.
அவளைக் கண்டதும், இளவரசனுக்கு கோபம் வந்தது. அவள் கேலி செய்வதாக எண்ணினான். அதனால், வெறுப்புடன் பார்த்தான். அவன் கால்களில் விழுந்து கெஞ்சினாள் ராகவி. அவளால் பேச முடியவில்லை; உண்மை காரணத்தை சொல்ல முடியவில்லை.
அவளை உதறித் தள்ளி நடந்தான் இளவரசன்.
வெகு துாரம் சென்றதும் ஒரு தெளிந்த நீரோடைக் கரையில் இளைப்பாற உட்கார்ந்தான். ஓடையைச் சுற்றி, மரங்கள் வளர்ந்திருந்தன. அந்த இடம் ஆனந்தமாக இருந்தது. அவனை தொடர்ந்து வந்த ராகவியும், அன்புக்கு ஏங்கியபடி, சிறிது துாரத்தில் உட்கார்ந்திருந்தாள்; அவன், அவளைக் கவனிக்கவில்லை.
தண்ணீர் குடிக்க குனிந்த இளவரசன், ஓடைக்குள் ஒரு அழகிய முகம் தெரிவதைக் கண்டு வியப்படைந்தான். சுருண்ட கருங்குழல்; அழகிய மூக்கு; வண்டு போன்ற கண்கள்... அவ்வளவு அழகிய உருவத்தை, அவன் கண்டதே இல்லை.
அது, ராகவியின் உருவ நிழல் தான் என்பது, தெரியாது. அந்த காலத்தில், இப்போது உள்ளது போல, கண்ணாடி கிடையாது. நிழலைக் கண்ட இளவரசன், 'அது யாரோ ஜல தேவதை' என்று எண்ணி, காதல் கொண்டான்.
''மேலே வா...'' என்று அழைத்தான். அந்த உருவத்தின் உதடுகள் அசைந்தன.
அதனால், தண்ணீருக்குள் கை நீட்டி நிழலுருவை அழைத்தான்; அவன் கை பட்டதும், நீர் கலங்கவே, உருவம் மறைந்து விட்டது. .
அன்று முழுவதும், ஓடைக்கரையிலே உட்கார்ந்திருந்தான். ஓடை நீர் தெளிந்ததும், உருவம் வரும்; இளவரசன், கெஞ்சி அழைப்பான்; பலன் இருக்காது என்று எண்ணினாள் ராகவி.
இரவு வந்தது; நிலா காய்ந்தது; நிலா வெளிச்சத்திலும் உருவம் நிழலாடியது.
ஓடைக்கரையில் காத்துக் கிடந்த இளவரசன், உணவு இன்றி, பலமிழந்து கொண்டிருந்தான்.
ராகவியும், அங்கிருந்து நகரவில்லை. அவன் இளைத்து, இறக்கும் நிலை அடைவதைக் கண்ட அவளுக்கு, அழுகை வந்தது; ஆனால், ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஒரு நாள் -
ஓடைக்கரையில் இளவரசன் இறந்து விட்டான். இறக்கும் தருவாயிலும் தண்ணீரில் நிழலைப் பார்த்தபடியே இருந்தான். ராகவிற்கு துக்கம் தாங்கவில்லை. மிகுந்த வருத்தத்தடன், 'யாராவது, என் அருகில் வந்து பேசினால், அவர்கள் பேச்சின் கடைசி வார்த்தையை ஓலமிடும் நான், இனி யார் கண்ணிலுமே படாமலிருக்க வேண்டும்...' என, நினைத்து மலைச்சரிவை நோக்கி ஓடினாள்.
பல நாட்கள் மலைகளில் ஒளிந்து சுற்றித் திரிந்தாள். இளவரசன் இறந்திலிருந்து, உணவைக் கூட மறந்து விட்டாள். சில நாளில் இறந்தும் போனாள்.
அவள் இறந்தாலும், அவள் ஆவி இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது! மலைப்பாங்கான இடத்தில் கத்தினால், துாரத்தில் எதிரொலிப்பதைக் கேட்பீர்களே... அது தான் ராகவி.
குட்டீஸ்.. நிழலைப் பார்த்து ஏமாறக்கூடாது; அறிவுடன் சிந்தித்து செயல்பட வேண்டும்.
- வாண்டுமாமா.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X